அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, July 31, 2011

வாரச் சந்தை - 02.08.2011

முன் டிஸ்கி : பார்லிமென்ட் கூட்டத் தொடர் தொடங்கிய காரணமாக வாரச் சந்தை ஒரு நாள் டிலே # ஏதோ ஒரு சாக்கு

தத்துவம் 

என்னதான் ஆடு "மே", "மே"ன்னு கத்தினாலும் அதுக்கு எல்லா இங்கிலீஷ் மாசமும் தெரியும்னு நாம நினைக்க முடியாது.

பொன்மொழி 

எனக்கு எதுவும் தெரியாது என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது
- தத்துவ ஞானி சாக்ரடீஸ் 

கேள்வி

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரக் கூடிய ஆனால் ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை வரக்கூடிய ஒன்று, அது எது?
(What comes once a year but twice a week?)

விடை:  "." ஆமாங்க, புள்ளிதான் விடை. பாருங்க "வருடம்"னு எழுதும்போது ஒரு புள்ளி வைக்கிறோம் ("ம"வுக்கு மேல).  ஆனா "ஒவ்வொரு வாரம்"னு எழுதும்போது ரெண்டு புள்ளி வைக்கிறோம் ("வ"வுக்கும், "ம"வுக்கும் மேல).
அதுனால புள்ளி தான் வருடத்திற்கு ஒரு முறையும், ஒவ்வொரு வாரமும் ரெண்டு முறையும் வரும்.

((இப்ப எனக்கு புள்ளி வச்சுடாதீங்க, மீ பாவம்!)

ஜோக்  & கவிதை (டூ இன் ஒன்)


பெண்ணின் சேலையை
இழுத்தவனை
அடித்துப் புரட்டி
விரட்டிவிட்டு
அந்தப் பெண்ணுடனே
டூயட் பாடினான்
பெண்ணும் ஆடினாள்
"டூ பீஸ்" உடையில்.


16 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெங்கட் said...

// (What comes once a year but twice a week?) //

Letter " E "

:)

ரசிகன் said...

//What comes once a year but twice a week?//
"e" ?

பெசொவி said...

@ ரசிகன் & வெங்கட்

கலக்கிட்டீங்க, சரியான விடை

@ ரசிகன்
நீங்க ஏன் விடையை வெங்கட்டுக்கு சொன்னீங்க? பாருங்க, அவரையும் பாராட்ட வேண்டியிருக்கு!

வைகை said...

வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரக் கூடிய ஆனால் ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை வரக்கூடிய ஒன்று, அது எது?//


எனக்கு எதுவும் தெரியாது என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது-

அனு said...

நேத்தே இந்த போஸ்ட் வந்ததா கூகுள் காட்டிச்சு.. ஆனா, தேடினாலும் கிடைக்கல.. :)

சந்தை சின்னதா இருந்தாலும் சூப்பரா இருக்கு.. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது..

இந்த வார கேள்வி ரசிகன், வெங்கட் மாதிரியான சின்ன புள்ளைங்க லெவலில் இருப்பதால், சும்மா ஈ-ன்னு சிரிச்சுட்டு மட்டும் போறேன்.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

e தான் அது.................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பெண்ணின் சேலையை
இழுத்தவனை
அடித்துப் புரட்டி
விரட்டிவிட்டு
அந்தப் பெண்ணுடனே
டூயட் பாடினான்
பெண்ணும் ஆடினாள்
"டூ பீஸ்" உடையில்.///////

கவிதைக்கு தலைப்பு தமிழ்சினிமான்னு இருக்கனும்........

cho visiri said...

//What comes once a year but twice a week?//

Basically two (grammatical)mistakes. At Two places preposition is missing.

further development ( you may call it a "clue" as well).

That which comes once in 'twice' is the answer.

cho visiri said...

"அந்தப் பெண்ணுடனே
டூயட் பாடினான்"
This itself shows that the particular girl herself danced. So need not say that she too danced.
By the way, I have an explanation for that. Since the villain has removed the saree the girl was forced to dance with what ever was left. If only the villain had more time..............

எஸ்.கே said...

புதிர் விடை "E" தானே?

எஸ்.கே said...

என்னதான் ஆடு "மே", "மே"ன்னு கத்தினாலும் அதுக்கு எல்லா இங்கிலீஷ் மாசமும் தெரியும்னு நாம நினைக்க முடியாது.

//

நாம கத்து(தி) தரலாமே!

பெசொவி said...

@ all
//கேள்வி
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரக் கூடிய ஆனால் ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை வரக்கூடிய ஒன்று, அது எது?//

எல்லாருமே சரியான விடைதான் எழுதியிருக்கீங்க, ஆனா நான் நினைச்சதை நீங்க சொல்லலை. ஸோ, நான் நினைத்த விடை நாளை மாலை!

எஸ்.கே said...

முன்னொரு காலத்தில் ஒரு கணவன் மனைவியை தூர தேசத்திற்கு வேலைக்குச் சென்றான். அவன் வருடம் ஒருமுறைதான் வீட்டிற்கு வருவான்.

கணவனின் பிரிவு மனைவியை பெரிதும் வாட்டியது. அந்த ஊருக்கு முனிவர் வந்திருந்தார். அவரை பார்க்க போனாள் அந்த மனைவி. அவளின் முகத்தில் இருந்த வாட்டத்தை கண்டு விசாரித்தார் அந்த முனிவர்.

கணவரை பிரிந்ததால் ஏற்படும் வாட்டத்தை அவள் சொன்னவுடன், அது தீர முனிவர் ஒரு வழி சொன்னார்.

“உன் கணவரின் உடைகளைக் கொண்டு நான் சொல்லும்படி ஒரு பூஜை செய். அதன் பின் இந்த தாயத்தை கட்டிக் கொண்டு நான் சொல்லித்தரும் மந்திரத்தை உச்சரித்தால், அன்றிரவு உன் கணவன் உன் வீட்டிற்கு வருவான். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். காலை அவன் சென்று விடுவான். ஆனால் இதை வாரம் இருமுறை மட்டுமே செய்ய வேண்டும். அதற்கு மேல் செய்தால் விபரீதமாக ஏதேனும் நடக்கும். இதை தொடங்கும் முன் கடிதம் மூலம் இதை உன் கணவருக்கு தெரிவித்து சம்மதம் வாங்கி விடு. எக்காரணம் கொண்டும் இந்த விசயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது.”

மனைவியும் அப்படியே கணவனின் சம்மதம் வாங்கி அந்த வழியின்படியே செய்தாள். வாரம் இருமுறை கணவன் வருவான். அவர்கள் வாழ்க்கை இனிதாக சென்று கொண்டிருந்தது.

மூன்று வருடம் ஆயிற்று. அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து பேச ஆரம்பித்திருந்தது. ஒரு நாள் மாலை அந்த குழந்தை அப்பா வேண்டுமென மிகவும் அழுது அடம்பிடித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் குழந்தை சமாதானமாகவில்லை! விட்டால் அழுதே உடல்நிலை பாதிக்கப்படலாம்.

முடிவில் மந்திரம் மூலம் கணவனை அழைக்க முடிவு செய்தாள். அந்த வாரம் ஏற்கனவே இருமுறை அழைத்திருந்தாள். மீண்டும் ஒரு முறை அழைப்பதா என தயக்கம். முனிவரின் எச்சரிக்கையும் ஞாபகம் வந்தது.

சரி என்ன ஆகிவிடப் போகிறது என மந்திரம் மூலம் கணவனை அழைத்தாள். அன்றிரவு என்ன ஆயிற்று என்றால்...............................

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

வெங்கட் rofl

Madhavan Srinivasagopalan said...

//வாரச் சந்தை ஒரு நாள் டிலே # ஏதோ ஒரு சாக்கு//

தவிர்க்க முடியாத அலுவல் பணி நிமித்தமாக Mumbai சென்று வந்ததால், இந்தப்பதிவை நேற்றே படிக்க முடியவில்லை.. (நா ஒங்கள மாதிரி சாக்கு போக்கு சொல்லுற ஆளு இல்லை.. உண்மையிலே தான்)

//என்னதான் ஆடு "மே", "மே"ன்னு கத்தினாலும் அதுக்கு எல்லா இங்கிலீஷ் மாசமும் தெரியும்னு நாம நினைக்க முடியாது. //

அதுக்கு 'மே மாதம்' கூட தெரியாதுங்கோ..
நான் சினிமாவச் சொன்னேன்...

settaikkaran said...

//பெண்ணின் சேலையை
இழுத்தவனை
அடித்துப் புரட்டி
விரட்டிவிட்டு
அந்தப் பெண்ணுடனே
டூயட் பாடினான்
பெண்ணும் ஆடினாள்
"டூ பீஸ்" உடையில்//

குத்துப்பாட்டுக்கு....என்று சேர்த்திருக்கலாமோ? :-))))