முன் டிஸ்கி : இது என் எழுபத்தைந்தாவது பதிவு.
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் தொடங்கிவிட்டன. பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகெங்கும் இவற்றை ரசிக்கத் தயாராகிவிட்டனர். இந்நிலையில் கால்பந்துப் போட்டிகளைப் பற்றி பதிவு எழுதாமல் போனால் என்னாவது. எனவேதான் இந்தப் பதிவு.
சுமார் இருபத்தைந்து ஆண்டுக்கு முன் அப்போது மெக்ஸிகோவில் நடந்த உலகக் கோப்பையை அர்ஜென்டீனா வென்றிருந்த சமயம், எல்லா பத்திரிக்கைகளிலும் மாரடோனா படம்தான். எங்கள் தெருவிலும் கிரிக்கெட்டைத் தற்காலிகமாகத் துறந்துவிட்டு கால்பந்து விளையாட முடிவு செய்தோம்.
நான் விளையாட்டில் சுமார் (படிப்பில் மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்க நல்ல வேளையாக அருகில் யாரும் இல்லை). எனவே என்னைப் பந்து பொறுக்கிகொடுக்க மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் இம்முறை என் செலவில் கால்பந்து வாங்கிக் கொடுத்த படியால் நான் ஒரு டீமின் கேப்டன் ஆகிவிட்டேன் (அப்பவே அரசியல்வாதியாகிவிட்டேன் என்றும் கொள்ளலாம்). விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது. என்னதான் என் காசுல வாங்கினது என்றாலும் கால்பந்து என் சொல்லைக் கேட்குமா? எதிர் டீம் திறமையினாலும் (நான் பலமுறை கோட்டை விட்டதினாலும்) அவர்கள் கோல் மேல் கோல் போட்டார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு அவமானமாகி பந்தை கையில் எடுத்துக் கொண்டு "ஆட்டம் முடிஞ்சுடுச்சு, நான் வீட்டுக்கு கிளம்பறேன்" என்றேன்.
அவ்வளவுதான். எல்லோரும் சேர்ந்துகொண்டு ஆட்டத்தைத் தொடர்ந்தே ஆட வேண்டும் என்று வற்புறுத்த, நான் விடாப்பிடியாய் மறுக்க, என் கையில் இருந்த பந்தை சிலர் பிடுங்க ஆரம்பிக்க, கால்பந்து என்கையில் சரியாய் மாட்டிக் கொள்ள, அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாய் வந்துவிட்டேன்.
அந்தக் கால்பந்தின் படம் கீழே:-
கால்பந்து "கால்" பந்து
டிஸ்கி : மேலே உள்ளதெல்லாம் கற்பனை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்!
10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
கால் பந்துக்கு இப்படி ஒரு definition இது வரை கேட்டதில்லை (பார்த்ததில்லை).. எப்படி? ரூம் போட்டு யோசிப்பீங்களோ??
இதை பாத்த அப்புறம், கால்பந்து போட்டிகளை பாக்கனும்-ன்ற ஆர்வம் போயே போச்சு..
//(படிப்பில் மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்க நல்ல வேளையாக அருகில் யாரும் இல்லை//
?????
// மெக்ஸிகோவில் நடந்த உலகக் கோப்பையை
அர்ஜென்டீனா வென்றிருந்த சமயம்,
எல்லா பத்திரிக்கைகளிலும் மாரடோனா படம்தான். //
ஆச்சரியமா இருக்குதே..!!!
கல்யாண பத்திரிக்கையில கூடவா..??
முக்’கால்’ சதத்துக்கு வாழ்த்துகள்:)
//வெங்கட் said... ஆச்சரியமா இருக்குதே..!!!
கல்யாண பத்திரிக்கையில கூடவா..??//
எப்படி? ரூம் போட்டு யோசிப்பீங்களோ??
முன் டிஸ்கி : இது என் எழுபத்தைந்தாவது பதிவு.
..... Congratulations!
எழுபத்தைந்துக்கு பாராட்டுக்கள்...என் சின்ன வயதில் நானும் கால் பந்து விளையாடியிருக்கிறேன்...பந்துக்கு என்னிடம் ரொம்ப பயம்...என் காலில் சிக்காமல் ஓடிக் கொண்டேயிருக்கும்...
சார், அப்ப மீதி முக்கா பந்து எங்க சார் ?
தலைவா
ஆர்டிகிளை விட நீங்கள் கடைசியில் போட்டிருந்த 1/4 பந்து என்னை கவர்ந்தது....
கலக்கிட்டீங்க...
//முன் டிஸ்கி : இது என் எழுபத்தைந்தாவது பதிவு.//
சீக்கிரம் 100 அடிங்க... அதை அப்படியே கண்டினியூ பண்ணி பல 100கள் அடிக்க வாழ்த்துக்கள்...
Post a Comment