அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, May 11, 2011

தமிழகத் தேர்தலில் ஜெயிக்கப் போவது யார்?தமிழகத்தில் தேர்தல் நடந்ததும் அதில் சென்று நான் வோட்டுப் போட்டதும்  மறந்தே போய்விட்டது சில ஊடகங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியிடப் பட்டதும்தான் ஞாபகம் வந்தது.
சரி, இவர் ஜெயிப்பார் என்று சிலரும் அவர்தான் ஜெயிப்பார் என்று பலரும் சொல்கிறார்கள். என்னை பொறுத்தவரை கருத்துக் கணிப்புகளை நான் என்றுமே மதித்து கிடையாது. (என்னை யாரும் மதித்ததே கிடையாது என்பதும் உண்மைதான்) 

போகட்டும். பொதுவாகவே மக்களின் மனநிலை என்பதே சில விஷயங்களில் முன்கூட்டித் தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருப்பதுதான்.  என்னதான் பின்னாளில் தெரிய வரும் என்றாலும், முன்கூட்டியே தெரிந்து கொள்வதில் ஒரு கிக் இருக்கிறது.  இதை ஊடகங்கள் வியாபாரமாக்குகின்றன; அதைக் குறை சொல்ல முடியாது.

நான் என் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் பேசியதில் ஒரு விஷயம் தெரிந்தது. அதன் மூலம் இந்தத் தேர்தலில் தமிழக முதல்வராக யார் வரக் கூடும் என்பதையும் துல்லியமாகக் கணிக்க முடிந்தது.அதை உங்களிடமும் தெரிவிக்க விரும்புகிறேன்.

பெரும்பாலான மக்கள் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது நான் கீழ்க் கண்ட முடிவுக்கு வந்தேன்.

தமிழக சட்டசபையில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கின்றன. ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள் 118. அப்படி பார்க்கும்போது இந்த அளவுக்கு இடங்கள் பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும்.

- தொடரும்.

டிஸ்கி: என்னடா, பதிவை முடிக்க வில்லையே என்று வருந்த வேண்டாம். தமிழகத் தேர்தலில் யார் ஆட்சி அமையப் போகிறது என்பதை அடுத்தப் பதிவில் கூறிவிடுகிறேன்.......................இரண்டே நாட்களில்.......ஹிஹி! 

6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

மனோவி said...

ஒருத்தர் மோசம்.
இன்னொருத்தர் ரொம்ப மோசம் என்று இப்போது சொல்கிறோம்

ஐந்து வருடத்திற்கு முன்பும் தான் இதையே தான் சொன்னோம்..

இதற்கு பெயர் தான்

"Interchange"

Speed Master said...

ஹி ஹி எனக்கு தெரியும்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

This election like a delivery because we want to know our cm is male or female

Chitra said...

என்னடா, பதிவை முடிக்க வில்லையே என்று வருந்த வேண்டாம். தமிழகத் தேர்தலில் யார் ஆட்சி அமையப் போகிறது என்பதை அடுத்தப் பதிவில் கூறிவிடுகிறேன்.......................இரண்டே நாட்களில்.......ஹிஹி!.....super idea! :-))))))))

வெங்கட் said...

// தமிழகத் தேர்தலில் யார் ஆட்சி அமையப்
போகிறது என்பதை அடுத்தப் பதிவில்
கூறிவிடுகிறேன் //

ஆமா இவரு பெரிய கவர்னரு..
ரிசல்ட் வந்தப்புறம் யார்
ஆட்சி அமைக்கணும்னு இவரு தான்
முடிவு பண்ணுவாரு..!!

Madhavan Srinivasagopalan said...

// ஆமா இவரு பெரிய கவர்னரு..
ரிசல்ட் வந்தப்புறம் யார்
ஆட்சி அமைக்கணும்னு இவரு தான்
முடிவு பண்ணுவாரு..!! //

தொங்கு சட்டசபை சூழ்நிலை வந்தால்..
யாரு சி.எம்னு -- அவ்ளோ ஈசியா எவராலும் சரியாக சொல்ல முடியாது..