தத்துவம்
என்னதான் நாம வித்தியாசமா சொல்ல வந்தாலும் "என்னதான்"னு ஆரம்பிக்கும்போதே நாம தத்துவங்களைக் கிண்டல் அடிக்கப் போறோம்னு எல்லாருக்குமே புரிஞ்சுடும்.
நீதி: தத்துவம் இப்போதைக்கு ஸ்டாக் இல்ல!
பொன்மொழி
ஆயிரம் வார்த்தைகள் மூலம் நாம் சொல்லும் அறிவுரையைவிட ஒரே ஒரு முறை நாமே கடைப்பிடிக்கும்போது அது எளிதில் மற்றவருக்குப் புரிந்துவிடும்.
ஜோக்
ஒரு கல்லறைக்கு முன்னால் ஒருவர் நின்று கொண்டு அழுது கொண்டிருந்தார், "இவ்ளோ சீக்கிரம் ஏன் நீ செத்தே?" என்று கதறி அழுதார். ரொம்ப நேரம் இப்படி அழுது கொண்டிருக்கவே, பார்த்துக் கொண்டிருந்த மற்றொருவர் இவரிடம் வந்து, "அவ்ளோ அன்பா செத்தவங்க மேல? அந்த அளவுக்கு உங்களைத் துயரத்தில் ஆழ்த்தி இறந்து போனது யார்? உங்க அம்மாவா, மனைவியா, குழந்தையா?"
அழுது கொண்டிருந்தவர் சொன்னார், "என் மனைவியோட முதல் புருஷன்!"
குவிஸ்
நீளமான இசைக்கருவி எது தெரியுமா?
புல்longகுழல்!
கவிதை
அரசனை
ஆண்டியாக்கிஆண்டியை
அரசர்கனாக்கும்
சக்தி
ஆண்டவனுக்கு
மட்டும் அல்ல,
எனக்கும் உண்டு
தேர்தலின்போது மட்டும்!
8 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
// அரசனை
ஆண்டியாக்கி
ஆண்டியை
அரசர்கனாக்கும்
சக்தி
ஆண்டவனுக்கு
மட்டும் அல்ல,
எனக்கும் உண்டு
தேர்தலின்போது மட்டும்! //
நீங்க ஓட்டு போடலைன்னா..
அவர் ஆண்டி ஆயிடுவாரா..?!
உலகம் புரியாத ஆளா இருக்கீங்களே..
1.75 லட்சம் கோடி... மறந்துடாதீங்க..
//ஆயிரம் வார்த்தைகள் மூலம் நாம் சொல்லும் அறிவுரையைவிட ஒரே ஒரு முறை நாமே கடைப்பிடிக்கும்போது அது எளிதில் மற்றவருக்குப் புரிந்துவிடும். //
நச் .....நச் ...
ஆஹா...
வார சந்தை களை கட்டிடுச்சேய்யா...
//ஆயிரம் வார்த்தைகள் மூலம் நாம் சொல்லும் அறிவுரையைவிட ஒரே ஒரு முறை நாமே கடைப்பிடிக்கும்போது அது எளிதில் மற்றவருக்குப் புரிந்துவிடும். //
மெய்யோ மெய்... பட், இத பண்றது தான் கஷ்டம்...
//குவிஸ்
நீளமான இசைக்கருவி எது தெரியுமா?
புல்longகுழல்! //
ஃபுல்longகுழல்....
@ Venakt //"1.75 லட்சம் கோடி... மறந்துடாதீங்க.. "//
உங்க ஊருல எலெக்ஷன் இன்னும் முடியலையா?
கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-2
http://speedsays.blogspot.com/2011/04/2.html
:))
அரசனை ஆண்டியாக்கி.....எங்கே அதுதான் வோட்டை நூறுக்கும் ஐநூறுக்கும் விற்று விடுகிறோமே....
Post a Comment