அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, July 4, 2011

வாரச் சந்தை - 04.07.2011

தத்துவம்
வாழ்க்கையில் விழுவதும் எழுவதும் சகஜம்.. எங்காவது நீங்கள் சறுக்கி விழுந்து விட்டால் பயப்பட வேண்டாம்; எழுங்கள், தூசியைத் தட்டிவிட்டு தைரியமாக நிமிர்ந்து நில்லுங்கள், நின்று சொல்லுங்கள் ................................................................................................................................................... "நல்ல வேளை, யாரும் பார்க்கலை"

பொன்மொழி

"முதலில் உங்களை அவர்கள் உதாசினப்படுத்துவர், பிறகு உங்களைக் கண்டு அவர்கள் எள்ளி நகையாடுவர், பிறகு உங்களுக்கு எதிராக சண்டையிடுவர், பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்"                            - மகாத்மா காந்தி 

குவிஸ்

ஒரு செய்தியை எளிதில் உலகம் முழுதுவதும் பரவச் செய்வது எப்படி?

ஏதாவது ஒரு பெண்ணிடம் அந்தச் செய்தியைச் சொல்லி "இது ரகசியம், யாரிடமும் சொல்லக் கூடாது" என்று சொல்லிவிட்டால் போதும்.

கவிதை

என்னுடையது
உன்னுடையது
என்ற 
சண்டையே எதற்கு
நானே
உனது
என்னும்போது
ஆதலால்
கண்ணே
..
..
..
..
..
..
..
..
..
..
..
என் செல்லுக்கும்
நீயே 
ரீசார்ஜ்
செய்துவிடு!


ஜோக் 
நடு இரவில் மனைவி கணவனை எழுப்பி,"என்னங்க, யாரோ நம்ம கிச்சன்ல நுழைஞ்சுட்டாங்கன்னு நினைக்கிறேன், அங்க நான் சமைச்சு வச்சதை எடுத்து சாப்பிடற சத்தம் கேக்குது"
கணவன் கேட்டான், "இப்ப நான் யாருக்கு போன் போடறது, போலீசுக்கா, இல்லை ஆம்புலன்சுக்கா?" 

16 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெங்கட் said...

// "இப்ப நான் யாருக்கு போன் போடறது,
போலீசுக்கா, இல்லை ஆம்புலன்சுக்கா?" //

கடைசில உங்க பக்கத்து வீட்டுக்காரரு..
உங்களை போலீஸ்ல பிடிச்சி குடுத்தாரா.?
இல்ல ஆம்புலன்ஸ்ல அனுப்பினாரா..?

பெசொவி said...

@ venkat

போலீஸ்ல தான் பிடிச்சு குடுத்தார், ஆனா ஒரு சாப்பாடு வாங்கிக் குடுத்து தப்பிச்சுட்டேன்.
நம்ம சிரிப்பு போலீசைத் தானே சொன்னீங்க?

வெங்கட் said...

// போலீஸ்ல தான் பிடிச்சு குடுத்தார், ஆனா ஒரு சாப்பாடு வாங்கிக் குடுத்து தப்பிச்சுட்டேன். //

அப்ப அன்னிக்கு அந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டு ஆம்புலன்ஸ்ல போனது
நம்ம போலீஸ் தானா..?!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு செய்தியை எளிதில் உலகம் முழுதுவதும் பரவச் செய்வது எப்படி?
ஏதாவது ஒரு பெண்ணிடம் அந்தச் செய்தியைச் சொல்லி "இது ரகசியம், யாரிடமும் சொல்லக் கூடாது" என்று சொல்லிவிட்டால் போதும்.//

ஆணாதிக்கவாதி PSV ஒழிக

rajamelaiyur said...

//
வாழ்க்கையில் விழுவதும் எழுவதும் சகஜம்.. எங்காவது நீங்கள் சறுக்கி விழுந்து விட்டால் பயப்பட வேண்டாம்; எழுங்கள், தூசியைத் தட்டிவிட்டு தைரியமாக நிமிர்ந்து நில்லுங்கள், நின்று சொல்லுங்கள் ................................................................................................................................................... "நல்ல வேளை, யாரும் பார்க்கலை"


//

அட நல்ல வழியா இருக்கே .. இனி எப்படி தான் சொல்லுவேன் ...

வலைசரத்தில் நான் ..
வாங்க வசமா மாட்டிகிட்டிங்களா ?

ஷர்புதீன் said...

என்னாச்சு?... சந்தையிலே சரக்கு குறைவா இருக்கு ?

Anonymous said...

ha ha ha ., kavithai + joke top
rasithen :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////எங்காவது நீங்கள் சறுக்கி விழுந்து விட்டால் பயப்பட வேண்டாம்; எழுங்கள், தூசியைத் தட்டிவிட்டு தைரியமாக நிமிர்ந்து நில்லுங்கள்,///////

தூசியே இல்லேன்னா என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////"முதலில் உங்களை அவர்கள் உதாசினப்படுத்துவர், பிறகு உங்களைக் கண்டு அவர்கள் எள்ளி நகையாடுவர், பிறகு உங்களுக்கு எதிராக சண்டையிடுவர், பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" ////////

இதுக்கு மொதல்லயே சண்டைய தொடங்கிட்டம்னா அப்பவே ஜெயிச்சிடலாம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////என் செல்லுக்கும்நீயே ரீசார்ஜ்செய்துவிடு!///////

இது உங்க புது கேர்ள்பிரண்டு சொன்னதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// "இப்ப நான் யாருக்கு போன் போடறது, போலீசுக்கா, இல்லை ஆம்புலன்சுக்கா?" /////////

இப்போ எங்கே இருந்து பதிவு போடுறீங்க, ஹாஸ்ப்பிட்டலா, ஜெயிலா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஒரு செய்தியை எளிதில் உலகம் முழுதுவதும் பரவச் செய்வது எப்படி?
ஏதாவது ஒரு பெண்ணிடம் அந்தச் செய்தியைச் சொல்லி "இது ரகசியம், யாரிடமும் சொல்லக் கூடாது" என்று சொல்லிவிட்டால் போதும்.//

ஆணாதிக்கவாதி PSV ஒழிக
//////////

பெண்ணாதிக்கவாதி ரமேஷ் ஒழிக....!

Madhavan Srinivasagopalan said...

நானும் வந்துட்டேன்யா.. வந்துட்டேன்..

மங்குனி அமைச்சர் said...

"நல்ல வேளை, யாரும் பார்க்கலை"///

paarraa ithu voru mettaraa ??? yenga parambaraiye ippadiththaan

மங்குனி அமைச்சர் said...

ன் செல்லுக்கும்நீயே ரீசார்ஜ்செய்துவிடு!///

hi.hi.hi..........same blood

கோவை நேரம் said...

ஹி..ஹி..ஹி.. நல்ல நகைச்சுவை ... அருமையான பதிவு