அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Thursday, June 17, 2010

முத்துக்கள் பத்து !

ரொம்ப நாளா தத்துவம் எதுவும் எழுதலையேன்னு யோசிச்சேன், கிடைச்ச முத்துகள் இதோ, உங்களுக்காக!

1. எவ்வளவுதான் யானை மேல தண்ணிய ஊத்தினாலும், அது நீர் யானை ஆயிடாது.
2. எறும்பைக் கட் பண்ணி அதுதான் கட்டெறும்புன்னு சொல்லிட முடியுமா?
3. என்னதான் கரண்டியை அதல பாதாளத்துல போட்டாலும், அது பாதாள கரண்டி ஆகுமா?
4. சாவேரியும் ராகம்தான், அசாவேரியும் ராகம்தான். ஆனா, வித்தியாசம் என்னவோ, பத்துக்கும் ஆபத்துக்கும் இருக்கற வித்தியாசம்!
5. என்னதான் வாஸ்து பாத்து வீடு கட்டினாலும், பயன்படுத்தற வஸ்து சரியில்லைன்னா வீடு பாழாயிடும்!
6. மழைமேகம்னு ஏன் பேர் வச்சாங்க தெரியுமா? அது கண்ணுல பட்டா மழை may come. அதுனாலதான்.
7. அனுபவம் வாழ்க்கையைப் புரியவைக்குது; அனுபவத்தை "வழுக்கை" புரியவைக்குது.
8. என்னதான் "கூடைப் பந்து"ன்னு பேர் வைச்சாலும், ஒரு கூடைப் பந்து இருக்காது, ஒரே ஒரு பந்துதான் இருக்கும். அதே மாதிரி "கால்" பந்துன்னு பேர் இருந்தாலும், "முழு" பந்தாதான் இருக்கும்.
9. என்னதான் ஜனவரி, பிப்ரவரின்னு ரெண்டு மாசத்துல மட்டும் வரி இருந்தாலும், வருஷம் முழுக்க வர்ற வருமானத்துக்கும்தான் வரி கட்டணும்.
10. தேர்தல்ல ஜெயிக்க வாக்குறுதி மட்டும் போதாது, சந்து பொந்துலலாம் நடக்க walk உறுதியும் வேணும்!

15 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,10

நல்லாவே இருக்குது.. சிரித்து, ரசித்து படித்தேன்..

R.Gopi said...

//10. தேர்தல்ல ஜெயிக்க வாக்குறுதி மட்டும் போதாது, சந்து பொந்துலலாம் நடக்க walk உறுதியும் வேணும்!//

இந்த பத்தாவது முத்து ரொம்ப சூப்பரா இருக்கு... ஆமாம், யாருக்கு சொல்றீங்க...??!!

Chitra said...

சிரிச்சு முடியல. ha,ha,ha,ha,ha....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Adadaa... enna thaththuvams... superrr :-))))))

அகல்விளக்கு said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ.........

ஜெட்லி... said...

அண்ணே...தயவு செய்து இனிமே யோசிக்காதிங்க.... :))
செம கடி...

vasu balaji said...

சரி மொக்கை:)). சூப்பர்ப்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி..நல்லாயிருக்கு

வெங்கட் said...

ம்ம்.. ஏன் நிறுத்திட்டீங்க..

எருமைய காட்டில விட்டா
அது காட்டெருமை ஆயிடாது..,

கோழி தலையில நெருப்பு வெச்சிட்டா
அது நெருப்பு கோழி ஆயிடாது..,

Come On.. ஆரம்பிங்க அடுத்த ரவுண்ட்..

வெங்கட் said...

ம்ம்.. இப்ப ஒண்ணு தோணிச்சி..,

கருப்பும் ஒரு Color தான்.,
வெள்ளையும் ஒரு Color தான்.

அதுக்காக Black & White Tv-ஐ
Color Tv-ன்னு சொல்ல முடியுமா..?

பெசொவி said...

//Congrats!

Your story titled 'சிந்தியுங்கள், சிரியுங்கள்!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 20th June 2010 06:42:02 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/279105

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
//

Thank you voters!

Madhavan Srinivasagopalan said...

//கருப்பும் ஒரு Color தான்.,
வெள்ளையும் ஒரு Color தான்.//

White light contains a set of waves(or colors in layman language) with different frequencies/wavelengths

When white light falls on a object, the object absorb few waves & reflects rest.

Red colored object absorbs all waves(colors) & emits/reflects Red wave.. hence it is seen as 'Red'

A material which absorbs all the waves, hence no wave is emitted is what we call 'Black' color.

These are applicable to 'visible spectrum/rays/waves' -- means visible to human eye.

Madhavan Srinivasagopalan said...

I feel 'Venkat' has humorous sense as seen by his comments, as well as his blog.

Needless to say, Pe.So.Vi also has similar quality

ஸ்ரீராம். said...

நான் கேள்விப் பட்ட ஒண்ணு....என்னதான் பவர் க்ளாஸ்சை ஃபிரிட்ஜ்ல வச்சாலும் கூலிங் க்ளாஸ் ஆகாது...!

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா என்ன ஒரு தத்துவம்