அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Tuesday, June 1, 2010

கவிதை எழுதுவது எப்படி?

எத்தனையோ மொக்கைக் கதைகளையும் கவிதைகளையும் எழுதிக் கொண்டிருக்கும் கதாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் இந்தப் பதிவு பயன்படுமா என்பது தெரியவில்லை. கவிதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்குக் கூட இது பயன்படுமா என்றும் புரியவில்லை.

இருந்தாலும், கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லித் தரவேண்டும் என்று பல புலவர்கள் என் கனவில் வந்து வற்புறுத்துவதால் எனக்குத் தெரிந்த அளவில் கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறேன்.

முதலாவதாக, கவிதை எழுதுவதற்கு தனியாக மூளை தேவை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தமிழ் எழுத்துக்கள் எத்தனை என்ற அறிவு கூட தேவை இல்லை.

உங்களுக்குத் தமிழில் எழுதத் தெரியுமா? அது போதும்.

சரி, பாடத்துக்கு வருவோம்.

எல்லோரும் ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள், கூடவே ஒரு பேனாவையோ பென்சிலையோ எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது, காகிதத்தில் பேனாவால் "க" என்று எழுதுங்கள். எழுத்தின் அளவு உங்கள் மனதிற்கு உகந்த வகையில் இருக்கலாம்.

இப்போது "க"விற்குப் பக்கத்தில் அதே அளவில் "வி" என்று எழுதுங்கள். குட். இப்பொழுது உங்கள் காகிதத்தில்

"கவி" என்று இருக்கிறதா?

நல்லது. இப்போது அதற்குப் பக்கத்தில் அதே அளவில் "தை" என்று எழுதுங்கள்.

அவ்வளவுதான் "கவிதை" எழுதி விட்டீர்கள்.

இப்போது சொல்லுங்கள், கவிதை எழுதுவது சுலபம்தானே!

சிறந்த கவிதை எழுதுவது எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?

11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

தனுசுராசி said...

வேணாம்... வலிக்குது.... அழுதுடுவேன்... :-(

வெங்கட் said...

ஹி., ஹி., ஹி..!!
என் கூட ரெண்டு தடவை
போன்ல பேசினதுக்கே
இப்படி ஆயிட்டீங்களே..??!!

மன்னார்குடி said...

பின்னூட்டத்திலயே 'சிறந்த கவிதை' எழுதிட்டனே..?

Madhavan Srinivasagopalan said...

ஆண்டவா....
விட்டா.. 'கதை', 'திரைக்கதை', 'வசனம்', 'பாடல்'.. இதெல்லாம் கூட எழுத சொல்லித்தருவீங்க போலிருக்கு.. !!

பெசொவி said...

//Madhavan said...
ஆண்டவா....
விட்டா.. 'கதை', 'திரைக்கதை', 'வசனம்', 'பாடல்'.. இதெல்லாம் கூட எழுத சொல்லித்தருவீங்க போலிருக்கு.. !!
//

ஆஹா.....நாலு பதிவுக்கு யோசனை சொல்லியிருக்கீங்க....நன்றி!

பெசொவி said...

//வெங்கட் said...
ஹி., ஹி., ஹி..!!
என் கூட ரெண்டு தடவை
போன்ல பேசினதுக்கே
இப்படி ஆயிட்டீங்களே..??!!
//

என்ன அப்படி சொல்லிபுட்டீங்க? உங்களோட பழகறதுக்கு முன்னாடியே படம் வரைஞ்சவன் நானு...இதைப் பாத்தீங்கல்ல?

http://ulagamahauthamar.blogspot.com/2010/04/blog-post_18.html#comments

மங்குனி அமைச்சர் said...

ஆஹா, அவனா நீ? நான் மொக்க போடுறத பத்தி எழுதிருக்கேன் போய் பாருங்க

http://manguniamaicher.blogspot.com/2010/02/blog-post_27.html

ஸ்ரீராம். said...

புரிந்து கொள்ள சற்று சிரமமாய் இருந்தது. ஆனாலும் நீங்கள் எளிதாகச் சொல்லிக் கொடுத்த விதத்தில் லேசாகப் புரிந்துள்ளது. அடுத்த பாடத்துக்கு நோட்டு பேனாவுடன் ஆர்வமாகக் காத்திருக்கிறேன். எப்படியும் அதையும் கற்றுக் கொண்டு விட வேண்டும் என்ற ஆர்வம்தான் காரணம்..

RVS said...

கவிதை நல்லா இருந்தது. இது ரொம்ப புதுமையா இருக்கறதனால இதுதான் புதுக்கவிதையா? கவிதையை சுவாசிக்கிறேன், நேசிக்கிறேன், பூசிக்கிறேன் போன்றவைகளுக்கும் உங்களது இந்த அசத்தல் பாணியில் எப்படி என்று பதிவிடவும். இது உங்கள் கவிதையை நேசிக்கும் ஒருவனின் அன்பு வேண்டுகோள். :) நன்றி :) :)

Jey said...

உங்களுக்கு “கவிஞர்களுக்கு எல்லாம் கவிஞர் “ என்ற பட்டத்தை அளிக்கிறேன்.

R.Gopi said...


வி
தை

எழுதுவது எப்படி என்று என் போன்று பால பாடம் படிப்பவர்களுக்கு எளிதாக, புரிந்து கொள்ளும் வகையில் சொல்லித்தந்த “மாகவி”யே... வாழிய நீ நீடூடி....