அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, November 23, 2009

வாழ்க்கை - கோபப் படாதே சகோதரா.....(தொடர்ச்சி)

என்னுடைய முந்தைய கட்டுரையைப் படித்து விட்டு சில நண்பர்கள் சில கேள்விகளை எழுப்பினார்கள்.

நீங்கள் எழுதியதெல்லாம் சரிதான். ஆனால் இதெல்லாம் நடைமுறையில் ஒத்து வருமா? அதிலும் குறிப்பாக நடுத்தெரு சண்டையில் போலீஸ் ஸ்டேஷன் போய் சாட்சி சொல்வது ரொம்ப ஓவர். அப்படி இப்படி என்றெல்லாம் சொன்னார்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் ஒன்றும் எல்லோரையும் அப்படி செய்யச் சொல்லவில்லை. அநியாயத்தைக் கண்டு பொங்குகிறேன் பேர்வழி என்று நடுத் தெருவில் தானும் கோதாவில் இறங்க நினைப்பவர்களுக்குத் தான் அந்த அட்வைஸ். உங்கள் சினத்தை நடுத் தெருவில் வெளிப்படுத்தக் கூடிய துணிவில் பாதி அளவு இருந்தால் போதும், போலீஸ், சாட்சி இதெல்லாம் சமாளிக்க முடியும்.
இதற்கு மேலும் சந்தேகம் இருந்தால், டிராபிக்_ராமசாமியைப் பாருங்கள். தன்னால் அந்த துணிவு வரும்.


நிற்க, நாம் நம் கட்டுரையைத் தொடருவோம்.

முந்தைய கட்டுரையில் அநேகமாக சினத்திற்கான காரணங்களைத் தெரிந்து கொண்டோம். சரி, சினத்தை ஏன் தவிர்க்க வேண்டும்?

உங்கள் சினம் முதலில் உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கும். அறிவியலாகப் பார்க்கும் பொழுது, நாம் கோபப் படும்போழுது, நம் இதயம் வேகமாக துடிக்கிறது. இதனால், நம் B.P. ஏறுகிறது. BP ஏறுவதால், நமக்கு படபடப்பு அதிகமாகி, கோபம் இன்னும் அதிகமாகிறது. நம்முடைய வார்த்தைகளும், செயலும் நம் கை மீறிப் போய்விடுகின்றன. இதனால் வார்த்தைகள் தடித்து, எதிராளியின் egoவை கிளறுகிறது. விளைவு, நியாயமாக வருத்தப் பட வேண்டிய எதிராளி அவர் பங்குக்கு கோபப் பட்டு கைகலப்பில், சில சமயம் கொலையில் கூட முடிகிறது. எனவே, நம்முடைய சினம் நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு கேடாகிறது

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
(பொருள் : சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மட்டுமின்றி மன மலர்ச்சியும் போய் விடும், சினத்தை விட ஒரு பகை இல்லை)
தன்னைத் தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால்
தன்னையே கொள்ளும் சினம்
(பொருள்: ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால் சின்னம் கொள்ளாமல் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த சினம் அவனையே கொன்று விடும்)
என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். அது மட்டுமின்றி, சினம் நம்முடைய உற்றார் உறவினர்களைக் கூடப் பாதிக்கும்.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
(பொருள்: சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்)
என்று இதைப் பற்றியும் திருக்குறள் கூறுகிறது. எனவே, உங்கள் சினத்தைக் கட்டுப்படுத்துவது உங்களுக்கு மட்டுமின்றி, உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவசியமாகிறது அல்லவா?

சரி, கோபத்தை எப்படிக் கட்டுப் படுத்துவது?

முதலில் சொன்னது போல், கோபப் படுவதற்கு முன், சற்று யோசித்துப் பாருங்கள், இந்த விஷயத்திற்கு கோபப் படுவது நல்லதா? அந்த கோபத்தின் மூலம், நடந்ததைச் சரி செய்ய முடியுமா? அல்லது, நம் கோபத்தை சற்று நாசூக்காக வெளிப் படுத்த முடியுமா? இப்படியெல்லாம் யோசிக்கும் போதே, நிகழ்ச்சியின் தாக்கம் கொஞ்சம் குறைந்து கோபமும் குறைந்துவிடும்.

சரி, கோபப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டீர்களா? உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் நடந்ததை எண்ணிப் பாருங்கள். தவறு யார் மீது என்று இப்போது புரியும். தங்கள் கோபம் அநியாயமானது என்று புரிந்து கொள்வீர்கள். உடனடியாக சம்பந்தப் பட்ட நபரை தொடர்பு கொண்டு கோபத்திற்கு வருத்தம் தெரிவியுங்கள், அவர் மீதே தவறு இருந்து, உங்கள் மன்னிப்பையும் அவர் உதாசீனப் படுத்தலாம். ஆனால், உங்கள் மனம் இப்போது நிச்சயம் அமைதியாகி விடும். முதலில் சிறு தயக்கங்கள் இருந்தாலும், நாளடைவில் இந்தப் பழக்கம் உங்களை கோபமற்றவராக மாற்றி விடும்.

ஆக, கோபத்தைக் கட்டுப் படுத்துவதன் மூலம்,

நம் மன, உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும், நம்மைப் பற்றிய ஒரு உயர்ந்த அபிப்ராயம் பிறரிடம் நிலவும்.

வாருங்கள், கோபமில்லாத உலகத்தைப் படைப்போம்.

டிஸ்கி: "நான் ரொம்ப சாது, எனக்கு கோபம் வராது. என்னை விடுங்க"ன்னு சொன்னவங்களை கூப்பிட்டு படிக்கச் சொன்னீங்களே, அவங்களுக்கு ஒண்ணுமே சொல்லலையே, அது ஏன் என்று கேட்பவர்களுக்கு, "உங்களுக்குத்தான் கோபமே வராதே, அதுனால, உங்களுக்குன்னு எதுவும் சொல்லல, ஓ.கே. வா?"

(சரி, சரி, படிச்சதுதான் படிச்சீங்க, கோபப்படாம கமெண்ட் சொல்லிட்டு போங்க!)

6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

தேவன் said...

/// நகையும் உவகையும் கொள்ளும் சினத்தின்
பகையும் உளவோ பிற ///


இது கோபம் இல்ல குறை இந்த குறளுக்கு நல்ல விளக்கம் சொல்லுங்க !

நான் திருப்பியும் வந்து பார்ப்பேன்!!
வந்துட்டான்யா வந்துட்டான் !!!

பெசொவி said...

//கேசவன் .கு said...
/// நகையும் உவகையும் கொள்ளும் சினத்தின்
பகையும் உளவோ பிற ///


இது கோபம் இல்ல குறை இந்த குறளுக்கு நல்ல விளக்கம் சொல்லுங்க !

நான் திருப்பியும் வந்து பார்ப்பேன்!!
//
அது கொள்ளும் அல்ல, கொல்லும் தான், எழுத்துப் பிழையைச் சரி செய்து விட்டேன், சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

R.Gopi said...

எனக்கு கோபத்தின் மீது இருந்த கோபம் காணாமல் போய் விட்டது....

குறளை மேற்கோள் காட்டியும், டிராஃபிக் ராமசாமியை சுட்டி காட்டியும் எழுதியது பாராட்டுதலுக்குறியது...

அ. நம்பி said...

நல்ல சிந்தனை; நல்ல படைப்பு. வாழ்த்துகள்.

Prathap Kumar S. said...

அதான் சொல்றமுல்ல கோபத்தை குறைக்கிறேன்னு ஏன் இப்படி பொறுமையை சோதிக்கிறீங்க... இப்படித்தான் தல அடிக்கடி கோபம் வருது.. :-)

நீங்க சொன்னதை முயற்சி பண்ணி கோபத்தை குறைக்க முயல்கிறேன்.

Madhavan Srinivasagopalan said...

Good message. I will try it out.

Infact 'anger' should be controlled, while 'sadness(I mean 'thukkam') should not be.