என்னுடைய கவிதை எழுதுவது எப்படி என்ற முந்தைய பதிவை படித்திருப்பீர்கள்.
இப்பொழுது சிறந்த கவிதை எழுதுவது எப்படி என்பதைப் பார்ப்போமா?
ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பேனாவையோ பென்சிலையோ எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது காகிதத்தில் "ம" என்று எழுதுங்கள்.
"ம"விற்குப் பக்கத்தில் "ழ" என்று எழுதுங்கள்.
அதற்குப் பக்கத்தில் "லை" என்று எழுதுங்கள்.
"மழலை" என்று எழுதியிருக்கிறீர்களா?
இப்பொழுது சொல்லுங்கள், மழலை - அதாவது ஒரு குழந்தையை விட அழகான சிறந்த கவிதை இந்த உலகத்தில் இருக்கிறதா? இல்லவே இல்லை.
சிறந்த கவிதை எழுதுவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?
பின்னர் வேறொரு பாடத்தில் சந்திப்போமா?
7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
சார்...சார்... இங்கப்பாருங்க...என்கைய...
எப்டி சார்..இதெல்லாம் எப்டி--???
தெய்வம்,
தாய்,
அன்னை
தந்தை,
நண்பன்,
அட.. இதெல்லாம் கூட கவிதைதானா..?
ஏன்..? ஏன் இப்படி..?
எனக்கு பிடித்த சிறந்த கவிதை
இதோ..
அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய கவிதை
கேட்டார்கள்...
' அம்மா '
என்றேன் உடனே..!
கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
' நீ ' என்று..!!
- தாஜ் ( ஆனந்த விகடனில் எழுதியது.)
இன்னுமா நீ உயிரோட இருக்க ????
அய்யோ, கடவுளே...
இந்த பதிவுக்கும் கமெண்ட் + ஓட்டு போட வச்சுட்டியே...
ஆஹா....
//சிறந்த கவிதை எழுதுவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?பின்னர் வேறொரு பாடத்தில் சந்திப்போமா?//
பதிவுலக மன்னன் பார்த்து இருக்கேன்... ஆனா, மேல இருக்கற டயலாக் படிச்சப்புறம் உங்களுக்கு நான் கொடுக்கும் பட்டம் “பதிவுலக நன்னன்”....
Post a Comment