அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, July 21, 2011

இண்டர்வியூ மாட்டிபிகேஷன்

 வெங்கட் இன்டர்வியூவுல சமாளிக்கிறது எப்படின்னு சொல்லியிருக்காரு இதைப் படிச்சுட்டு யாராவது நீங்க நடத்தற இண்டர்வியூவுக்கு வந்துட்டா அவங்களை எப்படி சமாளிக்கிறது? 

அது Very Simple..

If they can pressurise you,
you can terrorise them!
அதாவது எப்படியாவது அவங்களை "தெரியாது"ன்னு சொல்ல வச்சிடணும், இப்படி!

Question No.1 :

நீங்க: " அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "

அவரு :" அலக்சாண்டர் குதிரை பேரா..?

அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!

வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?

இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?

இப்ப நீங்க : அதெல்லாம் இல்லை, குள்ளமா சிவப்பு கலர்ல வெள்ளை வாலோட கண்ணுக்குக் கீழே பழுப்பு மச்சம் இருந்துச்சே,அந்த குதிரை பேர் என்ன?

Question No.2 : 
நீங்க: " பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "

அவரு : அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .

Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..

இப்ப நீங்க: sorry, clockwiseனு சொன்னது பெர்னாண்டோ ஆல்ப்ஸ், anti-
clockwiseசொன்னது யாரு, அதான் கேள்வி!

Question No 3 :

" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "

" அறிவுடை நம்பி கலியபெருமாள்..! "

இப்ப நீங்க: அவரு தமிழ்நாட்டுல வளர்ந்தவரு, கர்நாடகாவுல பொறந்தாரு, நான் கேட்டது தமிழ்நாட்டுல பொறந்த சுதந்திர போராட்ட வீரர் பேரைத்தான்!

Question No 4 :

நீங்க :" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "

அவரு : " நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "

இப்ப நீங்க : நாளைக்கு யாரு, அதான் கேள்வி!

இதெல்லாம் பத்தலைனா, இருக்கவே இருக்கு, ஒரு அதிரடி கேள்வி இப்படி -

இப்ப சமீபத்துல நடந்த மும்பை வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துல ஈடுபட்ட தீவிரவாதிகள் பேரு என்ன?
"தெரியாதுன்னு சொன்னா, வேலை காலி, 
தெரியும்னு சொன்னா, ஆளே காலி (அரெஸ்ட் தான்!)


15 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

எஸ்.கே said...

கடைசி ட்விஸ்ட் சூப்பர்!:-)

Madhavan Srinivasagopalan said...

இண்டர்வியூவில பாஸ் பண்ணா..
அப்புறம் அவுடர்வியூ வெப்பாங்களோ ?

-----
and by the by..
'inter' is very different from 'inner'.

'Outer' is antonym for 'inner' only.. not for 'inter'.

பெசொவி said...

//Madhavan Srinivasagopalan said... 2
இண்டர்வியூவில பாஸ் பண்ணா..
அப்புறம் அவுடர்வியூ வெப்பாங்களோ ?//

பெயில் ஆனாதான் "அவுட்"டர் வியூ

கௌதமன் said...

enter view, inter view, elevation, end view.

rajamelaiyur said...

Good question and answer

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி நல்ல கேள்வி பதில்.....!!!

அனு said...

ஹாஹா. கலக்கல்..
கடைசி கேள்விக்காகவே ஆயிரம் ஓட்டு போடலாம்.. ஆனா, இண்டலி விட மாட்டேன்னு.. :)

பெசொவி said...

//அனு said...
ஹாஹா. கலக்கல்..
கடைசி கேள்விக்காகவே ஆயிரம் ஓட்டு போடலாம்.. ஆனா, இண்டலி விட மாட்டேன்னு.. :)
//

கை வசம் நாலஞ்சு வோட்டு வச்சிருக்கணும், நம்ம வெங்கட் மாதிரி! (ஆனா அவர் போஸ்டுக்கு மட்டும்தான் அந்த வோட்டை யூஸ் பண்ணிக்குவார்)

பெசொவி said...

// kggouthaman said...
enter view, inter view, elevation, end view.
//

Good review

வெங்கட் said...

// சமீபத்துல நடந்த மும்பை வெடிகுண்டு வெடிப்பு
சம்பவத்துல ஈடுபட்ட தீவிரவாதிகள் பேரு என்ன?
"தெரியாதுன்னு சொன்னா, வேலை காலி,
தெரியும்னு சொன்னா, ஆளே காலி (அரெஸ்ட் தான்!) //

ஆசை.. ஆசை.. எங்ககிட்ட Training
எடுத்திருந்தா இப்படியா பதில்
சொல்லுவாங்க..?

டக்னு... சவுத் மும்பையா.?
நார்த் மும்பையான்னுல்ல கேப்பாங்க..!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா ஹா சிரிச்சேன்

தமிழ்வாசியில் இன்று:
அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்தக் கடைசி கேள்விதான் வெங்கட்டுக்கு சரி......... (அப்புறம் அவரு வருத்தப்படும் வாலிபர் சங்கத்துக்குத்தான் தலைவரா இருப்பாரு)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
// சமீபத்துல நடந்த மும்பை வெடிகுண்டு வெடிப்பு
சம்பவத்துல ஈடுபட்ட தீவிரவாதிகள் பேரு என்ன?
"தெரியாதுன்னு சொன்னா, வேலை காலி,
தெரியும்னு சொன்னா, ஆளே காலி (அரெஸ்ட் தான்!) //

ஆசை.. ஆசை.. எங்ககிட்ட Training
எடுத்திருந்தா இப்படியா பதில்
சொல்லுவாங்க..?

டக்னு... சவுத் மும்பையா.?
நார்த் மும்பையான்னுல்ல கேப்பாங்க..!//////

இங்க ட்ரைனிங் எடுத்தவங்க,நடுமும்பைன்னு சொல்லுவாங்க....அப்ப என்ன செய்வீங்க.. அப்ப என்ன செய்வீங்க...?

settaikkaran said...

முத்தாய்ப்பா சொல்லியிருக்கிறது அதிரடி! வேடிக்கைன்னாலும் உண்மையும் கூட!

cho visiri said...

//"தெரியாதுன்னு சொன்னா, வேலை காலி,
தெரியும்னு சொன்னா, ஆளே காலி (அரெஸ்ட் தான்!)//

I burst into laughter. Good piece.

Lovely.