அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, May 28, 2011

ஆசிரியரின் விஞ்ஞான அறிவு!


Wacky Science Teacher Doing a Lab Experiment

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான ஒருவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது நடந்தது இது.
 
அன்று பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருந்தது.  . தேர்வு எழுதும் மாணவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்த அந்த அறையின்  கண்காணிப்பாளர் அறை முழுவதும் நடந்து வந்தபோது சட்டென்று ஒரு மாணவனை எழுப்பினார். 

"ஏன்டா, முன்னாடி இருக்கற பையனைப் பார்த்துக் காப்பி அடிக்கிறே?" என்று கேட்டார்.

அந்த மாணவன் விழித்தான், "இல்ல, சார், நான் காப்பி அடிக்கவே இல்லை" என்று சொன்னான், ஆனால் கண்காணிப்பாளர் அதை நம்பத் தயாராக இல்லை. அவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவர் பிடிவாதமாக இருந்தார். 

அந்த நேரத்தில் பறக்கும் படை அங்கே வந்தது. அந்தப் படையில் இருந்த ஒருவரிடம்  இந்த மாணவனைக் காண்பித்து, "சார், இவன் முன்னாடி இருக்கற பையனைப் பார்த்துக் காப்பி அடிக்கிறான்" என்றார்.

அவர் உடனே அந்த மாணவனின் விடைத்தாளைப் பார்த்தார்.

"என்ன சார் சொல்றீங்க? இவனோட பேப்பர்ல எதுவுமே எழுதலையே?" என்று கேட்டார் வந்தவர்.

கண்காணிப்பாளர் பளிச்சென்று சொன்னார், "அதேதான் சார். அங்க பாருங்க முன்னாடி இருக்கற பையனோட பேப்பரிலேயும் எதுவும் எழுதலை, அப்ப அவனைப் பார்த்து இவன் காப்பி அடிசிருக்கான்னுதானே அர்த்தம், எப்படி கண்டுபிடிச்சேன், பார்த்தீங்களா?" என்றார் பெருமையாக. 

டிஸ்கி: இந்த அறிவாளியான ஆசிரியர், வெங்கட்டா, போலீசா, டெரரா என்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்! 

18 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வடை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ரொம்ப நல்ல வாத்தியார்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அவரா நீங்க ....?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
டிஸ்கி: இந்த அறிவாளியான ஆசிரியர், வெங்கட்டா, போலீசா, டெரரா என்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்!
///

எனக்கு தெரியும் ...

இம்சைஅரசன் பாபு.. said...

அந்த ஆசிரியர் கண்டிப்பா நம்ம கோமாளி செல்வா வாக தான் இருப்பாரு

ஷர்புதீன் said...

ha ha ha

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரொம்ப நல்ல வாத்தியார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அந்த ஆசிரியர் கண்டிப்பா நம்ம கோமாளி செல்வா வாக தான் இருப்பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
டிஸ்கி: இந்த அறிவாளியான ஆசிரியர், வெங்கட்டா, போலீசா, டெரரா என்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்!
///

எனக்கு தெரியும் ...

TERROR-PANDIYAN(VAS) said...

ஆசிரியர் செல்வா வாழ்க... :)

cho visiri said...

A scene (read, "dialogue") from "engaL thanga Raajaa" starring Sivaji Nagesh et al;-

Nagesh (or some one else seated at the front row) would be writing some thing in his paper. Nagesh (or the other person) would attempt to copy. The person at the front row would
tell the other that there was no use in copying his answer, for he was only writing Ramajayam. To this Nagesh (or the other person) would gently quip that it was not Ramajayam, but his name Ramanujam that was being written on the answer sheet!

May be narration may not bring out laugh from the reader, but, I am certain, those who happen to see the scene would not help laughing aloud.

வெங்கட் said...

// இந்த அறிவாளியான ஆசிரியர், வெங்கட்டா,
போலீசா, டெரரா என்ற கேள்விகளுக்கெல்லாம்
நான் பதில் சொல்ல மாட்டேன்! //

ஆனாலும் நீங்க என்னை ரொம்ப
புகழ்றீங்க..!!

middleclassmadhavi said...

இப்படித்தான் white paper வேண்டிய ஒரு ஆளை xerox machineல் எடுத்துக்கச் சொன்னவுடன், ஒரு வெற்றுத் தாளை copy எடுத்தாராம்!!

பெசொவி said...

//வெங்கட் said...

ஆனாலும் நீங்க என்னை ரொம்ப
புகழ்றீங்க..!!
//
இப்படி சொல்றதுதான் புகழ்ச்சின்னா, உங்க அறிவு என்னை மெய் சிலிர்க்க வைக்குது

பெசொவி said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
வடை
//

முத முதல்ல நம்ம கடைப் பக்கம் வந்திருக்கீங்க, வடை பாயசம் எல்லாம் உங்களுக்குத்தான்!

பெசொவி said...

//இம்சைஅரசன் பாபு.. said...
அந்த ஆசிரியர் கண்டிப்பா நம்ம கோமாளி செல்வா வாக தான் இருப்பாரு
//

VAS மொத்தமும் செல்வா மாதிரிதான, பாபு?

Yoga.s.FR said...

ஏய்யா வட,வடைன்னு அலையிறீங்க?வடையில ஏன் ஓட்டை இல்லேன்னு ஒருத்தரு!விஞ்ஞான வெளக்கம் குடுக்கிறாரு இன்னொருத்தரு!எனக்குத் தான் மொத வடைங்கிராரு இன்னொருத்தரு!

ஸ்ரீராம். said...

Aahaa.....!