அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, May 18, 2010

என் வலைப்பதிவின் டாப் 10 பின்னூட்டாளர்கள்

முதன் முதலில் பதிவு எழுதிவிட்டு யாராவது பின்னூட்டம் போட மாட்டார்களா என்று ஏங்கியவர்களில்  நானும் ஒருவன்.  எந்த ஒரு செய்கைக்கும் வரவேற்பு கிடைப்பதைப் பொறுத்தே அந்த செய்கைக்கு பெருமை இருக்கிறது. அந்த வகையில் என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களை நான் ரொம்பவே மதிக்கிறேன். (கேட்டுச்சா.....அதுனால என் மதிப்புக்கு மதிப்பு கொடுத்து பின்னூட்டங்களை தாராளமாகவே வழங்குங்கள்)

இதோ என் பதிவுக்கு பின்னூட்டமிடுபவர்களின் டாப் 10.  (எல்லாருமே எனக்கு வேண்டியவர்கள் என்பதால் எண்கள் கொடுக்கவில்லை - மீ தி எஸ்கேப்)

எடக்கு மடக்கு கோபி: இவரை எப்படி மறக்க முடியும்? என்னுடைய பதிவுகளுக்கு முதன் முதல் பின்னூட்டம் போட்டவர். (இப்போதெல்லாம் போடுவதில்லையே என்று யோசிக்க வேண்டாம், நான் அவர் வலைப்பதிவுகளுக்கு போடுவதில்லை என்பது காரணமாய் இருக்கலாம்).
சித்ரா ௦ அமெரிக்காவில் இருப்பவர், அநேகமாக என்னுடைய எல்லா பதிவுகளுக்குமே பின்னூட்டம் இடுபவர். ஆனால் நான் இவருடைய ஒரு சில பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டம் இடுவேன்.

cheena (சீனா) இவரும் அநேகமாக என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுபவர்தான்.  அன்பின்....என்று ஆரம்பித்து தன்னுடைய கருத்தைக் கூறும் பாங்கு என்னை கவர்ந்த ஒன்று.

மங்குனி அமைச்சர் - பெயரில்தான் அமைச்சர், ஆனால் மிக அருமையான நகைச்சுவை மன்னர்.  என்னுடைய பதிவுக்கு இவரின் பின்னூட்டம் வந்தால் நான் கொடுத்து வைத்தவன் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. (அமைச்சரே, கேட்டீரா, தொடரட்டும் உங்கள் ஆதரவு!)

RVS சமீபத்தில் என்னுடைய சில பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டவர். என் தம்பி வயது இவருக்கு.  (யப்பா, உன்னை யூத்துன்னு சொல்லியிருக்கேன், கவனிச்சுக்கோ) இவரின் வலைப்பூ பக்கம் சென்று வந்தால் இவரின் கணினி அறிவும், நகைச்சுவை திறனும் நன்கு விளங்கும்.

மாதவன்  அநேகமாக என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டமிடும் இவரின் வலைப்பூவுக்கு சென்றால் ஒரு தகவல் களஞ்சியமாகவே இருக்கும்.  மாத்தி யோசிப்பவர், யோசிக்க வைப்பவர்.

சைவ கொத்து பரோட்டா நகைச்சுவையோடு கருத்துகளையும் மனதில் உரைக்கும் விதத்தில் எழுதும் இவர் என்னுடைய பதிவுகள் பலவற்றுக்கு பின்னூட்டம் போட்டு என்னை உற்சாகப் படுத்துபவர்.

வானம்பாடிகள் இவரின் பதிவுகள் நகைச்சுவையாக இருக்கும், சில சமயங்களில் உருகவும் வைத்து விடுவார்.  என்னுடைய பழைய பதிவுகளில் பெரும்பாலும் இவருடைய பின்னூட்டம் இருக்கும். (என்ன சார், புதிய பதிவுகளிலும் கொஞ்சம் பின்னூட்டமிட்டு போங்களேன், ப்ளீஸ்!)

மோகன்குமார் - இவன் என் டாப் 10 பதிவர்கள் லிஸ்டுலேயும் உண்டு. என் நண்பன் என்பதாலேயே அநேகமாக என்னுடைய எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் போட்டு விடுவான்.

புலவன் புலிகேசி : அடிப்படையில் நாத்திகரான இவர் வைகுண்ட ஏகாதசி என்ற என் பதிவில் அந்தப் பதிவின் கருத்தினுள் புகாமல் என்னுடைய இருபத்தைந்தாவது இடுகைக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த நாகரிகம் என்னை மிகவும் கவர்ந்தது.

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

Thank you for mentioning my name too. . :-)

சைவகொத்துப்பரோட்டா said...

ஹை!! லிஸ்ட்ல நானும் இருக்கேன், நன்றி & வாழ்த்துக்கள்.

vasu balaji said...

எல்லா இடுகையும் படிக்கிறேன் சார். சில நேரம் பின்னூட்டமிடுவதில்லை. இனிமேல் போடுவேன்:). சாரி

Prathap Kumar S. said...

இந்த நாஞ்சில் பய பின்னுட்டமே போட மாட்டுதான்னு சொல்லாம சொல்றீங்க... ஒகே ஓகே

Madhavan Srinivasagopalan said...

Thanks for including me in the list.

// நாஞ்சில் பிரதாப் said...
"இந்த நாஞ்சில் பய பின்னுட்டமே போட மாட்டுதான்னு சொல்லாம சொல்றீங்க... ஒகே ஓகே"//

As you Sow, you reap.. HA HA HA..

CS. Mohan Kumar said...

ஆஹா.. பின்னூட்டம் இடுபவர்கள் நம்மை ஊக்குவிக்கிறார்கள் .. இங்கு நீ அவர்களை பாராட்டுகிறாய்.. Very good !!

மங்குனி அமைச்சர் said...

இதுகெல்லாம் நாங்க மசியமாடோம் , மரியாதையா என் அக்கவுண்ட்ல பணத்த போடுங்க சார்

Priya said...

நம்மை ஊக்குவிப்பர்களை நினைத்து அவர்களை பற்றி எழுதி இருப்பது அருமை!

ஸ்ரீராம். said...

பின்னூட்டக் காரர்களுக்கு ஊக்க டானிக்...பாராட்டுக்கள்.

RVS said...

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடிகர்கள், குறிப்பாக நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு பண்ணிட்டு, முதல்வரிசையில் சிகப்பு கலர் ராஜா சேரில் உட்காரவைத்து, மேடைக்கு அங்கும் இங்கும் இப்படி அப்படி பார்த்து தலை வலிக்க 'எல்லாத்தையும்' கண்டு களிக்க கூப்பிடுவீங்கன்னுட்டு ஆர்வமா ஆவலா காத்திருந்தா வெறும் பாராட்டோட விட்டுட்டீங்க.. ஹும்.. சரி சரி பரவாயில்லை, வாழ்த்துக்கு வாழ்த்துக்கள்...


அன்புடன் ஆர்.வி.எஸ்.

Unknown said...

பின்னூட்டத்துக்கு ஒரு சிறு குறிப்பா .. அட இது நல்லா இருக்கே

வெங்கட் said...

அடடா..,
இன்னும் கொஞ்ச நாள் முன்னாடி
நானும் இங்கே வந்து இருக்க கூடாதா..?
நம்ம பேர் மிஸ் ஆகிடுச்சே..!!

பெசொவி said...

//வெங்கட் said...
அடடா..,
இன்னும் கொஞ்ச நாள் முன்னாடி
நானும் இங்கே வந்து இருக்க கூடாதா..?
நம்ம பேர் மிஸ் ஆகிடுச்சே..!!
//

கொஞ்ச நாள் முன்னாடி வந்திருந்தா, என்னுடைய டாப் 10 பதிவர்கள் லிஸ்டுலையே செர்ந்திருப்பீங்க, வெங்கட். உங்க காமெடி அப்படி!
(ஏதோ என்னால முடிஞ்சது, உங்களுக்கு ஒரு விளம்பரம்!)