அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, December 17, 2009

என்னைச் செதுக்கிய தெய்வங்கள் - 2

ஸ்ரீ வித்யா ராஜகோபாலன் - எங்கள் ஊர்க் கோவில் உற்சவ மூர்த்தியின் பெயர். என்னுடைய மூத்த அண்ணனின் பெயரும் அதுதான். கிட்டத்தட்ட என்னுடைய குல தெய்வங்களாக இந்த இரு மூர்த்திகளையும் சொல்லலாம்.

பொதுவாகவே, மூத்த மகனாகப் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்பு என்பது தானாகவே வருவது. இவருக்கும் அப்படித்தான் அந்த பொறுப்பு வைத்தது. எனக்கு நினைவு தெரிந்தது முதல் நானாக ஒரு வேலையில் சேரும்வரை எனக்கான துணிமணிகளை எடுத்துக் கொடுத்தது இவர்தான். எனக்கும் அவருக்கும் இருபது வயது வித்தியாசம் என்பதால் என் இரண்டு வயசிலேயே அவர் Engineering முடித்துவிட்டு ஒரு மத்திய அரசு பணியில் உயர் பதவியில் சேர்ந்துவிட்டார். படிப்பில் புலி. ஒன்றாம் வகுப்பு முதல் முதல் ரேங்க்தான். இளமையில் வறுமையின் கொடுமையை ஓரளவு அனுபவித்தவர். அதனாலேயே, மிகவும் எளிமையாகவே வாழ்பவர். என்னை உருவாக்கிய தெய்வங்களில் மூன்றாவது இடத்தில் இருப்பவர். என்னுடைய முதல் இரு தெய்வங்களான என்னுடைய பெற்றோரைப் பற்றி ஏற்கெனவே எழுதி விட்டேன்.

இவருக்கு உள்ள சிறப்புகள் அவ்வளவையும் ஒரே பதிவில் சொல்லிவிட முடியும் என்று தோன்றவில்லை.

தொழில் : CECRI என்றழைக்கப்படும் CENTRL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE, KARAIKUDI யில் டெபுடி டைரக்டராக பணியாற்றி சென்ற ஆண்டு (2008) ஜூலை மாதம் ஓய்வு பெற்றவர். RTI Act வந்தபிறகு, இந்த நிறுவனத்தில் information officer ஆகவும் பணி புரிந்தார். RTI Act பற்றி எந்த சந்தேகம் என்றாலும் இவரிடம் கேட்கலாம்.

லைப்ரரி: இவரிடம் தற்போது கிட்டத்தட்ட இருபதாயிரம் புத்தகங்கள் உள்ளன. எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு உள்ள பழைய புத்தக கடைக்கு சென்று புத்தகங்கள் வாங்காமல் வருவதில்லை. தினமலர், தினமணி, Indian Express நாளிதழ்களில் இவருடைய புத்தக ஆர்வம் பற்றி வந்துள்ள செய்திகள் கீழே:-




பழம்பொருட்கள் சேகரிப்பு : பழங்காலப் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அவற்றையும் சேகரிப்பது இவரது பொழுதுபோக்கு. சுமார் 25 வகையான பாக்குவெட்டிகள் உட்பட பழமை வாய்ந்த பொருட்கள் 500 இவரது சேகரிப்பில் உள்ளன. இது பற்றி வந்த நாளிதழ் செய்தி கீழே:-




இவரைப் பற்றி தூர்தர்ஷனில் வந்த செய்தித் தொகுப்பு கீழே:-





கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் மனைவியை இழந்த இவர் (குழந்தைகளும் இல்லை) லைப்ரரியை மனைவியாகவும் பழம்பொருட்களை குழந்தைகளாகவும் பாவித்து வருகிறார் என்றே கூறலாம்.

இது போக, பல தலைப்புகளில் கல்லூரிகளில் seminar களும் நடத்தி வருகிறார்.

மொத்தத்தில் இவர் பல்கலை வித்தகர் என்றே கூறுவேன். இவரது தம்பியாக இருப்பது எப்போதும் எனக்கு பெருமைதான்.

இவரைப் பற்றி மேலும் அறிய வேண்டுமானால் இந்த வலைப்பூவைப் பார்க்கவும்.

இவருடைய அலைபேசி எண் : 9443136223

9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

உங்கள் வாழ்க்கையில், "அண்ணன் உடையான் படைக்கு அஞ்சான்." இப்படி ஒரு அண்ணன் கிடைப்பது ஒரு பெரிய ஆசீர்வாதம்.

ஸ்ரீராம். said...

அருமையான குடும்பத்தை பெற்றிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்...

CS. Mohan Kumar said...

உன் அண்ணனை பற்றி படிக்கும் போது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. என்னை படிக்க வைத்ததும் எனது அண்ணன் தான். அவரிடம் இந்த பதிவை படிக்க சொல்லி சொல்லவும்.

ranga said...

உங்கள் அண்ணன் எனக்கு நன்றாக தெரிந்த ஒருவர் . அவரை பற்றிய வர்ணனை அனைத்தும் சிறப்பு . .
அருமை ! மிக அருமை ! உங்கள் அண்ணனால் உங்கை குடும்பத்திற்கு பெருமை. இல்லை இல்லை இந்தியாவிற்கே பெருமை.

- ரங்கராஜன்

செல்வா said...

உண்மைலேயே இப்படி ஒரு அண்ணன் கிடைப்பதற்கு நீங்க கொடுத்து வைத்துள்ளீர்கள் ..!!

ரோஸ்விக் said...

அட உங்க அண்ணன் எங்க ஊர்லதான் வேலை பார்த்திருக்கிறார். ரொம்ப சந்தோசம்.
இந்த அண்ணன் மதிப்பிற்கும், போற்றுதலுக்கும் உரியவர்தான். அவருக்கு என் வணக்கங்கள்.

vibrantheart22 said...

thanks for sharing Mr. Rajagopalan's contact number.

vibrantheart22 said...

thanks for sharing Mr. Rajagopalan's mobil number.

Unknown said...

Hello Sir is it possible to get ur contact number please? i am from mauritius, indian ocean