அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, November 16, 2009

2012 - சில பகீர் தகவல்கள்

ரெல்லாம் 2012 பத்தி தான் பேச்சா இருக்கு. நம்ம வலைப்பூவில இது பத்தி எழுதலைன்னா அகில உலக பகீர்,திடீர்,உசார்,டகால்டி சித்தர் சங்க எதிர்ப்புக்கு ஆளாக வேண்டுமோ என்று எனக்குள் ஒரு பச்சி சொல்லியதால் இந்த பதிவு. அகத்தியர் முதலிய நிஜமான சித்தர்கள் மன்னிப்பார்களாக!

2012 ல் என்ன நடக்கும்?


இன்னைக்கு மதியம் என் கனவுல வந்த காரண காரிய கலக (கழக அல்ல) சித்தர் சொன்னது இது:-

1. உலகம் பூரா எல்லாரும் பயன்படுத்தற காலண்டர்ல வருஷம் 2012 என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

2. ஜனவரி ஒன்றாந்தேதி அன்னிக்கு புத்தாண்டு கொண்டாடற பெரும்பாலான மக்கள் தினமும் ஒரு நாளை இழந்து கொண்டுதான் இருப்பார்கள்.

3. சரியா பதினஞ்சு நாள் கழிச்சு "இந்திய தொலைக்காட்சியில் முதன் முறையாக" பல தொல்லைக்காட்சிகளில் புது படம் போடுவாங்க.

4. தமிழ் நாட்டில சில பேர் அன்னிக்கு தமிழ் புத்தாண்டும் பலர் பொங்கல் பண்டிகை மட்டும் கொண்டாடுவாங்க.

5. தினமும் காலையில் கிழக்கே உதிக்கும் சூரியன் மாலை வந்ததும் யாருமே எதிர் பார்க்கும் வண்ணம் மேற்கில் மறையும். அதே வேளையில் மாதத்தில் சில நாட்கள் தவிர இரவுப் பொழுதில் சந்திரனைக் காணலாம்.

6. "அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலோடும், பிரதமர் மன்மோகன் சிங்க் தலைமையிலும் எங்கள் அரசு நிச்சயம் ஐந்தாண்டு காலம் நிறைவு செய்யும்" என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் பேட்டி அளிப்பார். (தலைவர் யாருங்கறத எந்த சித்தராலும் சொல்ல முடியாது - கனவுல வந்த சித்தர்)

7. "விரைவில் தமிழ் நாட்டில் காமராஜர் ஆட்சி மலரும்" என்று திரு இ.வி.கே.எஸ். இளங்கோவன் அவ்வப்போது பேட்டி அளிப்பார்.

8. "விரைவில் தமிழர்கள் அவர்கள் சொந்த இடங்களில் குடி அமர்த்தப் படுவார்கள்" என்று இலங்கை குடியரசு தலைவர் அறிவிப்பார்.

9 "தமிழ் நாட்டில் பூரண மது விலக்கு கொண்டு வரப் பட வேண்டும்" என்று திரு. ராமதாஸ் வேண்டுகோள் விடுப்பார்.

10. ஜனவரி 25 ந்தேதி அன்று இரவு டி.வி.யில் தோன்றும் இந்திய ஜனாபதி நாட்டில் நிலவும் வறட்சி, வேலை இன்மை குறித்து கவலை தெரிவிப்பார்; மக்கள் அனைவரும் உழைத்து இந்த நிலை மாற அவர் வேண்டுகோள் விடுப்பார்.


11. இதே கவலையை பிரதமர் தன்னுடைய சுதந்திர தினப் பேருரையில் ஆகஸ்ட் 15 அன்னிக்கு வெளியிடுவார், வேண்டுகோளும் விடுப்பார். தீவிரவாதத்தை தனது அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதையும் குறிப்பிடுவார்.


மற்ற பல பகீர் தகவல்கள் அடுத்தமுறை அவர் என் கனவில் வரும்போது சொல்வதாக சொன்னார். அனேகமாக, நிறைய மக்கள் கனவிலும் அவர் வந்திருப்பார், சில தகவல்கள் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன், கேட்டவர்கள், பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

R.Gopi said...

த‌லைவா

ப‌கீர் எல்லாம் பெரிய‌ லெவ‌ல் திகிலால்ல‌ இருக்கு...

இப்போதான் இட்லிவ‌டையில‌ இது மாதிரி ஒண்ணு பார்த்தேன்... வந்து இங்க‌ பார்த்தா, இங்க‌யும் ஒண்ணு...

இன்னும் லைன் க‌ட்டி எவ்ளோ பேரோ??

R.Gopi said...

தலைவா...

இவ்ளோ டீடெயில் சொல்லி இருக்கீங்க... என்னோட டவுட் என்னன்னா??

2012 லயும் "குட் ஃப்ரைடே" வெள்ளிக்கிழமைதானே வரும்??

நாஞ்சில் பிரதாப் said...

முடில...

ஆமா யாரு உங்களுக்கு அகத்தியர் சித்தர்னு சொல்லிக்கொடுத்தது.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நாஞ்சில் பிரதாப் said...
முடில...

ஆமா யாரு உங்களுக்கு அகத்தியர் சித்தர்னு சொல்லிக்கொடுத்தது.
//

அகத்தியர் சித்தர் என்று google.co.in ல் தேடிப் பாருங்க தலைவா!

கேசவன் .கு said...

மொக்கையா ஒரு பதிவு ம்ஹும் நல்லா இருக்கு !

ஜெகநாதன் said...

நல்லாயிருக்கு உங்க காரண காரிய கலக சித்தர் இயம்பியது.
காரணமாத்தான் ​கேக்கி​றேன்... என்ன காரியம் என்று இப்படி ​மொக்​கை​யைப் ​போட்டு ஒரு வருஷத்துக்​கே கலகத்​தை உண்டு பண்றீங்க?
என் கனவில வந்த சுருட்டு சாமியாரு,
​மொக்​கை ​போடாம எழுதற பிளாக்குகள் எல்லாம் ​வைரஸ் முழுங்கிடும்; ​மொக்​கைக்கு பின்னூ ​போடாத பதிவர்களுக்கு முதல் ​பெக்கி​லே​யே வாமீட் வந்துரும் என்று ​சொல்லிவிட்டு பு​கையாய் மறைஞ்சிட்டாரு!
நான் எஸ்​கேப்புதா​னே???

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//R.Gopi said...
தலைவா...

இவ்ளோ டீடெயில் சொல்லி இருக்கீங்க... என்னோட டவுட் என்னன்னா??

2012 லயும் "குட் ஃப்ரைடே" வெள்ளிக்கிழமைதானே வரும்??
//
அதைக் கேக்க மறந்திட்டேனே! சரி, நாளைக்கு கனவுல வரும்போது கேட்டு சொல்றேன். அது சரி, அவர் உங்க கனவுல வந்து எதுவும் சொல்லலையா?


//கேசவன் .கு said...
மொக்கையா ஒரு பதிவு ம்ஹும் நல்லா இருக்கு !

ஜெகநாதன் said...
நல்லாயிருக்கு உங்க காரண காரிய கலக சித்தர் இயம்பியது.
காரணமாத்தான் ​கேக்கி​றேன்... என்ன காரியம் என்று இப்படி ​மொக்​கை​யைப் ​போட்டு ஒரு வருஷத்துக்​கே கலகத்​தை உண்டு பண்றீங்க?
என் கனவில வந்த சுருட்டு சாமியாரு,
​மொக்​கை ​போடாம எழுதற பிளாக்குகள் எல்லாம் ​வைரஸ் முழுங்கிடும்; ​மொக்​கைக்கு பின்னூ ​போடாத பதிவர்களுக்கு முதல் ​பெக்கி​லே​யே வாமீட் வந்துரும் என்று ​சொல்லிவிட்டு பு​கையாய் மறைஞ்சிட்டாரு!
நான் எஸ்​கேப்புதா​னே???
//
அதான் மொக்கைன்னு வகைகள் பகுதியில் போட்டுட்டேனே, அப்புறம் என்ன கேள்வி?

நசரேயன் said...

எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வருகைக்கு நன்றி,நசரேயன்

கனககோபி said...

அட...
அசத்தலாவெல்லோ இருக்கு...
ஹி ஹி...
அசத்தல் பதிவு போங்கள்.....

shortfilmindia.com said...

நல்லாத்தான் அரசியல் பேசறீங்க..:)

கேபிள் சங்கர்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//shortfilmindia.com said...
நல்லாத்தான் அரசியல் பேசறீங்க..:)

கேபிள் சங்கர்//

வாங்க கேபிளாரே, உங்கள் வருகைக்கு நன்றி.
அரசியலா, அது கிலோ என்ன விலை? எங்க கிடைக்கும்?

பச்ச புள்ள said...

கைப்புள்ள கசின நீங்க ..:)அவர மாதிரியா யோசிக்க முடியுதே