"ஏங்க,
இது நம்ம நிச்சயதார்த்தத்தில்
நீங்க போட்டிருந்த சட்டைதானே?"
"ஏங்க,
இது நமக்கு கல்யாணமாகி
முதல் சம்பளத்துல
வாங்கிக் குடுத்த புடவைங்க..."
"ஏங்க,
இதத் தெரிலையா?
நம்ம பொண்ணுக்கு
மூணு வயசாகும்போது
நீங்க வாங்கிக் குடுத்த பொம்மைங்க..."
"ஏங்க,
இந்த பேனாவைப் பார்த்தீங்களா?
முத முதல்ல நம்ம பொண்ணு
வாங்கின பரிசுங்க..."
"ஏங்க,
நம்ம பையன் கல்யாணத்தும்போது
யாரோ வெத்திலை பாக்கு துப்பி
கறையான உங்க சட்டைங்க..."
உன் ஞாபக சக்தியைக் கண்டு
பெருமையாகத் தான் இருந்தது.....
"இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு
வந்த புதுசில,
ரெண்டு பவுன் சங்கிலி
வாங்கித் தர்றேன்னு சொன்னாரு
உங்க தாத்தா,
ஹூம்!......."
என்று நம் பேரனிடம்
நீ புலம்பும் வரை.
(இந்த கவிதையை உரையாடல் கவிதைப் போட்டிக்கு அனுப்பிவிட்டேன்..)
33 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
:( enter kavithaigal ???
அன்பின் "பெ.சொ.வி"
அருமை அருமை - நினைவாற்றலைப் பார்ராட்டுகிறேன். போட்டிக்கு அனுப்புக - வெற்றி பெற நல்வாழ்த்துகள்
ம்ம்ம்...நடத்துங்க...நடத்துங்க...
நன்றாக உள்ளது நண்பரே...
நிச்சயம் அனுப்புங்கள்...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...
//Cable Sankar said...
:( enter kavithaigal ???//
சங்கர் அண்ணா, உங்களுக்காகத்தான், நகைச்சுவை என்றும் வகைப் "படுத்தி"யிருக்கிறேன்
கமெண்ட்டுக்கு நன்றி!
நல்லாயிருக்கே! அனுப்புங்க போட்டிக்கு.
நல்லாயிருக்கு அனுப்புங்க வாழ்த்துக்கள்
நல்லாருக்கு தம்பி. அனுப்பி ஜமாய்...
நல்லாருக்கு அனுப்பலாம்..
பிரபாகர்.
சூப்பர்:)
Nalla irukku nanbaa...
எமது வலைப்பூ வரலாற்றில் முதல் முதலாய் வருகை தரும், அருமை அண்ணன், அன்புத் தலைவர், நக்கல் திலகம் நையாண்டி நைனா அவர்களே வருக, வருக! (உங்களை இங்க வரவழைக்க நான் பட்ட பாடு இருக்கே......மொத்தத்துல ரொம்ப தாங்க்ஸ்)
கமெண்ட் போடுறதை முதல்ல எளிமையாக்குங்க..அப்புறம் சொல்றேன்
// தண்டோரா ...... said...
கமெண்ட் போடுறதை முதல்ல எளிமையாக்குங்க..அப்புறம் சொல்றேன்//
சரி செய்து விட்டேன் என்று நினைக்கிறேன்,
சொல்லுங்க அண்ணே, கவிதைய போட்டிக்கு அனுப்பிடவா?
அருமை யான பதிவு
நல்வாழ்த்துகள்
அனைத்து பின்னூட்டங்களுக்கும் நன்றி! உங்களின் ஏகோபித்த (எக்ஸ்செப்ட் a கோபித்த) ஆதரவோடு,
சிங்கம் கிளம்பிடுச்சே........ய்!
நல்லாருக்குங்க.. கொஞ்சம் வித்யாசமாவும் இருக்கு...
கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!
நல்லா இருக்கு மக்கா.வெற்றி பெற வாழ்த்துக்கள்!
:)
-வித்யா
வெற்றி பெற வாழ்த்துக்கள்
advances wishes
எல்லாமே எனக்கும் நடந்துருக்கு, கடைசி செய்தியைத் தவிர ! . ம்ம்ம் என் மகனுக்கே 5 வயசுதான்.. பேரன், பேத்தி காலத்துல, என் மனைவிக்கு மறதி வந்துடாதா என்ன?
vetri pera vaalthhtukkal
வெற்றி பெற வாழ்த்துக்கள்
இப்போதான் உங்கள் வலை பூவை
சந்திக்கிறேன்
கவிதை மிகவும் அருமை...
வெற்றிபெற என் வாழ்த்துக்கள் தோழரே...
வெற்றி பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
நல்லா இருக்கு..! நண்பரே...!
இயல்பை வெளிப்படுத்துகிறது உங்கள் கவிதை. நன்று.
வெற்றி பெற வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள்
இயல்பாக வந்து விழுந்திருக்கின்றன வார்த்தைகள்.அதுவே கவிதையின் மெருகைக் கூட்டியிருக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துகள்!
Post a Comment