அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, June 7, 2010

பிளான் பண்ணிச் செய்யணும்

ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்து வந்தனர்.

மறு நாள் தேர்வு இருக்கும் நிலையில் முதல் நாள் இரவு விளையாடி பொழுதைப் போக்கிவிட்டபடியால் ஒரு திட்டம் போட்டு மறுநாள் காலை கல்லூரிக்குச் சென்றனர்.

அதன்படி தங்கள் கைகளையும் உடைகளையும் கிரீஸ் கொண்டு அழுக்காக்கிக் கொண்டார்கள். முதல்வரிடம் சென்று தாங்கள் நால்வரும் முதல் நாள் ஒரு திருமணத்திற்கு வெளியூர் சென்றதாகவும் வரும் வழியில் கார் ரிப்பேர் ஆகிவிட்டபடியால் தாங்களாகவே அதை சரி செய்துகொண்டு நேரடியாக கல்லூரிக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்கள். முதல்வரும் அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் நால்வருக்கு மட்டும் மூன்று நாட்கள் கழித்து தேர்வு வைக்க ஒப்புக் கொண்டார்.
அந்த மூன்று நாட்களும் நன்றாகப் படித்து தேர்வுக்குத் தயாராக வந்தார்கள். அவர்களை அழைத்த முதல்வர் இது ஸ்பெஷல் தேர்வு என்பதால் நான்கு பேரும் தனித் தனி அறைகளில் எழுதவேண்டும் என்றார். நால்வரும் தத்தம் அறைக்குச் சென்றனர். கேள்வித்தாள் வந்தது. இரண்டே கேள்விகள்தான் :
1. அவர்கள் நான்கு நாட்களுக்கு முன்னால் சென்ற காரின் எண் என்ன?
2. காரில் ஏற்பட்ட ரிப்பேர் பற்றி விரிவாக எழுதவும்.
நீதி : பதிவின் தலைப்பு பார்க்கவும்.
டிஸ்கி : பதிவிற்கு உதவிய என் நண்பனின் இ-மெயிலுக்கு நன்றி!

7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

Like..

which type got punctured..
Right or Left
&&
Front or Back

gud one

மங்குனி அமைச்சர் said...

பழைய சோறுதான் , ஆனா பிரியாணி மாதிரி சூபரா சொல்லிருக்க

Ananya Mahadevan said...

ஹாஹா.. எல்லாரையும் எல்லா நேரமும் ஏமாத்த முடியாதே.. சூப்பர்!

ஸ்ரீராம். said...

நல்ல நீதி...ஒரிஜினலை லேசாக மாற்றிவிட்டீர்கள் போலும்...டயர் பஞ்சர் என்று காரணம் சொல்லி, தனியறையில் அமர வைத்து எந்த வீல் என்று கேட்ர்கப் படுவதாகப் படித்திருக்கிறேன்...

பெசொவி said...

//Congrats!

Your story titled 'பிளான் பண்ணிச் செய்யணும்.' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th June 2010 08:50:04 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/270743

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
//

Thank you voters!

cho visiri said...

Yes.

The original had a single question as to which of the four tyres got burst.

Please try to post something that is not too popular.

R.Gopi said...

தல

சொல்லிப்புட்டேன்

இது நெம்பன்னா நெம்ப பலசு....