அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, November 30, 2009

மொக்கை வாங்கலியோ மொக்கை:

இது மூணும் கவிதை
(ஒத்துக்காதவங்களுக்கு -
கேட்டுக்குங்க, இது மூணும் கவிதைதான்)

1. விருப்பம்

கணக்கு பாடம் என்றால்
எனக்கு
அல்வா சாப்பிடுவதுபோல்,
ஒரு பின்குறிப்பு:
எனக்கு சர்க்கரை வியாதி!

******************************
2. ஒரு ஒண்ணாங்கிளாஸ்(?!) கவிதை

ழகு முகத்தில்
யிரம் எண்ணம் தேக்கி
னிய புன்னகை
ந்திடும் பெண்ணே!
ன்னைக் கண்டதும்
ணினைத் துறந்து
ன்னை மறந்து
க்கம் கொண்டேன்
யமே இல்லை
ப்பற்றவள் நீ,
என் மானே!
(வளவுதான்.)

***********************
3. ஒரு நியாயமான கோபம்

ஏன் இந்த விடலைகள்
எல்லாம்
பெண்களைச் சுற்றி
வந்து தங்கள்
வாழ்க்கையை
மட்டுமல்லாமல்
அந்தப் பெண்ணின்
வாழ்க்கையையும்
வீணடிக்கிறார்கள் -
அயோக்கியப் பயல்கள்
என்ற எண்ணம் வந்தது
- என் பெண் காலேஜ்
சென்றுவரும்போது.
*******************************************************************************************************
காலத்தின் கோலங்கள்

காதலி:
கனவில் வந்து
தொல்லை கொடுக்கும்
இனிய பிசாசு
அவளே மனைவியானால் :
கனவிலும் வந்து
தொல்லை கொடுக்கும்
இல்லப் பிசாசு.

காதலன் :
குச்சி ஐஸ் கேட்டால்
ஐஸ் பார்லருக்கே
கூட்டிச் செல்வான்
அவனே கணவனானால் :
நகை கேட்கும்போது
புன்னகை இருக்க
பொன் நகை எதற்கு
என்று சமாளிப்பான்.

மகன் :
சரியான ஹிட்லர்டா
என் அப்பா என்பான்.
அவனே அப்பாவானபின்:
என் அப்பாகிட்ட
எனக்கு இருக்கும்
அன்பு
என் மகனுக்கு
அவங்கப்பாகிட்ட
இல்லையே என்று புலம்புவான்.

வாத்தியார் நாற்காலியில்
முள்ளை வைத்து விளையாடிய
மாணவன்
ஆசிரியரானபின்
சொல்லிக் கொடுப்பது
மாதா பிதா குரு தெய்வம்.

6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

superbbbbbbbbbb

I said abt. 3rd kavithai & 'kaalathin kolangal(not sun TV serial)'

மணிஜி said...

நடத்துங்க...

புலவன் புலிகேசி said...

சக்கர வியாதியா....சீக்கிரம் மருத்துவரை பாருங்கள்...

ஒன்னாங்கிளாஸ்லயே காதலா...ஆனா கவிதை நல்லா இருந்துது..

பெசொவி said...

//புலவன் புலிகேசி said...
...ஆனா கவிதை நல்லா இருந்துது..
//
புலவரே சொல்லிட்டாரு.......நான் கவிஞன்தான்.

Prathap Kumar S. said...

இதெல்லாம கவிதையா... இல்லையா தத்துவமா??? எதுவா இருந்தாலும் அழுவாசசியா வருது தல...

பெசொவி said...

//நாஞ்சில் பிரதாப் said...
இதெல்லாம கவிதையா... இல்லையா தத்துவமா??? எதுவா இருந்தாலும் அழுவாசசியா வருது தல.//

உங்க சந்தேகத்தைப் போக்க தத்துவம் என்று வகைகளில் சேர்த்து விட்டேன், சந்தேகம் தீர்ந்ததா?
அழுகைலேயே பெரிய அழுகை அடுத்தவங்களை அழ வச்சு பார்க்கறதுதான்னு நம்ம சோகானந்தா சுவாமி சொல்லி இருக்கார், சோ, உங்க அழுகாச்சிக்கு நன்றி!