அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, June 26, 2010

போதை இல்லாப் பாதை வகுப்போம்

மது, மாது, சூது இம்மூன்றுமே போதை தரும் பொருட்கள் என்று அனைவருக்குமே தெரியும். இருப்பினும் இம்மூன்றை விட, தற்போது உலகில் நிலவி வரும் அபாயகரமான சூழல் கஞ்சா, அபின் முதலிய போதைப் பொருள் பயன்படுத்துதல்தான்.

நான் வளர்ந்த சூழல் மற்றும் என் குடும்பப் பாரம்பரியம் காரணமாகவோ என்னவோ, எனக்கு இந்தப் போதையின் பாதையில் செல்ல வேண்டிய நிலை வந்ததே இல்லை. ஆனால், எனக்குத் தெரிந்த பலர் அந்த பாதையில் சென்று தன் வாழ்க்கையையே தொலைத்த கோரத்தை நேரில் கண்டவன் நான்.

மதுப் பழக்கம் என்றவுடன் எழுத்தாளர் சிவசங்கரியின்  'ஒரு மனிதனின் கதை' நாவல் தான் நினைவுக்கு வரும். கதையின் நாயகன் தியாகுவும், நாயகி கங்காவும் மறக்கமுடியாத பாத்திரப்படைப்புகள். குடிப்பழக்கம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு சீர்குலைக்கும் என்பதை அத்தியாயத்திற்கு அத்தியாயம் மனத்தில் தைக்கிறமாதிரி அழகாகச் சொல்லியிருப்பார் சிவசங்கரி. 'ஒரு மனிதனின் கதை'யைப் படித்து விட்டுப்போதைப் பழக்கத்திலிருந்து விலகியோடிப் போனவர்கள் நிறையப் பேர். இதுதான் சிவசங்கரியின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.


மனித வாழ்க்கையையே குலைத்து விடும் கொடிய நோயான போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கத்தை அடியோடு வேரறுக்க இந்த நாளில் உறுதி பூணுவோம்.


"போதைப் பொருளை உபயோகித்து
பாதை மாறிச் செல்லாதீர்,
பேதை என் பிதற்றலைக்
காதைக் கொடுத்துக் கேளுங்கள்!" 


டிஸ்கி : இன்று ஜூன் 26 - உலக போதை பொருள் பயன்படுத்துதல் எதிர்ப்பு நாள்.  

9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Chitra said...

குடிப்பழக்கம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு சீர்குலைக்கும் என்பதை அத்தியாயத்திற்கு அத்தியாயம் மனத்தில் தைக்கிறமாதிரி அழகாகச் சொல்லியிருப்பார் சிவசங்கரி. 'ஒரு மனிதனின் கதை'யைப் படித்து விட்டுப்போதைப் பழக்கத்திலிருந்து விலகியோடிப் போனவர்கள் நிறையப் பேர். இதுதான் சிவசங்கரியின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி

..... Kudos!

நல்ல பதிவு..... அந்த மாயையில் சிக்காமல் இருக்க வேண்டும். சிக்கியவர்களும் வெளியே வர வேண்டும்.

vasu balaji said...

இந்த போதை மாதிரி தான வந்தா அய்யோ அப்பான்னு அலறிண்டு டாக்டருக்கு அழுறதும், நல்லா இருக்கிறப்போ காசக் கொடுத்து இதைத் தேடுறத என்ன சொல்ல:(

Madhavan Srinivasagopalan said...

good message..

Let the awareness on the evils of such bad habits be spread to all.

(I mean, 'awareness be spread', not the bad habit)

பெசொவி said...

//Congrats!

Your story titled 'போதை இல்லா உலகம் அமைப்போம்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 26th June 2010 03:55:02 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/286715

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

Thank you, voters!

Jey said...

நண்பரே, ஜாலியாக சக நண்பர்களுடன் ஆரப்பித்தது, குடிகாரன் என்ற வரைமுறக்குள் இல்லையென்றாலும், அவ்வப்போது நண்பர்களுடன் குடிக்கிறேன்( இதில் கொடுமை என்னவென்றால் ப்ரெம்பாலான மருத்துவ ரீதியான விளைவுகள் தெரிந்து செய்கிறேன்), ஆனால் தவறை தொடர்ந்து கொண்டிருக்கிரோம் என்ற உணர் அவ்வப்போது எழுகிறது, பெரும்ப்பாலான நண்பர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது.

நான் குடிப்பதை நிருத்தும்போது, அதற்கு தூண்டுகோலாக இருந்த காரணிகளில் உங்களின் இந்த பதிவையும் சொல்லிக்க்ள்வேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

மனித வாழ்க்கையையே குலைத்து விடும் கொடிய நோயான போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கத்தை அடியோடு வேரறுக்க இந்த நாளில் உறுதி பூணுவோம்.

kandippaa

வெங்கட் said...

ரொம்ப நல்ல பதிவு..,
ஆனா பாவம் சார் நீங்க..!!

ஒருவேளை குடிக்கறவங்கள்லலாம்
உங்க பதிவை பார்த்துட்டு
குடிக்கறதை நிறுத்திட்டா..!!!

அப்புறம் கவர்மெண்ட் உங்க மேல
கேஸ் போடும்.. நீங்க நஷ்டஈடு
கொடுக்க வேண்டி இருக்கும்..

பெசொவி said...

//ஒருவேளை குடிக்கறவங்கள்லலாம்
உங்க பதிவை பார்த்துட்டு
குடிக்கறதை நிறுத்திட்டா..!!! //

ஒரு வேளை குடிக்கிறவங்க மூணு வேளை குடிக்காம இருந்தாலே போதும் எனக்கு.

அனு said...

ஜாலிக்காக ஆரம்பிச்சு பல பேரு வாழ்க்கையையே தொலைச்சுடுறாங்க. நல்ல பதிவு.. keep it up..

//ஒரு வேளை குடிக்கிறவங்க மூணு வேளை குடிக்காம இருந்தாலே போதும் எனக்கு//
வெங்கட் சொன்ன "ஒரு வேளை' = 'in case'..
நீங்க நினைச்சது 'once' as in 'once in a while'..

ம்ம்ம்.. இந்த வார்த்தை விளையாட்டும் நல்லா தான் இருக்கு :)