அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, November 15, 2009

மத நல்லிணக்கம்

மனிதன் வாழும் வகையைக் கூறும்
வழிமுறை அதுவே மதமாகும்.

புனிதம் என்பது புத்தியைத் தீட்டி
புதுமை காணும் விதமாகும்.

இயேசு, நபிகள், நானக் என்று
எத்தனை விதமாய்த் தூதர்கள்
- இறை தூதர்கள்
பேசும் உண்மை எதுவெனக் கேட்டால்
பெரிதோர் உண்மை விளங்கும்.

"என்னை அறிந்தவன் என்னை அடைவான்"
இதுவே கீதையின் சுருக்கம்

"என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான்"
இதுவே பைபிளின் விளக்கம்

இவ்விரண்டில் என்ன கண்டோம் வேறுபாடு
இரண்டுக்கும் இடையில் உண்டோ மாறுபாடு?

இறைவன் ஒருவன் இருக்கின்றான்
என்றும் நம்மைக் காக்கின்றான்
மறைகள் இதுவே சொல்லும்
மறவோம் இதனை என்றும்.

மதங்கள் இல்லா மனிதர்கள்
கரைகள் இல்லா நதிகள்
கரைகள் நதியை வழிப்படுத்த!
மதங்கள் மனிதனை நெறிப்படுத்த!

மரம் வளர்ப்போம்
மழை வரும்
வளம் வளரும்.

மனிதம் வளர்ப்போம் - அது
மனிதனை வளர்க்கும் - சக
மனிதரை வளைக்கும்
சுகத்தை அளிக்கும் - அகிலமே
அன்பில் திளைக்கும்.

மதவெறியும் வேண்டாம் - பிற
மத வெறுப்பும் வேண்டாம் -
இரண்டுமே மனிதரைக் கொல்லும்
இதுவே மறைகள் சொல்லும்.

சக மனிதரைக் கொன்று குவிக்கும்
மதவெறி
; அது மனித வெறி!
அல்ல, அல்ல, மிருக வெறி!

மனிதரை மனிதராக்கும் ,
சற்றும் மேலே
புனிதராக்கும் மதம் எம்மதம்
அதுவே நமக்கு சம்மதம்.

மதவெறி உலரட்டும்
மனித நேயம் மலரட்டும்
இனிய பொழுது புலரட்டும்
அகிலமே களை கட்டட்டும்
அன்பின் களை சொட்டட்டும்!

22 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Prathap Kumar S. said...

அழுவாச்சி அழுவாச்சியா வர்து தல....

நல்லாருக்கு...மதவெறி ஒழிப்போம். சமத்துவோம் காப்போம்...

R.Gopi said...

//மனிதன் வாழும் வகையைக் கூறும்
வழிமுறை அதுவே மதமாகும்.

புனிதம் என்பது புத்தியைத் தீட்டி
புதுமை காணும் விதமாகும்.//

மதத்திற்கு ஒரு நல்ல விளக்கம் இது...

//"என்னை அறிந்தவன் என்னை அடைவான்"
இதுவே கீதையின் சுருக்கம்

"என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான்"
இதுவே பைபிளின் விளக்கம்

இவ்விரண்டில் என்ன கண்டோம் வேறுபாடு
இரண்டுக்கும் இடையில் உண்டோ மாறுபாடு?//

ந‌ல்ல‌ கேள்வி... இத‌ற்கு ப‌தில் க‌ண்டால், உல‌கில் பாதி ச‌ச்ச‌ர‌வுக‌ள் தீரும்...

//இறைவன் ஒருவன் இருக்கின்றான்
என்றும் நம்மைக் காக்கின்றான்
மறைகள் இதுவே சொல்லும்
மறவோம் இதனை என்றும்.//

ந‌ன்றாக‌ சொன்னீர்க‌ள்...

//மதங்கள் இல்லா மனிதர்கள்
கரைகள் இல்லா நதிகள்
கரைகள் நதியை வழிப்படுத்த!
மதங்கள் மனிதனை நெறிப்படுத்த!//

மிக‌ ந‌ல்ல‌ ஒப்பீடு...

//மரம் வளர்ப்போம்
மழை வரும்
வளம் வளரும்.

மனிதம் வளர்ப்போம் - அது
மனிதனை வளர்க்கும் - சக
மனிதரை வளைக்கும்
சுகத்தை அளிக்கும் - அகிலமே
அன்பில் திளைக்கும்.//

ம‌ர‌ம், ம‌ழை, ம‌னித‌ம் இத‌ற்கு நீங்க‌ள் கொடுத்த‌ இணைப்பு மிக‌ ந‌ன்றாக‌ உள்ள‌து..

//மதவெறியும் வேண்டாம் - பிற
மத வெறுப்பும் வேண்டாம் -
இரண்டுமே மனிதரைக் கொல்லும்
இதுவே மறைகள் சொல்லும்.//

இதில் உல‌கின் பாதி ச‌ண்டைக்கு தீர்வு உள்ள‌து...

//சக மனிதரைக் கொன்று குவிக்கும்
மதவெறி; அது மனித வெறி
அல்ல, அல்ல, மிருக வெறி//

ம்ம்... அந்த மிருக வெறியை ர‌த்த‌ நிற‌த்தில் கோடிட்டு காட்டிய‌து பாராட்ட‌த்த‌க்க‌து...

//மனிதரை மனிதராக்கும் ,
சற்றும் மேலே
புனிதராக்கும் மதம் எம்மதம்
அதுவே நமக்கு சம்மதம்.//

எம்ம‌த‌மும் ச‌ம்ம‌த‌ம்... நல்ல‌ கூற்று...

//மதவெறி உலரட்டும்
மனித நேயம் மலரட்டும்
இனிய பொழுது புலரட்டும்
அகிலமே களை கட்டட்டும்
அன்பின் களை சொட்டட்டும்!//

அன்பு மலர்கள் ம‌ல‌ர‌ட்டும்... இங்கு
அமைதி சாம்ராஜ்ய‌ம் உருவாக‌ட்டும்....

ந‌ல்ல‌ சிந்த‌னைக‌ளை உள்ள‌ட‌க்கிய‌ அருமையான‌ க‌விதை... வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா...

பெசொவி said...

நன்றி திரு கோபி.

பத்தி பத்தியாக ரசித்து பின்னூட்டம் போட்ட உங்களுக்கு மிக்க நன்றி!

உங்கள் பின்னூட்டம் என்னை மேலும் ஊக்கப் படுத்தும்.

நன்றி, மீண்டும் வருக!

Anonymous said...

படிக்கும் போதே இதெல்லாம் சாத்தியமாகாத என ஏங்குது மனசு..ம்ம்ம் நல்லதையே எதிர்பார்ப்போம் நாமும் அவ்வழியே நடப்போம்

பெசொவி said...

//நாஞ்சில் பிரதாப் said...
அழுவாச்சி அழுவாச்சியா வர்து தல....

நல்லாருக்கு...மதவெறி ஒழிப்போம். சமத்துவோம் காப்போம்...//

வாங்க தல, உங்க கருத்துக்கு நன்றி.

cho visiri said...

Gopijee said .........

///மதங்கள் இல்லா மனிதர்கள்
கரைகள் இல்லா நதிகள்
கரைகள் நதியை வழிப்படுத்த!
மதங்கள் மனிதனை நெறிப்படுத்த!//

மிக‌ ந‌ல்ல‌ ஒப்பீடு...

I beg to differ.
Wrong comparison.
River does need two banks. Every Humanbeing should follow only one (his own) religion.
Anbu malaravendam ..... Aenenil malarndaal orunaall vaadividum abhaayam ulladu.

Anbu anndammellaam paravattum.

Nevertheless, a good effort by the poet(?!?).

பெசொவி said...

//தமிழரசி said...
படிக்கும் போதே இதெல்லாம் சாத்தியமாகாத என ஏங்குது மனசு..ம்ம்ம் நல்லதையே எதிர்பார்ப்போம் நாமும் அவ்வழியே நடப்போம்
//
தமிழுக்கு என் நன்றி!
உங்கள் ஆதங்கம் புரிகிறது, எண்ணம் பலிக்க இறைவனை வணங்குகிறேன்.

பெசொவி said...

//Cho visiri said:

I beg to differ.
Wrong comparison.
River does need two banks. Every Humanbeing should follow only one (his own) religion.
//
சோ விசிறின்னு பெயர் வச்சுட்டு differ ஆகலைன்னா எப்படி?

கரைகள் இரண்டு சேர்ந்து ஆற்றை வழிப்படுத்துவது போல,
மதம் மனிதனை நெறிப்படுத்துகிறது என்பதையே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.

இங்கு கரைகளை collective noun ஆக கொண்டு கவிதையைப் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

//Anbu malaravendam ..... Aenenil malarndaal orunaall vaadividum abhaayam ulladu.

Anbu anndammellaam paravattum.//

முதலில் அன்பு மலரட்டும், அதன் பின் அதன் மணம் எங்கும் வீசட்டும். ஒரு தோட்டத்தில் ஒரு மலர் வாடிவிட்டாலும், பின் வரும் மலர்களால் மணம் எங்கும் நிறைந்திருப்பது போல், அன்பின் மணம் எங்கும் வீசும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

//Nevertheless, a good effort by the poet(?!?)//
எல்லாரும் கேட்டுக்குங்க, நானும் கவிஞன்தான், கவிஞன்தான்,.......
நன்றி சோ விசிறி அவர்களே,
வந்து படித்து கருத்து பகிர்ந்ததற்கு நன்றிகள்!

R.Gopi said...

அன்பு என்ற சொல்லே மறைந்து, வழக்கொழிந்து போய்விட இருக்கும் நிலையில் இந்த கவிதையை வடித்த நண்பர் சொல்வது பொல், குறைந்த பட்சம் மலரட்டுமே, சிறிது வாசம் வீச‌ட்டுமே, பின் ஒரு மலரோடு நிற்காமல், பல மலர்கள் மலரட்டும், நறுமணம் வீசட்டும்... இந்த நிலை தொடரட்டும்...

இதைதானே சார் சொல்ல முயற்சித்தார்... அதை தானே நானும் வழிமொழிந்தேன்...

கவிதையையும், என் பின்னூட்டத்தையும் படித்து பதில் அளித்த சோ விசிறி அவர்களே... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.....

சென்ஷி said...

காலடி வலைபதிவின் தீவிர அதி தீவிர ரசிகர் மன்றம் சார்பாக வருகையை உறுதி செய்துக் கொள்கின்றோம் :)

பெசொவி said...

ஓ, சென்ஷி வாங்க, வாங்க. உங்க வருகை பெருமைப் பட வைக்கிறது.
(அது சரி, கவிதை(?)யைப் பற்றி ஒன்னும் சொல்லலையே?)

பெசொவி said...

//R.Gopi said...
அன்பு என்ற சொல்லே மறைந்து, வழக்கொழிந்து போய்விட இருக்கும் நிலையில் இந்த கவிதையை வடித்த நண்பர் சொல்வது பொல், குறைந்த பட்சம் மலரட்டுமே, சிறிது வாசம் வீச‌ட்டுமே, பின் ஒரு மலரோடு நிற்காமல், பல மலர்கள் மலரட்டும், நறுமணம் வீசட்டும்... இந்த நிலை தொடரட்டும்...

இதைதானே சார் சொல்ல முயற்சித்தார்... அதை தானே நானும் வழிமொழிந்தேன்...

கவிதையையும், என் பின்னூட்டத்தையும் படித்து பதில் அளித்த சோ விசிறி அவர்களே... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.....//
பதிவுக்குப் போட்ட கமெண்ட்டுக்கு ஒரு கமென்ட் வந்தவுடனே, ஒரு கமென்ட் போட்டேன், அதுக்கு ஒரு கமென்ட் போட்டீங்களே, நன்றி தல! (ஸ்............சொல்ல வந்ததை சொல்லிட்டனா?)

R.Gopi said...

//பதிவுக்குப் போட்ட கமெண்ட்டுக்கு ஒரு கமென்ட் வந்தவுடனே, ஒரு கமென்ட் போட்டேன், அதுக்கு ஒரு கமென்ட் போட்டீங்களே, நன்றி தல! (ஸ்............சொல்ல வந்ததை சொல்லிட்டனா?)//

*********

உங்கள் பதிவில் வந்த கமெண்டுக்கு நான் வந்து பதில் கமெண்ட் போட்டதற்கு, நீங்க மறுபடியும் பதில் கமெண்ட் போட்டீங்களா? ஆஹா... மிக்க நன்றி "தலீவா"... (உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா...... என்னா சுத்தல்.......கேக்க வந்தத கேட்டுட்டேனா??)

இங்க சொன்னது எல்லாருக்கும் புரிஞ்சுருக்கும்னு சொல்லல... ஆனா, புரிஞ்சுருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல வந்தேன்....

ஒரு விஷயத்தை யாரும் புரிந்து கொள்ள‌ கூடாது / புரிந்து கொள்ளாமல் இருக்கணும் / புரியாத மாதிரி சொல்வதற்குள் நாக்கு தள்ளி விடுகிற‌து...

பெசொவி said...

இதனால் சகலமானவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், கோபிக்கும் எனக்கும் இடையிலான லாவணிக்கு லாவணி பாடுவது இந்த கமெண்டோடு முடிவுக்கு வருகிறது.

R.Gopi said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இதனால் சகலமானவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், கோபிக்கும் எனக்கும் இடையிலான லாவணிக்கு லாவணி பாடுவது இந்த கமெண்டோடு முடிவுக்கு வருகிறது.//

********

இதை நான் வ‌ழிமொழிகிறேன்...

ம‌றுப‌டியும் மொதல்ல இருந்தா!!!!!?????.................

Anonymous said...

கவிதை உரைநடையாக இருப்பதாக எனக்கு படுகிறது. எதுகை மோனை நன்றாக கை வருகிறது உங்களுக்கு.
நல்லினக்க வரிகள்

RAMYA said...

//
இறைவன் ஒருவன் இருக்கின்றான்
என்றும் நம்மைக் காக்கின்றான்
மறைகள் இதுவே சொல்லும்
மறவோம் இதனை என்றும்.
//

ஆமாம் அருமையா சொல்லி இருக்கீங்க
உணமைதான் உங்கள் கூற்றும்!!

Nathanjagk said...

//// கவிஞ ​பெருமக்கா.. உங்க​ளை யாரும் பிடிக்க​லேன்னு ​சொன்னா கவ​லைப் படாதீங்க... உட​னே நம் காலடியின் கவி​தை பட்ட​றையில் பங்​கேற்று, கவிஞர் அ​டையாள அட்​டையும் ​பெற்றுக் ​கொள்ளவும். உங்க​ளை பிடிக்காது என்று ​சொன்னவர்கள் ​​மேல் ஆஸிட் அல்லது நீங்க​​ளே எழுதிய கவி​தைப் புத்தகம் வீசப்படும்!//
உங்களோட இந்த பதில நம்பி என்னோட கவிதையை(?) அனுப்பறேன். படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க.
ஒரே கல்லுல மூணு மாங்கா!! - என் வலைப்பூவுக்கு ஓசி விளம்பரம் தான் மூணாவது மாங்கா).
//
இது கவி​தைதான்... நல்லா ​டெக்க​ரேட் பண்ணியிருக்கீங்க.. ஒடச்சி ஒடச்சி எழுதியிருக்கீங்க.. அப்பால ஆச்சரிய குறி​யெல்லாம் கூட கரீக்ட்டா ​போட்டிருக்கீங்க!
வாழ்த்துக்கள்!

பெசொவி said...

அழைப்பை ஏற்று வருகை புரிந்ததற்கு மிக்க நன்றி, ஜெகநாதன்!
ஒரு வாக்கியத்தை உடைச்சு உடைச்சு எழுதினாலே கவிதைதான்னு எனக்கு சொல்லி கொடுத்தவங்களுக்கு உங்க விமர்சனத்தை அர்ப்பணிக்கிறேன்.

kandathai sollugiren said...

நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் இவ்வளவு ஆழமாக சிந்திக்க ஒரு வித்யாசமான விஸ்தாரமான மனது வேண்டும். அது உனக்கு இருக்கிறது. பாராட்டுக்கள். என்றும் அன்புடன் சக்தி.

kandathai sollugiren said...

நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் இவ்வளவு ஆழமாக சிந்திக்க ஒரு வித்யாசமான விஸ்தாரமான மனது வேண்டும். அது உனக்கு இருக்கிறது. பாராட்டுக்கள். என்றும் அன்புடன் சக்தி.

n.sakthi said...

நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் இவ்வளவு ஆழமாக சிந்திக்க ஒரு வித்யாசமான விஸ்தாரமான மனது வேண்டும். அது உனக்கு இருக்கிறது. பாராட்டுக்கள். என்றும் அன்புடன் சக்தி.