அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, April 4, 2011

வாரச் சந்தை - 04.04.2011

தத்துவம் 

உழைப்பும் ஊக்கமும் இருந்தா எந்தத் தடை வந்தாலும் ஜெயிச்சுடலாம், டீம்ல ஸ்ரீசாந்த் இருந்தும் இந்தியா உலகக் கோப்பை ஜெயிச்ச மாதிரி 

பொன்மொழி 

யாராலும் சீண்டப் படாமல் தகரம் மாதிரி இருப்பதை விட, நெருப்பில் உருக்கி புடம் போடப் படும் தங்கம் மாதிரி சோதனைகளை சந்தித்து வெல்வதே வாழ்வின் சிறப்பு!

குவிஸ் 

ஒருவர் தோற்க வேண்டும் என்று முயற்சி செய்து தோற்று விட்டால் அவர் ஜெயித்து விட்டாரா, தோற்று விட்டாரா?


ஜோக் 

ஒரு மாமியாரும் மருமகளும் டாக்டரிடம் சென்றார்கள். மாமியாரை பரிசோதித்த டாக்டர் மருமகளை அழைத்து சொன்னார்:
"இதோ பாருங்க உங்க மாமியாருக்கு டென்ஷன் அதிகமா இருக்கு. இப்படியே போனா ஒரு மாசத்துல அவங்க இறந்துடுவாங்க, அதுனால நீங்க என்ன பண்றீங்க, அவங்களை எந்த வேலையும் செய்ய விடாதீங்க, அவங்ககிட்ட மரியாதையாவும் அன்பாவும் நடந்துக்குங்க, குறிப்பா அவங்க எப்பவும் சந்தோஷமா இருக்கற மாதிரி பாத்துக்குங்க!"
வீட்டுக்கு வந்ததும் கணவன் கேட்டான், "டாக்டர் எங்க அம்மாவோட உடல்நிலை பத்தி என்ன சொன்னாரு?"
மனைவி சொன்னாள்,"அதிக பட்சம் ஒரு மாசம்தான் உயிரோட இருப்பாங்க போலிருக்கு"

கவிதை

கவிதையாய்
இருக்கிறது 
கட்சிகளின் 
தேர்தல் அறிக்கை
கவிதைக்குப் 
பொய் அழகு
என்பது உண்மைதானோ!


12 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

பொன்மொழி

யாராலும் சீண்டப் படாமல் தகரம் மாதிரி இருப்பதை விட, நெருப்பில் உருக்கி புடம் போடப் படும் தங்கம் மாதிரி சோதனைகளை சந்தித்து வெல்வதே வாழ்வின் சிறப்பு!




...... Super!!!!!

Speed Master said...

வந்தேன் வாக்களித்து சென்றேன்

நாங்களும் கவிதை எழுதுவோம்

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_04.html

செல்வா said...

குவிச்கு விடை :

போட்டில அவர் ஜெய்ச்சிட்டார் ..

இம்சைஅரசன் பாபு.. said...

கவிதையாய்
இருக்கிறது
கட்சிகளின்
தேர்தல் அறிக்கை
கவிதைக்குப்
பொய் அழகு
என்பது உண்மைதானோ!//

இது ஜூப்பர் ...

Anonymous said...

மூணு ஓட்டு போட்டாச்சு

Anonymous said...

ஜோக் சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாமே நல்லாருக்குங்கோ.....

வெங்கட் said...

// கவிதைக்குப் பொய் அழகு
என்பது உண்மைதானோ! //

அப்ப.. கவிதைக்கு உண்மை அழகில்லையா..?

உங்கள் கவிதை அழகாயிருக்கிறது..
ஆனால் அதில் உண்மை தானே இருக்கு..!!

vasu balaji said...

ம்கும். பொய் வேறே. புளுகு மூட்டை வேறே:)) சந்தையில் சரக்குக்கு பஞ்சமில்லை.

cho visiri said...

//ஜெயித்து விட்டாரா, தோற்று விட்டாரா //

தோற்று, ஜெயித்து விட்டார்!

cho visiri said...

//ஜெயித்து விட்டாரா, தோற்று விட்டாரா //

தோற்று, ஜெயித்து விட்டார்!

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

http://sagamanithan.blogspot.com/

என்ன, பதிவைப் படிச்சீங்களா? பிடிச்சிருக்கா, சந்தோசம். பிடிக்கலையா, பரவாயில்லை. உங்கள் கருத்துகள் எதுவானாலும்,எங்கள் வளர்ச்சிக்கு தேவைதான். உங்கள் கருத்துகளை அங்கே எழுதவும், நன்றி! (இங்கு மட்டும்தான் காப்பி- அங்கே கிடையாது!)

http://sagamanithan.blogspot.com/