அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, April 25, 2010

சண்டேனா ஒண்ணு - 25.04.2010

ஒரு பொருளை விலை கொடுத்து வாங்குகிறோம். அந்தப் பொருளை விற்றவர் நம்மிடம் வந்து அந்தப் பொருளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று உபதேசம் செய்யும்போது நாம் சும்மா இருப்போமா? ஒரு வேளை அந்தப் பொருளை நாம் வீணாக்கி விட்டால் அவர் நம்மைத் திட்டுவதை நாம் விரும்புவோமா? "இதோ பார், எப்ப இந்தப் பொருளை நான் உன்னிடம் விலை கொடுத்து வாங்கிவிட்டேனோ, இது என் உடமை, உனக்கு கேள்வி கேட்க உரிமை கிடையாது" என்று கறாராகச் சொல்லுவோம் தானே? அதே போல், நாம் காசு வாங்கிக் கொண்டு கொடுத்த பொருளை ஒருவர் எப்படி உபயோகித்தாலும், அல்லது வீணாக்கினாலும் அது குறித்து நாம் கவலைப் படுவோமா, அப்படியே கவலைப் பட்டாலும் பொருளை வாங்கியவர் நம்மை லட்சியம் செய்வாரா?
மத்திய அமைச்சர் அழகிரி மக்களவைக்கு வராததைப் பற்றியோ, அவர் மக்களுக்குத் தன் ஜனநாயகக் கடமையைச் சரிவர ஆற்றவில்லை என்பதைப் பற்றியோ, விமரிசிக்க நமக்கு உரிமை இருக்கிறதா என்று யோசியுங்கள்.  எப்போது, காசும் கறியும் வாங்கிக் கொண்டு வோட்டு போட்டோமோ, அப்போதே அவர் தன் பதவியைக் கொண்டு நமக்கு நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்பை மூட்டை கட்டி விட வேண்டாமா? நான் காசு எதையும் வாங்க வில்லை, நான் அவருக்கே வோட்டு போடவில்லை என்று யாராவது கூறினால், அவருக்குச் சொல்கிறேன் "நீங்கள் அவரை இந்தப் பதவியில் அமர வைக்கவில்லை என்னும்போது அவரைக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை"

மொத்தத்தில் திருந்த வேண்டியது திருவாளர் பொதுஜனம் தானே தவிர, அரசியல்வாதிகளை இதில் குற்றம் சொல்லிப் பயனில்லை.

"காசுக்கு வோட்டு, மக்கள் உரிமைக்கு வேட்டு"
2 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

மங்குனி அமைச்சர் said...

//"நீங்கள் அவரை இந்தப் பதவியில் அமர வைக்கவில்லை என்னும்போது அவரைக் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை"
////


ரெண்டு பக்கமும் ஆப்பு வகிரிகளே

R.Gopi said...

காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டால் ஒரு எழவு கேள்வியும் இவனுங்கள கேட்க முடியாது...

வாழ்க பணநாயகம்....