அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, July 11, 2011

வாரச் சந்தை - 11.07.2011

தத்துவம்
நீங்களே வேணாம்னாலும், விதி உங்ககிட்ட விளையாடத் தான் செய்யும் - நேத்து நான் போன பஸ்ல "சுறா" படம் போட்டா மாதிரி!

பொன்மொழி 
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே தவிர, தம்மை ஒருபோதும் மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை - லியோ டால்ஸ்டாய் ரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள
ஜோக்

ஜான் டாக்டரிடம் வந்து "டாக்டர், என் மனைவிக்கு சரியாவே காது கேக்க மாட்டேங்குது, எதையும் ரெண்டு தடவை கேட்டாதான், பதில் சொல்றா"

டாக்டர் ,"முதல்ல ஒரு பதினஞ்சு அடி தூரத்துலேர்ந்து கேளுங்க, அப்புறம் ஒரு பத்து அடி தள்ளி நின்னுகிட்டு கேளுங்க, அப்புறம் அஞ்சு அடி, அப்புறம் ஒரு அடி தள்ளி நின்னு கேளுங்க, அப்புறம் என்கிட்டே வந்து சொல்லுங்க, அப்போதான் ட்ரீட்மென்ட் பத்தி யோசிக்க முடியும்" என்று சொன்னார்.

வீட்டுக்கு வந்த ஜான் பதினஞ்சு அடி தள்ளி நின்றுகொண்டு  "டிபன் என்ன செய்யப் போறே?" என்றான். பதில் இல்லை, பாத்து அடி தள்ளி நின்றுகொண்டு  ."டிபன் என்ன செய்யப் போறே?" என்றான். பதில் இல்லை, அஞ்சு அடி கிட்ட வந்து "டிபன் என்ன செய்யப் போறே?" என்றான் பதில் இல்லை, ஒரு அடி தூரத்தில் நின்றுகொண்டு "டிபன் என்ன செய்யப் போறே?" என்று இரைந்து கேட்டான்.

மனைவி சொன்னாள், "நாலாவது தடவையா சொல்றேன், சப்பாத்தி செய்யப் போறேன்".நி


கேள்வி

அப்படி ஒன்னு இருந்ததே இல்லை, யாரும் பார்த்ததும் இல்லை, இருந்தாலும் நிச்சயம் இருக்கு. அது என்ன?

Answer: நாளை (Tomorrow)
(பதிலே அதுதான்பா!)

கவிதை 
என் மூளையின்
ஒவ்வொரு செல்லிலும் 
நிறைந்துவிட்டாய்
நீ
இல்லாத நாளை
நினைத்துக் கூடப் 
பார்க்க முடியவில்லை
என் உயிர் நீ,
என் இயக்கம் நீ
என் எல்லாமும் நீ
என் இனிய
இண்டர்நெட்டே!

15 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

கௌதமன் said...

Good.

rajamelaiyur said...

நல்ல பதிவு

rajamelaiyur said...

காலை வணக்கம்

இம்சைஅரசன் பாபு.. said...

//மனைவி சொன்னாள், "நாலாவது தடவையா சொல்றேன், சப்பாத்தி செய்யப் போறேன்//

ஹ ..ஹா ...

CS. Mohan Kumar said...

பெயர் சொல்ல விருப்பமில்லைன்னு சொல்லிட்டு இந்த பதிவில் உங்க பேரை சொல்லிட்டீங்களே ஜான் !

Madhavan Srinivasagopalan said...

// ஒரு அடி தூரத்தில் நின்றுகொண்டு "டிபன் என்ன செய்யப் போறே?" //

Lucky fellow..
(ஒரு) அடி (லேருந்து) தப்பிச்சிட்டாரே !

பெசொவி said...

@ MOhankumar //பெயர் சொல்ல விருப்பமில்லைன்னு சொல்லிட்டு இந்த பதிவில் உங்க பேரை சொல்லிட்டீங்களே ஜான் !//

எந்தப் பதிவிலேயும் உங்களைக் காட்டிக் கொடுக்க விருப்பமில்லை, மோகன்! அதுனாலதான் பேரை மாத்தி ஜான்னு எழுதினேன்!
:)

TERROR-PANDIYAN(VAS) said...

உங்க தத்துவத்ம் / கவிதைக்காக் மட்டும் ஓட்டு போட்டேன்... அது மட்டும் தான் சொந்த சரக்கு.. :)

பெசொவி said...

@ Terror
//உங்க தத்துவத்ம் / கவிதைக்காக் மட்டும் ஓட்டு போட்டேன்... அது மட்டும் தான் சொந்த சரக்கு.. //

அது தத்துவத்ம் இல்லீங்கோ, தத்துவம், சொல்லுங்க த...த்...து...வ..ம்
:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நேத்து நான் போன பஸ்ல "சுறா" படம் போட்டா மாதிரி!////////

சுறா பாத்துட்டீங்களா...? கவலைப்படாதீங்க, இனி எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் சமாளிச்சிடுவீங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டாக்டர் ,"முதல்ல ஒரு பதினஞ்சு அடி தூரத்துலேர்ந்து கேளுங்க, அப்புறம் ஒரு பத்து அடி தள்ளி நின்னுகிட்டு கேளுங்க, அப்புறம் அஞ்சு அடி, அப்புறம் ஒரு அடி தள்ளி நின்னு கேளுங்க, அப்புறம் என்கிட்டே வந்து சொல்லுங்க, அப்போதான் ட்ரீட்மென்ட் பத்தி யோசிக்க முடியும்" என்று சொன்னார்./////////

இவரு ட்ரீட்மெண்ட்டு குடுக்குற டாக்டரா? இல்ல பட்டம் வாங்குன டாகுடரா?

எஸ்.கே said...

கவிதை ஜோக் பொன்மொழி நல்லா இருந்தது!

வெங்கட் said...

// நீங்களே வேணாம்னாலும், விதி உங்ககிட்ட விளையாடத் தான் செய்யும் //

உண்மை..!
இல்லன்னா இப்ப நான் உங்க பிளாக்
பக்கம் வந்து இருப்பேனா..?

அருண் பிரசாத் said...

ஜோக் சூப்பர் பெ சொ வி

R.Gopi said...

ஆஹா...

வழக்கம் போல் வாரச் சந்தை களைகட்டி விட்டதே தல...

உங்களின் இந்த தத்துவம் (நீங்களே வேணாம்னாலும், விதி உங்ககிட்ட விளையாடத் தான் செய்யும்) பார்த்தேன்... இந்த வாரம் ட்ரை பண்ணினா குருவி, வேட்டைக்காரன் ரெண்டுல ஏதாவது ஒரு படம் பார்க்க வாய்ப்பு இருக்கிறது...