பொதுவாகவே ரஜினியின் படங்களை எல்லாம் ரசித்துப் பார்ப்பவன் நான்.
ஸ்ரீவித்யா ஒரு சிறந்த குணசித்திர நடிகை என்பதை இந்தப் படத்திலும் நன்றாக புரிய வைத்திருப்பார். கொடுமைக்கார மாமியாராகவும் திமிர் பிடித்த பணக்காரியாகவும் மிடுக்காக அவர் பேசும் வசனங்கள் சூப்பர்! கொஞ்ச நேரமே வந்தாலும் ஜெய்சங்கர் தன்னுடைய இயல்பான நடிப்பால் மனதில் நிறைந்து விடுவார். காமெடியுடன் கூடிய வில்லன்களாக வினு சக்கரவர்த்தி, நிழல்கள் ரவி, எஸ்.எஸ்.சந்திரன் கலக்கியிருப்பார்கள்.
வெறும் ஆடல் பாடலுக்கு மட்டும் பயன்படுத்தப் பட்டாலும் அமலா நன்கு பரிமளித்திருப்பார், இந்தப் படத்தில் சிரஞ்சீவி தயாரிப்பில் ஒரு சூப்பர் மசாலா படத்தை நமக்குத் தந்திருந்தார் இயக்குனர் ராஜசேகர்.
தொண்ணூறுகளில் ரஜினி படங்கள் என்றால் கூட்டம் அலை மோதிய நேரம் அது; ரஜினி மக்களைக் காந்தம் போல் ஈர்த்தவர். இதனாலேயே, "என்னோட ராசி நல்ல ராசி, அது எப்போதும் பெரியவங்க ஆசி" என்று அவருக்காகவே எழுதியதுபோல் ஒரு பாடல் இந்தப் படத்தில் வரும்.
மசாலாப் படங்களுக்கே உரிய முறையில் தங்கச்சி செண்டிமெண்ட், வீரம், காதல், சண்டை என்று சுவையான கலவையில் மக்களைக் கவர்ந்த படம், ரஜினி நடித்த மாப்பிள்ளை.
டிஸ்கி: இப்ப வந்த படத்தைப் பத்திப் பேசாம, பழைய படத்தைப் பத்தி எழுதிட்டேன்னு கோபிக்காதீங்க. போன வாரம் பூரா டிவி பாத்த எபக்ட் தான். ஜெயா டிவில பார்த்தா, வடிவேலு முன்னாடி ஜெயலலிதாவைப் பாராட்டினதைப் போட்டாங்க; கலைஞர் டிவில பார்த்தா, சரத்குமார் எப்பவோ கருணாநிதியைப் பாராட்டினதைப் போட்டாங்க. அதான், நானும் எப்பவோ பார்த்த மாப்பிள்ளை படத்தைப் பத்தி எழுதிட்டேன். ஹிஹி!
ஆனா ஒண்ணு, இப்ப வந்த படத்தோட ஸ்டில் ஒண்ணும் போட்டுட்டேன், ஓகேதானே?
10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
'மாப்பிள்ளை' ஓகேதான்..
மாப்பிள்ளையோட 'மாப்பிளைதான்' வேஸ்ட்டு..
சூப்பர்..
பழைய மாப்பிள்ளையே நல்லாருக்கார் இதுல புது மாப்பிள்ளை வேறு படுத்துறார்......நான் படத்தை சொன்னேன்ங்க....புது மாப்பிள்ளை நல்லாவே இல்லை
நல்லாருக்கு விமர்சனம்.....
நல்லாருக்கு விமர்சனம்.....
repeatu
படம் ரிலீசான மறுநாளே ஏன் மகனின் நண்பன் மூலம் செல்லில் படம் டவுன்லோட் செய்து பார்த்து விட்டார்கள். (செல்லை தூக்கி எறிய எல்லாம் இல்லை!!)
டிஸ்கி: இப்ப வந்த படத்தைப் பத்திப் பேசாம, பழைய படத்தைப் பத்தி எழுதிட்டேன்னு கோபிக்காதீங்க. போன வாரம் பூரா டிவி பாத்த எபக்ட் தான். ஜெயா டிவில பார்த்தா, வடிவேலு முன்னாடி ஜெயலலிதாவைப் பாராட்டினதைப் போட்டாங்க; கலைஞர் டிவில பார்த்தா, சரத்குமார் எப்பவோ கருணாநிதியைப் பாராட்டினதைப் போட்டாங்க. அதான், நானும் எப்பவோ பார்த்த மாப்பிள்ளை படத்தைப் பத்தி எழுதிட்டேன். ஹிஹி!
ஆனா ஒண்ணு, இப்ப வந்த படத்தோட ஸ்டில் ஒண்ணும் போட்டுட்டேன், ஓகேதானே?
.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம லொள்ளு!
// எத்தவேணும்னாலும் விலைக்கு வாங்கலாம்.. ஆனால் என்னைப் போல ஒரு ஆம்பிளை விலைக்கு வாங்க முடியாதுனு // தனுஷ் சொல்றாரு ... அப்படியாங்கண்ணே !!!
இரஜினியோட மாப்பிள்ளை படம் பெஸ்ட்... மாப்பிள்ளையோட மாப்பிள்ளை மகா வேஸ்ட். தப்பித் தவறியும் திருட்டு விசிடிலக் கூடப் பார்த்துப்புடாதீங்க....................... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!னை மாப்பிள்ளை
:-))
//மாப்பிள்ளை' ஓகேதான்..
மாப்பிள்ளையோட 'மாப்பிளைதான்' வேஸ்ட்டு..//
Good comment. But are you not afraid of "SuLLAAn"?.
Post a Comment