அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, October 28, 2011

பதிவர்களுக்கான போட்டி -

அனைவருக்கும் வணக்கம். நம்ம ப்ளாகில் போட்டி வைத்து பல நாட்கள் ஆகிவிட்டபடியால் இந்தப் போட்டி. மூன்று பரிசுகள் இருக்கின்றன.

போட்டி கேள்வி இதுதான்:

கீழ்க்கண்ட வரிசையில் கேள்விக்குறி இருக்கும் இடத்தில் வரவேண்டிய எண் எது?

1,2,3,5,?,7,8,9

இனி, விதிமுறைகள்:

  1. கேள்விக்கான விடையை உங்கள் ப்ளாகில் வெளியிடவேண்டும்.
  2. போட்டியில் இந்த ப்ளாக் ஓனர் உள்பட யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
  3. கேள்விக்கான விடையுடன் இந்த வாக்கியத்தைப் பூர்த்தி செய்து வெளியிடவும். நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப் படிக்கிறேன் ஏனென்றால் ...........................................................................................(பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி பூர்த்தி செய்யவும்)
சரி, பரிசு என்னவென்று சொல்லவேண்டாமா?  மூன்று சிறந்த கடிகாரங்கள் முதல் மூன்று நபர்களுக்கு.


முதல் பரிசு .
நீங்கள் யூகித்து சரிதான், பிக் பென் கடிகாரம்தான் இது.
இரண்டாம் பரிசு

சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருக்கற நாலு கடிகாரத்துல ஒண்ணுதான் இது!
மூன்றாம் பரிசு
இதில இருக்கற ரெண்டு கடிகாரத்துல ஒன்னு உங்களுக்கு
 முக்கியமான விதி ஒன்றை சொல்ல மறந்துட்டேன். ஒருத்தருக்கே மூணு பரிசும் கிடைக்க வாய்ப்பிருக்கு!

12 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

அனு said...

இதிலிருந்து இதைப் படிக்கிறவங்க நேரம் சரியில்லன்னு தெரியுது.. :)

கோமாளி செல்வா said...

இதிலிருந்து இதைப் படிக்கிறவங்க நேரம் சரியில்லன்னு தெரியுது.. :)(CP)

Madhavan Srinivasagopalan said...

இதிலிருந்து இதைப் படிக்கிறவங்க நேரம் சரியில்லன்னு தெரியுது.. :)(CP) - (CP)

Madhavan Srinivasagopalan said...

தெரியுது.. ஏன் இப்படி எங்கள வருத்தேடுக்கறீங்கனு..
இன்னைக்கு ஃப்ரைடே.

நாகராஜசோழன் MA said...

இதிலிருந்து இதைப் படிக்கிறவங்க நேரம் சரியில்லன்னு தெரியுது.. :)(CP)^3

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கமெண்ட்டுகளை பார்த்தா இந்த ப்ளாக் ஓனருக்கும் நேரம் சரியில்லைன்னு தெரியுது...:) (Original)

எஸ்.கே said...

நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப் படிக்கிறேன் ஏனென்றால்
ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை மூனு வார்த்தை நாலு வார்த்தை ஐந்து வார்த்தை ஆறு வார்த்தை ஏழு வார்த்தை எட்டு வார்த்தை ஒன்பது வார்த்தை பத்து வார்த்தை (பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதியுள்ளேன்)

வைகை said...

நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப் படிக்கிறேன் ஏனென்றால்...... முதல் வரியை படித்ததுமே தூக்கம் நன்றாக வரும் :))

middleclassmadhavi said...

எத்தனை பேர்கள் கடிகாரத்துக்கு போட்டி போடறாங்க...!!

நான் பெசொவியின் ப்ளாகை விரும்பிப் படிக்கிறேன் ஏனென்றால்...... தூக்கத்திலிருந்து புன்னகையோடோ கடுப்போடோ முழித்துக் கொள்ளலாம்!! :-))

வெங்கட் said...

போஸ்ட் மற்றும் கமெண்ட்டுகளை
பார்த்தா கூகுள்க்கு நேரம் சரியில்லைன்னு
தெரியுது....:) ( 100% Original)

kg gouthaman said...

கேள்விக்குறி உள்ள இடத்தில் வரவேண்டிய எண் எட்டு. இது சரியான பதில் என்று சொன்னால், உங்களுக்கு என்னுடைய கைகடிகாரத்தை அனுப்பி வைக்கின்றேன். (என்னோட நேரம் நல்ல நேரம் ..!)

ஸ்ரீராம். said...

எனக்கு இவ்வளவு சின்ன கடிகாரம் வேண்டாம். எனவே நான் போட்டியில் கலந்து கொள்ளாமல் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்து விடுகிறேன்.