அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, November 28, 2009

பிடித்த பத்தும், பிடிக்காத பத்தும்.

நண்பர் கேபிளார் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து.

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

5.இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.


1.அரசியல்வாதி
பிடித்தவர் : இன்னும் பிறக்கவில்லை

பிடிக்காதவர்: இன்னும் சாகலிங்கோ.

2. நடிகர்

பிடித்தவர் : சிவாஜி அல்ல (அவர் எங்கே நடித்தார்...............வாழ்ந்தல்லவா காண்பித்தார்)

பிடிக்காதவர் : ..........(சாரி, லிஸ்ட் கொஞ்சம் பெரிசு)

3. நடிகை

பிடித்தவர் : ..............(மனைவிகிட்ட மாட்டிக்க மாட்டேனே!)

பிடிக்காதவர் : பழம்பெரும் நடிகைகள் தவிர எல்லோருமே.

4. இயக்குனர்:

பிடித்தவர் : நிகழ்காலம் : பாலச்சந்தர்/பாக்கியராஜ் எதிர்காலம் : கேபிள் ஷங்கர் (ஜால்ரா இல்லீங்கோ.....)

பிடிக்காதவர் : டி. ஆர். (அவர் இயக்குனர் லிஸ்ட்ல இருக்காருல்ல.....?)

5. கவிஞர்

பிடித்தவர் : ஹி...ஹி... தன்னடக்கம் தடுக்குது.

பிடிக்காதவர் : நவரத்தினங்களில் இரண்டு சேர்ந்துள்ளவர்

6. எழுத்தாளர்

பிடித்தவர் : பட்டுகோட்டை பிரபாகர்

பிடிக்காதவர் : யாருமில்லை

7. இசையமைப்பாளர்

பிடித்தவர் : என்றென்றும் எம்.எஸ்.வி.

பிடிக்காதவர்: தேவா (ஒரிஜினல் கம்மி என்பதால்)

8. டி.வி. சானல்:

பிடித்தது : பொதிகை

பிடிக்காதவர் : போட்டி சானல்கள் எல்லாமே.

9. காமெடியன்:

பிடித்தவர் : மருத்துவர் (காமெடியன் சினிமாவுல மட்டும்தான் இருக்கணுமா?)

பிடிக்காதவர் : இப்போதைய விவேக்

10. பதிவர்

பிடித்தவர் : நம்ம பதிவைப் படிக்கும் எல்லோருமே.

பிடிக்காதவர் : பதிவைப் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம ஓடுறார் பாருங்க.......அவர்தான்!

ஒரு நாலு பேரை நான் கூப்பிடணுமாம்..

டோண்டு

படுக்காளி

அடலேறு

எடக்குமடக்கு

15 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

நாஞ்சில் பிரதாப் said...

//பிடித்தவர் : சிவாஜி அல்ல (அவர் எங்கே நடித்தார்...............வாழ்ந்தல்லவா காண்பித்தார்//


உம்மோட நக்குலுக்கு ஒரு அளவே இல்லயாவோய்...

Anonymous said...

நண்பரே தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றிகள். ஆனால் பாருங்க நண்பரே சில நடை முறை சிக்கல்கள் இருப்பதால் என்னால் இதில் கலந்துகொள்ள இயலாது. தவறாக நினைக்க வேண்டாம் தோழா.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//adaleru said...
நண்பரே தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றிகள். ஆனால் பாருங்க நண்பரே சில நடை முறை சிக்கல்கள் இருப்பதால் என்னால் இதில் கலந்துகொள்ள இயலாது. தவறாக நினைக்க வேண்டாம் தோழா.
//

எனக்குத் தோன்றியது, உங்களை அழைத்தேன், பரவாயில்லை, இதில் தப்பாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது? தோழமைக்குள் வருத்தம் தெரிவிப்பது ஒரு முரண் என்றே நான் நினைக்கிறேன்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நாஞ்சில் பிரதாப் said...
//பிடித்தவர் : சிவாஜி அல்ல (அவர் எங்கே நடித்தார்...............வாழ்ந்தல்லவா காண்பித்தார்//


உம்மோட நக்குலுக்கு ஒரு அளவே இல்லயாவோய்...
//
எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான், தல!

shortfilmindia.com said...

பிடித்தவர் : நிகழ்காலம் : பாலச்சந்தர்/பாக்கியராஜ் எதிர்காலம் : கேபிள் ஷங்கர் (ஜால்ரா இல்லீங்கோ....//

மிக்க நன்றி தலைவரே.. உங்களை போன்ற நண்பர்களின் எண்ணங்களின் உந்துதலால் சீக்கிரம் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி

அது சரி.. பிடித்த கவிஞர் பதிலை ரசித்தேன்.. பின்னே நாம எழுதினதை நாமளே ரசிக்கலைன்னா வேற யாருதான் ரசிப்பாங்க..:)

கேபிள் சங்கர்

பிரியமுடன்...வசந்த் said...

//பிடிக்காதவர்: இன்னும் சாகலிங்கோ.//

ரசித்தேன் தல

maddy73 said...

"1.அரசியல்வாதி
பிடித்தவர் : இன்னும் பிறக்கவில்லை
பிடிக்காதவர்: இன்னும் சாகலிங்கோ."
-------> Fantastic

"3. நடிகை
பிடித்தவர் : ..............(மனைவிகிட்ட மாட்டிக்க மாட்டேனே!)
பிடிக்காதவர் : பழம்பெரும் நடிகைகள் தவிர எல்லோருமே."
----> ஒரு படத்தில, ஒரு நடிகை, மார்க்கெட்ல பழம் வாங்குவாங்களே! (பழம் பெரும்) -- அவங்களை பிடிக்குமோ?

"4. இயக்குனர்:
பிடிக்காதவர் : டி. ஆர்.(அவர் இயக்குனர் லிஸ்ட்ல இருக்காருல்ல.....?) "
---> பிடிக்காதவர் லிஸ்ட்ல, இவர் அனைத்து category யிலும் (except Sl# 3, 8 & 10 )வரத் தகுதியானவர், என்பது எனது தாழ்மையான கருத்து.

"5. கவிஞர்
பிடிக்காதவர் : நவரத்தினங்களில் இரண்டு சேர்ந்துள்ளவர"
---->உங்கள் நவரத்ன மோதிரத்தில (போடுபவராக இருந்தால்) 7 ரத்னம் தான உள்ளதாமே?

"9. காமெடியன்:
பிடிக்காதவர் : இப்போதைய விவேக்"
Well said.. No 2nd opinion on this.

"10. பதிவர்
பிடித்தவர் : நம்ம பதிவைப் படிக்கும் எல்லோருமே."
--->படிக்கற எல்லோருமே பதிவர்களாக இருக்க அவசியமில்லையே?
பிடிக்காதவர் : பதிவைப் படிச்சுட்டு பின்னூட்டம் போடாம ஓடுறார் பாருங்க.......அவர்தான்!"
--- Understood ur point.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Thanks maddy.
//ஒரு படத்தில, ஒரு நடிகை, மார்க்கெட்ல பழம் வாங்குவாங்களே! (பழம் பெரும்) -- அவங்களை பிடிக்குமோ?//

i like your spelling mistake.

அன்புடன் மலிக்கா said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணக்கட்டுதே, என்னா ஒரு நக்கலு. இருந்தாலும் பதிவு கலகட்டுது..

cho visiri said...

enjoyed the post.
(I do not want to be included in the Pidikkadavar list and that is why this feed back.)

R.Gopi said...

பத்துக்கு பத்து....

எழுத முயற்சிப்போம்....

உங்களின் பத்துக்கு பத்து கலக்கல்....

தண்டோரா ...... said...

இதுக்குத்தான் மனைவியை கொஞ்சறப்ப நீ..அவளை மாதிரி இருக்கேன்னு சொல்லனும்ங்கிறது(பொய்தான்)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//தண்டோரா ...... said...
இதுக்குத்தான் மனைவியை கொஞ்சறப்ப நீ..அவளை மாதிரி இருக்கேன்னு சொல்லனும்ங்கிறது(பொய்தான்)
//

தண்டோரா அண்ணே, அப்படியும் சொல்லிப் பார்த்தேன்,
உடனேயே, நீங்க .........(ஒரு நடிகரின் பெயர் சொல்லி) மாதிரி இருக்கக் கூடாதான்னு கேட்டுட்டாங்க.
அன்னிக்கு வர்ணிக்கறதை விட்டவன்தான்.........

Mohan Kumar said...

//எதிர்காலம் : கேபிள் ஷங்கர் //

தண்டோரா மாதிரி உங்களுக்கும் நடிக்கிற ஆசை இருக்கோ?

Chitra said...

very funny and smart replies!