அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, July 12, 2012

பல கேள்விகளுக்கு ஒரே பதில்

கேள்விகள்
1. இப்போ "டைம்" என்ன ஆச்சு?

2. நான்கு திசைகள் என்னென்ன?

3. ஒரு ஐஸ்-கிரீம் இருபது ரூபாய். அப்போ இருபது ஐஸ்-கிரீம் என்ன விலை?

4. வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் பொருள் என்ன?

இந்த நான்கு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான் அது
"ஆளை விடுப்பா சாமி!"

ஆச்சரியமா இருக்கா? Ctrl+a போட்டு கீழே படிங்க. யார்கிட்ட இந்த கேள்விய கேட்டாங்கன்னு புரியும்.

முதல் கேள்வி கேட்டது மன்மோகன் சிங் கிட்ட 
ரெண்டாவது கேள்வி கேட்டது கருணாநிதிகிட்ட 
மூணாவது கேள்வி கேட்டது சிதம்பரம் கிட்ட 
நாலாவது கேள்வி கேட்டது கர்நாடக பிஜேபி காரங்ககிட்ட 

3 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

கௌதமன் said...

1. இப்போ "டைம்" என்ன ஆச்சு?
இப்போ டைம்ஸ் ஆப் இந்தியா என்ன ஆச்சு?

2. நான்கு திசைகள் என்னென்ன?
இங்கே போய் பாருங்க!

3. ஒரு ஐஸ்-கிரீம் இருபது ரூபாய். அப்போ இருபது ஐஸ்-கிரீம் என்ன விலை?
இருங்க இருங்க - இலவச ஐஸ்க்ரீம் திட்டம் அடுத்த தேர்தலுக்கு வந்துவிடும்!

4. வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் பொருள் என்ன?
பேனா மை, கண் மை, வாய் மை (லிப்ஸ்டிக்) தவிர்த்து, வேற்று மையில் ஒற்றி எடுக்கப்பட்ட மை போலிருக்கு!

Madhavan Srinivasagopalan said...

என்னடா பிளாக் இது..
1)போஸ்டுக்கு, கமெண்டுக்கு ஒரு 'லைக்' போட முடியல..
2)இந்தப் போஸ்ட ஷேர் பண்ண முடியல..
3)யாராவது கமெண்டு போட்டா, நோடிபிகேஷன் வர்றதில்ல..
# புஸ்தகத்துல முகத்த முடிக்கிட்டா வேற எதுவுமே தெரியாதோ ?

தனிமரம் said...

ஐஸ்கிரீம் விலையா?? சத்தியமா தெரியாது அண்ணாச்சி!:))