அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, March 20, 2010

பதின்ம வயது - தொடர்பதிவு

முதலில் இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்த மாதவனுக்கு நன்றி.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பருவமாக இந்தப் பதின்ம வயதுப் பருவம் அமைந்துவிடுகிறது.

பத்து வயது வரை எதுவும் தெரியாத பருவம் என்று கொண்டால், இருபது வயது முதல் எல்லாம் தெரிகின்ற பருவம் என்று கொண்டால், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும் இருக்கின்ற இரண்டுங்கெட்டான் பருவமாக எனக்கு இந்தப் பதின்ம வயதுப் பருவம் தெரிகிறது.

ஒரு ஜோக் ஞாபகத்துக்கு வருகிறது:
ஒரு ஐந்து வயது குழந்தை கேட்கிறது, கர்ப்பிணி அம்மாவை : "உன் வயித்தில் என்னம்மா?"
அம்மாவின் பதில் : "உன் தம்பிப் பாப்பாடா"
குழந்தை : "பாப்பாவை உனக்கு பிடிக்குமா அம்மா?"
அம்மா : "பிடிக்கும், ஏன்டா?"
குழந்தை : "அப்புறம் ஏம்மா பாப்பாவை முழுங்கின?"

இப்படி எதுவும் தெரியாத குழந்தை, இருபத்தைந்து வயது நெருங்கும்போது, கேட்கும் கேள்வி "என்னை ஏன் பெத்த?"

ஆனால், பதின்ம வயதில் இருக்கும் ஆணை விட, பெண் சற்று பொறுப்பு உள்ளவளாகத்   தெரிகிறாள்.  பொதுவாகவே, நம்முடைய சமூக அமைப்பு பெண் குழந்தைகளை சற்று ஜாக்கிரதையாகத்தான் வளரச் செய்கிறது.  என்னதான் மகளிர் உரிமை என்று ஊர் முழுக்க தண்டோரா போட்டாலும், தன் வீட்டு பெண் தனக்குக் கட்டுப் பட்டவளாக இருக்க வேண்டும் என்று எந்த பெற்றோரும் நினைப்பதால், பெண் கட்டுப்பாட்டோடும் ஒழுங்கோடும் வளர்க்கப் படுகிறாள்.

ஆனால், ஒரு ஆண் அப்படி வளர்வதில்லை. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற பழமொழிக்கேற்ப, அவன் வீட்டிலேயே அவன் ஒழுங்காக கண்காணிக்கப் படுவதில்லை.  அது போக, இந்த விஞ்ஞான உலகத்தில் டிவி மூலம் வீட்டிற்கே செய்திகள் வந்துவிடுவதால் (படங்களுடன்), சிறு வயதிலேயே கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம்.

ஆனாலும், பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை நன்கு கண்காணித்து அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டால் போதும், அவர்களை நல்லா முறையில் வளர்க்க முடியும் என்றுதான் நான் கருதுகிறேன்.

மொத்தத்தில் பதின்ம வயதுப் பருவம் சம்மந்தப் பட்ட பையனை/பெண்ணை விட அவர்களின் பெற்றோருக்கே சோதனைக் காலம்.

டிஸ்கி : என்னுடைய பதின்ம வயதுப் பருவம் பற்றி ஏற்கெனவே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். அந்த வயதில் ஏற்பட்டிருக்கக் கூடிய கூடா நட்பு எனக்கு ஏற்படா வண்ணம் என்னைக் காத்த கடவுளுக்கும், என்னை அக்கறையோடு வளர்த்த என் பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி பாராட்டுகிறேன்.

5 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

மொத்தத்தில் பதின்ம வயதுப் பருவம் சம்பத்தப் பட்ட பையனை/பெண்ணை விட அவர்களின் பெற்றோருக்கே சோதனைக் காலம்.

.......ம்ம்ம்ம்ம்ம்..... அப்படித்தான் போல...... அதான் நிறைய பெற்றோர்கள் அப்போ சீரியஸ் ஆகி விடுகிறார்களோ?

sathishsangkavi.blogspot.com said...

குழந்தை ஜோக் சூப்பர்...

இப்ப இருக்கற குழந்தைங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்றதுக்கு தனியா படிக்கனும் போல...

Madhavan Srinivasagopalan said...

//Sangkavi said..."குழந்தை ஜோக் சூப்பர் " // ---- ரிபீட்டு

இருந்தாலும் ரெண்டு குழந்தையும் 'ஆண்' அப்படீன்னு சொல்லுற மாதிரி இருக்கு.. (gender bias?)

//பொதுவாகவே, நம்முடைய சமூக அமைப்பு பெண் குழந்தைகளை சற்று ஜாக்கிரதையாகத்தான் வளரச் செய்கிறது.//
பெண்கள் நாட்டின் / வீட்டின் கண்கள். போற்றிப் (அடக்கி அல்ல) பாதுகாக்கப் படவேண்டியவர்கள்.

ஸ்ரீராம். said...

ஏற்கெனவே எழுதிட்டீங்களா? வேற மாதிரி கொண்டு போய் முடிச்சிட்டீங்க...நல்லது.

மங்குனி அமைச்சர் said...

//கூடா நட்பு எனக்கு ஏற்படா வண்ணம் என்னைக் காத்த கடவுளுக்கும், என்னை அக்கறையோடு வளர்த்த என் பெற்றோர் மற்றும் சகோதரர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி பாராட்டுகிறேன்//

ஆகா ......, முடியலே, வேணாம் , அழுதுடுவேன்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................... .