மத்திய அமைச்சர்
மலேசியாவுல சொத்து வாங்கிட்டாராமே!"
"ஏங்க்கா .....
முதலமைச்சர்
முன்னூறு கோடி சேர்த்துட்டாராமே!"
"ஏங்க்கா ....
மத்திய அமைச்சர் தம்பிதான்
இப்ப இந்தியாவுலயே
ஏழாவது கோடீஸ்வரராமே !"
புலம்பினாள் பொன்னாத்தா.
"பாவி பயலுக,
நாம கஞ்சிக்கே
நாயா அலையுறோம்,
அவங்களுக்கு மட்டும்
அம்புட்டு சொத்து எங்கிருந்து வந்துச்சு......?"
"அடியே,
அடுத்தவங்களை சொல்லுறதை விட்டுட்டு
உன் அழுக்கைத் திரும்பிப் பாரு,
நீ ரொம்ப யோக்கியமா.....
தப்பே பண்ணலையா....?"
காரமாய் உறுமினான்
கணவன் கண்ணாயிரம்.
"நான் என்ன தப்பு செஞ்சேன்,
மிஞ்சிப் போனா,
போன எலக்சன்ல ஓட்டுப் போட
ஒரு ஆயிரம் ரூபா வாங்கினேன்,
அவ்வளவுதானே!"
கேட்டவுடன் சொன்னான் அவன்,
"அடியே, நீ வாங்கின ஒரு ஆயிரத்திலதாண்டி
அவங்க மொத்த சொத்தும் வாங்கினாங்க"
**********************************************************************
டிஸ்கி: இது கவிதையா என்று கேட்டால் பதில் இல்லை, ஆனால் இது நிச்சயம் கதை இல்லை
7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
தலைப்பே எனது கருத்தும்..நிதர்சன வரிகள்..
நச்சென்ற குட்டுடன் கதையோ கவிதையோ சொல்லிய விதம் அழகு.
நகைப்பாயும் நச்சுன்னும்
கடைசி வரிகளில் வாங்கியதால் வாங்கப்பட்டது பலே...
எவ்வளவு சொன்னாலும் அடுத்த தெர்தலின் போது எவ்வளவு கிடைக்கும் என எதிபார்க்கும் இது பொன்றவர்கள்தான் நாட்டை கெடுப்பவர்கள்.
mmmmm -நாடு எங்கே போகிறது - இக்கலாச்சாரம் நாளுக்கு நாள் வளர்கிறதே - ஆண்டவா
கதையோ கவிதையோ நலார்ருக்கு
இது கதையோ, கவிதையோ, இன்றைய வாழ்க்கையை நிதர்சனமாக எடுத்துக்காட்டிய ஒரு பதிவு...
அதற்காக, உங்களுக்கு ஒரு சபாஷ்...
இவர்களை கேட்டால் எப்படியும் நமக்கு ஏதும் செய்யபோறதில்ல அதுனால வரதை ஏன் விடணும்னு சொல்வாங்க..? கோழியிலிருந்து முட்டை வந்திச்சா..? முட்டையிலிருந்து வந்திச்சான்ற மாதிரிதான்.
கேபிள் சங்கர்
Post a Comment