அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, October 10, 2011

நான் என் மகளிடம் வாங்கிய பல்பு - பாகம் இரண்டு

முன் டிஸ்கி: இது சென்ற பதிவின் தொடர்ச்சி 

அந்தப் புதிருக்கு விடை பதிவின் பின்னூட்டத்திலேயே இருக்குது. நான் என் மகளிடம் விடையைச் சொன்னேன். "ஆஹா..........." என்று அதிர்ந்தவள் "சரி, நான் ஒரு புதிர் கேக்குறேன், நீ பதில் சொல்லு" என்றாள்.

"அமாவாசை கும்மிருட்டு. ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ரோட்டிலயும் விளக்கு இல்லை, கார்லயும் லைட்டு எரியலை. ஒரு ஆளு காரை ஓட்டிகிட்டு வர்றாரு, இன்னொரு வயசானவரு கருப்பு குடையைப் பிடிசுகிட்டு கைல டார்ச் லைட்டும் இல்லாம நடந்து வர்றாரு. இருந்தாலும்,இந்த டிரைவர் அந்த வயசானவர் மேல மோதாம காரை ஓட்டிகிட்டு போயிடறாரு, எப்படி?"

நான் ரொம்ப யோசித்தேன். என்னால் பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கி "சரி, நீயே சொல்லு", என்றேன்! என்ன பதில் சொல்லியிருப்பாள், நான் பல்பு வாங்கியது எப்படி? விவரம் நாளை மாலை! உங்கள் யூகங்களை பின்னூட்டலாம்.

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

அனு said...

ரெண்டு பேரும் வேற வேற வழியில போயிருப்பாங்க.. :)

Madhavan Srinivasagopalan said...

இதென்ன பெரிய விஷயம்..
அந்தப் பெரியவரு.. 'நடை பாதையில'(pedestrian lane ) நடக்குராறு..
கார் அதுக்கான லேன்ல போகுது..

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தையிடம் பல்பு வாங்குவது சுகானுபவம்...!!!

RaThi Mullai said...

காருக்கு பின்னாடி பெரியவர் நடந்து வர்றார்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இருவரும் வேறு வேறு திசையில் நடக்கின்றனர்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ...
இந்த மாத SUPER BLOGGER விருது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹெட்லைட் எரியலேன்னு சொல்லலியே?

கலாநேசன் said...

கார்லதான் லைட் இருக்கே...

Yoga.s.FR said...

நல்ல பொண்ணுங்க!நல்ல அப்பா! சுத்த லூசுக் கூட்டமால்ல இருக்கும் போலருக்கு?????????

கோகுல் said...

கண்பியூசன் ஆப் இந்தியா!

வெங்கட் நாகராஜ் said...

:)

சிவா said...

தீர்ப்பு என்னவாகவும் இருக்கட்டும்....பதில் உங்களுக்கு தெரிந்திருந்தாலும் பதிலை தவறாகவே சொல்லுங்கள்...அந்த மகளின் முகத்தில் தெரியும், ஆயிரம், ஆயிரம் மகிழ்ச்சிகள்...நீங்கள் சரியான பதிலை சொல்லிவிட்டால் அவளுக்கு வருத்தமாகி விடும். அதானால் நான் பதில் சொல்லப் போவதில்லை. அதை சொன்னால் மகள் முகம் வாடி விடும்..அதனால் எனக்கு தெரியாது என்றே வைத்து கொள்வோம்...இதற்க்கு பெயர் பல்பு அல்ல...லொள் பூ

cho visiri said...

"ஒரு ஆளு காரை ஓட்டிகிட்டு வர்றாரு"

Yhtrr equally possible solution.
Case I Since "Varraru" is suded in both cases (car driver andpedastrian) they go in the same direction. Pedastrian obviously follows the car and both have reached the destination safely.

Case two: Since car driver continuously sounds Horn, the pedastrian keeps to the left and let the car go past him from the opposite direction.

Case Three(?): It was a cable car.(What a brilliant idea?????!!!!!).
Or, wait...wait....
The car is running on road and the man is walking on a rope.....(Hi.....Hi....)