அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, April 13, 2011

பதிவர்கள் வோட்டுப் போடப் போனால்

பதிவர்கள் வாக்குச் சாவடியில்:

"அங்க என்னங்க தகராறு?"

"ஒரு பதிவர், மைனஸ் வோட்டு போட பட்டன் ஏன் இல்லைன்னு கேட்டுக் கத்திக் கிட்டிருக்காரு"

*****

"அந்தப் பதிவர் ஏன் கோபமா இருக்கார்?"

"வோட்டு மட்டும்தான் போட முடியுது, பின்னூட்டம் எழுத வசதி இல்லையாம்"

*****


"அந்தப் பதிவர் என்ன பிரச்சினை பண்ணினாரு?"

"காலையிலே ஒரு வோட்டு போட்டுட்டு மதியம் மறுபடியும் வோட்டுப் போடுவேன்னு சொன்னாரு, கேட்டா மீள்பதிவுன்னு சட்டம் பேசுறாரு"

****


தேர்தல் அலுவலர் ஒரு பதிவரிடம்: "மிஸ்டர், எத்தனை தடவை சொல்றது? நீங்கதான் முதல் வோட்டு போட்டிருக்கீங்க, அதுக்காக 'வடை எனக்கே'ன்னு ரிஜிஸ்டர்ல எழுதிட்டுப் போக அனுமதிலாம் கொடுக்க முடியாது"

*****

தேர்தல் அலுவலர் பதிவரிடம்: "இத பாருங்க, நீங்க மத்தவங்க கமெண்டுக்குப் பதில் எழுதியே பழகியிருக்கலாம், அதுக்காக, முன்னாடி இருக்கறவர் எந்த சின்னத்துக்கு வோட்டுப் போட்டாருன்னு தெரிஞ்சாதான் நீங்க வோட்டுப் போட முடியும்னு சொல்றது சரியில்லை"

****

"அந்த வேட்பாளர் ஏன் தோத்துப் போனார்?"

"பதிவுலக ஞாபகத்தில, வோட்டுக்காக நான் ஏங்கியதே இல்லைன்னு பிரசாரத்தில பேசிட்டாராம்"

*****

33 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்ல நகைச்சுவை

பொ.முருகன் said...

ஒட்டுப்போட்டப்பிறகும் அந்தப்பதிவர் ஓட்டுப்போட்ட இடத்திலேயே சுத்திக்கிட்டுயிருந்தார்.


அப்புறம் எப்படி அந்தஎடத்தவிட்டு அவரக்கிளப்புணீங்க

தலைவர் திரைக்கதை வசனம் எழுதிய படத்தப்போடப்போறோம்னு சொன்னதும் கிளம்பிப்போய்ட்டார்.

Madhavan Srinivasagopalan said...

ஒருவர் : அந்தப் பதிவருக்கு தமிழ்மணம், இன்ட்லி ரெண்டுலயுமே ஓட்டுப் போட்டு பழக்கமாம்..
மற்றவர் : அதனால..
முதலாமாபர் : இப்ப.. நாடாளுமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தினாதான் ரெண்டிற்கும்.. சேர்த்து ஓட்டுப் போடுவாராம்..

சி.பி.செந்தில்குமார் said...

>>>
தேர்தல் அலுவலர் ஒரு பதிவரிடம்: "மிஸ்டர், எத்தனை தடவை சொல்றது? நீங்கதான் முதல் வோட்டு போட்டிருக்கீங்க, அதுக்காக 'வடை எனக்கே'ன்னு ரிஜிஸ்டர்ல எழுதிட்டுப் போக அனுமதிலாம் கொடுக்க முடியாது"

ஹா ஹா டைமிங்க் காமெடி

Madhavan Srinivasagopalan said...

ஜோக்குலாம் நல்லா இருக்கு, பின்னூட்ட ஜோக்குகள் உட்பட...

TERROR-PANDIYAN(VAS) said...

சூப்பர் தல.... நல்ல Thinking... :))

அருண் பிரசாத் said...

ஹா ஹா ஹா....

செம

Chitra said...

"அந்தப் பதிவர் ஏன் கோபமா இருக்கார்?"

"வோட்டு மட்டும்தான் போட முடியுது, பின்னூட்டம் எழுத வசதி இல்லையாம்"


.....ha,ha,ha,ha,ha,ha.... Best one!

Nagasubramanian said...

//தேர்தல் அலுவலர் ஒரு பதிவரிடம்: "மிஸ்டர், எத்தனை தடவை சொல்றது? நீங்கதான் முதல் வோட்டு போட்டிருக்கீங்க, அதுக்காக 'வடை எனக்கே'ன்னு ரிஜிஸ்டர்ல எழுதிட்டுப் போக அனுமதிலாம் கொடுக்க முடியாது"//
ஹா ஹா

R.Gopi said...

தலைவா...

எனக்கு ஒரு டவுட்டு...

பொன்னர் சங்கர் படத்துக்கு உதவி வசனம் நீங்க தானா?

சரி...சரி... ஓட்டு போட்டாச்சா, இல்லையா, அத மொதல்ல சொல்லுங்க..

பெசொவி said...

@ ரஹீம் கஸாலி

thanks

@ B.MURUGAN

ha...ha...

பெசொவி said...

// Madhavan Srinivasagopalan said...
ஒருவர் : அந்தப் பதிவருக்கு தமிழ்மணம், இன்ட்லி ரெண்டுலயுமே ஓட்டுப் போட்டு பழக்கமாம்..
மற்றவர் : அதனால..
முதலாமாபர் : இப்ப.. நாடாளுமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தினாதான் ரெண்டிற்கும்.. சேர்த்து ஓட்டுப் போடுவாராம்..
//

top!

பெசொவி said...

@ சி.பி.செந்தில்குமார்

TERROR-PANDIYAN(VAS)

அருண் பிரசாத்

Chitra

வருகைக்கு நன்றி!

CS. Mohan Kumar said...

அண்ணே ஊர்ல இருக்கீங்களா ? ஒட்டு போட்டாச்சா? எங்க ஊரும் இப்போ மன்னார்குடி தொகுதிக்குள் வந்துடுச்சு..

பெசொவி said...

//R.Gopi said...

சரி...சரி... ஓட்டு போட்டாச்சா, இல்லையா, அத மொதல்ல சொல்லுங்க..

//

காலையிலேயே வோட்டு போட்டுட்டேன். ஆனா வடை கிடைக்கலை
:)

பெசொவி said...

// மோகன் குமார் said...
அண்ணே ஊர்ல இருக்கீங்களா ? ஒட்டு போட்டாச்சா? எங்க ஊரும் இப்போ மன்னார்குடி தொகுதிக்குள் வந்துடுச்சு..
//

ஜனநாயகக் கடமை ஆற்றிவிட்டேன், மோகன்!

cheena (சீனா) said...

சூப்பர் காமெடிய்யா - வி.வி.சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வெங்கட் said...

// அதுக்காக, முன்னாடி இருக்கறவர் எந்த
சின்னத்துக்கு வோட்டுப் போட்டாருன்னு
தெரிஞ்சாதான் நீங்க வோட்டுப் போட
முடியும்னு சொல்றது சரியில்லை //

ஹி., ஹி.., இது எதிர் பதிவு

karthikkumar said...

sema annaa ...:))

Anonymous said...

கலக்கலா இருக்குதப்பா

Anonymous said...

அனானி கமெண்ட் போடக்கூட வழியில்லையாம்

Madhavan Srinivasagopalan said...

//மோகன் குமார் said... 14

அண்ணே ஊர்ல இருக்கீங்களா ? ஒட்டு போட்டாச்சா? எங்க ஊரும் இப்போ மன்னார்குடி தொகுதிக்குள் வந்துடுச்சு.. //

நாகை பாராளுமன்றத் தொகுதியில் இருந்த மன்னையை தஞ்சை பாராளுமன்றத் தொகுதிக்கு மாற்றினார்கள் எனக் கேள்விப் பட்டேன்..
அதன் விளைவோ இது ? (நீடா - மன்னை சட்டமன்றத் தொகுதியில் தற்போது. -- முன்னர் வலங்கைமான் தொகுதியில் இருந்ததோ நீடா ? )

Madhavan Srinivasagopalan said...

// ஆர்.கே.சதீஷ்குமார் said...

அனானி கமெண்ட் போடக்கூட வழியில்லையாம் //

HA.. Ha.. Ha..

Unknown said...

கல கல காமெடி பதிவு
என் பங்குக்கு..
''பதிவுலக industryல இதெல்லாம் சாதாரணமப்பா"

வலிப்போக்கன் said...

தேர்தல்அலுவர். உங்க ஓட்டு போட்டதா
பதிவாயிருக்கே.
வாக்காளர். என்னது ஏ...ஓட்ட போட்டுடாங்களா.நா...இப்பத்தானே வர்ரேன்.

அமைதி அப்பா said...

பதிவர் படுத்துற பாடு தாங்க முடியல!

இங்கேயும் ஒரு பதிவர் என்ன பண்ணார் பாருங்க...

"என்ன அந்தப் பதிவர எல்லோரும் ஒரு மாதிரியாப் பார்க்குறாங்க?!"

"எத்தன ஒட்டு வாங்கினா ஜெயிக்கலாம்னு கேட்குறதுக்குப்
பதிலா, எத்தன ஒட்டு வாங்கினா
பிரபலமாகலாம்னு கேட்கிறார்!"

".....?!"

Prabu Krishna said...

சூப்பர்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சூப்பர் காமெடி...

நிரூபன் said...

"ஒரு பதிவர், மைனஸ் வோட்டு போட பட்டன் ஏன் இல்லைன்னு கேட்டுக் கத்திக் கிட்டிருக்காரு"//

வணக்கம், சகோ,பதிவர்களை வைச்சு, ஒரு யதார்த்த நகைச்சுவை..
ஹா..ஹா..

நிரூபன் said...

"வோட்டு மட்டும்தான் போட முடியுது, பின்னூட்டம் எழுத வசதி இல்லையாம்"//

அதற்குத் தானே, வாக்குப் பதிவு மட்டை இருக்கில்ல. அதுல எழுதினாப் போச்சு சகோ.

நிரூபன் said...

"பதிவுலக ஞாபகத்தில, வோட்டுக்காக நான் ஏங்கியதே இல்லைன்னு பிரசாரத்தில பேசிட்டாராம்"//

ஆஹா. ஆஹா.. நம்ம அனைவரையுமே அருமையாக கலாய்த்து விட்டீங்களே. நகைச்சுவைகள் அனைத்தும் பதிவர்களின் யதார்த்தத்தைக் கூறி நிற்கின்றன.

நாஞ்சில் பிரதாப் said...

hehhehehe...சூப்பர்....
முதல் ஓட்டைப்போட்டடவர் எனக்குத்ததான் வடைன்னு சொல்லிப்பாரோ...:))

இராஜராஜேஸ்வரி said...

பதிவுலக நகைச்சுவைக்குப் பாராட்டுக்கள்.