அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, October 29, 2011

புதிர்ப்போட்டி - பரிசு அறிவிப்பு

  


ஏதோ விளையாட்டுக்கு தான் இவரு போட்டி அறிவிசிருக்காருன்னு நினைசுகிட்டு இந்த போட்டி(??!!)யில் கலந்துகொள்ளாத அனைவருக்கும் என் அனுதாபங்கள்!

முதலில் கேள்வியை நல்லா பாருங்க,  
1,2,3,5,?,7,8,9  

1,2,3,அப்புறம் ஒரு நம்பர் விட்டு 5 வருது அதே மாதிரி 7,8,9, இருக்கும்போது 7-க்கு முன்னாடி ஒரு நம்பர் விட்டு(அதாவது 6-ஐ விட்டு) 5 தான வரணும்?

எஸ், 5 தான் விடை.  ஆனா இதை யாரும் சொல்லலை ஒருத்தரைத் தவிர. அதே மாதிரி இந்த வரியை முடிக்க சொல்லியிருந்தேன், 
 நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப் படிக்கிறேன் ஏனென்றால் ...........................................................................................
இதற்கு வந்திருந்த விடைகள் அனைத்துமே (சுமார் ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி.............எங்கியோ கேட்ட மாதிரி இருக்குதோ?) நன்றாக இருந்தாலும், கீழ்க்கண்ட வரியே எனக்கு பிடித்திருந்தது.
 நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப் படிக்கிறேன் ஏனென்றால் ங்கொய்யால, என் ப்ளாகை எனக்கே பிடிக்கலைனா எப்படி?
(ஹிஹி, நான் எழுதினதுதான்)

ஆகையால் இந்த ரெண்டு விடையையும் சரியா சொல்லியிருந்த எனக்குத்தான் அந்த மூன்று பரிசுகளும் என்று மகிழ்வோடு தெரிவித்துக் கொல்கிறேன்.

என்ன முறைக்கறீங்க? அந்தப் போட்டியில ரெண்டாவது விதியையும் கடைசி விதியையும் நல்லா மறுபடியும் படிங்க.

மத்தபடி இந்தப் போட்டியில் கலந்துகொண்டும், கலந்துகொள்ளாமலும் அந்தப் பதிவையும் இந்த பதிவையும் படித்தும் படிக்காமலும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி.  

வெறுமனே நன்றி சொல்லிவிட்டுப் போவது பிடிக்காததால், உங்களுக்கு பரிசு தர முடிவு செய்துவிட்டேன். ஆமாம், முந்தைய பதிவில் போட்டிருந்த மூன்று கடிகாரங்களின் படங்களையும் நீங்கள் உங்கள் பதிவிலோ Buzzசிலோ எதில் வேண்டுமானாலும் காப்பி பேஸ்ட் செய்துகொள்ளலாம்....அதுதான் பரிசு.

11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல வேள நான் இங்க வரவே இல்ல.......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடப்பாவி மக்கா...

இப்படியெல்லாம் போட்டியா...

ஆனாலும் வித்தியாசமானத்தான் இருக்கு...

அனு said...

நான் உங்களுக்காக பரிசை விட்டுக் கொடுத்துட்டேன்.. :)

ஸ்ரீராம். said...

எனக்குப் பரிசு கொடுக்காததற்கு நன்றி.

வெங்கட் said...

// நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப்
படிக்கிறேன் ஏனென்றால்..

ங்கொய்யால, என் ப்ளாகை எனக்கே பிடிக்கலைனா
எப்படி? (ஹிஹி, நான் எழுதினதுதான்) //

சூப்பர் சார்.. ஆனா இதை எதுக்கு
ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி
தடவை எழுதி அனுப்பி இருக்கீங்க..?!!!

middleclassmadhavi said...

வெங்கட்டின் கருத்துக்களை நான் ரிப்பீட்டுக்கிறேன்!!

NaSo said...

ஹி..ஹி.. தங்களின் பொன்னான பணி தொடரட்டும்..

rajamelaiyur said...

//
நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப் படிக்கிறேன் ஏனென்றால் ங்கொய்யால, என் ப்ளாகை எனக்கே பிடிக்கலைனா எப்படி?
(ஹிஹி, நான் எழுதினதுதான்)
//
நான் நினைத்தேன் சொல்லிடிங்க .. ஹீ .. ஹீ

Madhavan Srinivasagopalan said...

ரெண்டு நாளா அலுவல் பணிகாரணமாக வெளியூர் சென்றேன்..
அடுத்த தடவ இன்டர்நெட் இல்லாத ஊருக்கு போயிட்டு வரணும்.. இப்ப மாட்டிக்கிட்ட மாதிரி மாட்டிக்கக் கூடாது..

cheena (சீனா) said...

என்ன பெசொவி - பொழுது போகலேன்னா இப்படியும் போடலாமா - தெரியாமப் போச்செ

நம்பிக்கைபாண்டியன் said...

// நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப்
படிக்கிறேன் ஏனென்றால்..

ங்கொய்யால, என் ப்ளாகை எனக்கே பிடிக்கலைனா
எப்படி? (ஹிஹி, நான் எழுதினதுதான்) //

சூப்பர் சார்.. ஆனா இதை எதுக்கு
ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி
தடவை எழுதி அனுப்பி இருக்கீங்க..?!!!
இருவருமே கலக்குறீங்க!