அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, September 27, 2010

பேசுவது எப்படி - 2

போன பதிவுல பொதுவாக  பேசுவது பற்றி சிலவற்றை எழுதியிருந்தேன். மக்களின் ஆதரவான பின்னூட்டங்களைப் படித்தபின் கொஞ்சம் விரிவாக இதுபற்றி எழுத விழைகிறேன்!

முதலில் நம் குழந்தைகளிடம் பேசுவது பற்றி என்னுடைய அனுபவத்தை வைத்து இந்தப் பதிவு:-

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், எல்லாக் குழந்தைகளுக்கும் அவர்களுடைய தந்தை தான் உலகத்திலேயே சிறந்த ஹீரோ. (அவரே முதல்தர வில்லன் ஆவதும் உண்டு, குழந்தைகள் வளர ஆரம்பித்தவுடன்!). அதனால், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, அதை நீங்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம்!

உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதைவிட, உங்கள் நடவடிக்கையின் மூலம் அவர்களுக்குத் தெரிய வைப்பதுதான் நல்ல பலனைக் கொடுக்கும். எனக்குத் தெரிந்து நிறைய வீட்டில் நடப்பது என்ன தெரியுமா? பிள்ளைகளைப் படிக்க சொல்வார்கள், இவர்கள் டிவியிலே மூழ்கித் திளைப்பார்கள்.

இன்னொன்று அநேகமாக எல்லோருக்கும் தெரிந்ததுதான்: உங்கள் பிள்ளைகளை எப்போதும் பிறரை ஒப்பிட்டு பேசவே பேசாதீர்கள்! இதனால் அவர்கள் மனம் புண்படுவதோடு, அந்த இன்னொரு பிள்ளையை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்!

அடுத்த விஷயம், அட்வைஸ். கொடுப்பது சுலபம் என்பதாலேயே எல்லோரும் எல்லோருக்கும் அட்வைஸ் கொடுக்கிறார்கள்! அதுவும், தான் என்னவோ சாக்ரடீஸ் போன்ற மேதை போலவும் மற்றவருக்கு புத்திமதி சொல்வதற்காகவே இந்தப் பிறவி அமைந்தது போலவும் ஒரு நினைப்பில்! ஒரு கட்டத்தில், "உங்க வேலையைப் பாத்துகிட்டு போறீங்களா?" என்று நிராகரிக்கும் அளவுக்கு இந்த உபதேசம் இருப்பது பிள்ளைகளின் நல் வாழ்வுக்கு உதவாது!

பல பெற்றோரின் சவால், குழந்தைகளின் வயதுக்கு மீறிய கேள்விகள் தான்! குறிப்பாக குழந்தை பிறப்பு பற்றி அவர்கள் கேட்கும்போது என்ன சொல்வது என்று யாருக்கும் தோன்றாது! என் குழந்தை இது பற்றி கேட்டபோது நான் சொன்ன பதில் இதுதான்,
"இந்த கேள்விக்கு பதில் இருக்கு, ஆனா இப்ப உனக்கு சொன்னா புரியாது. உதாரணமா, ஒரு கோளத்தின் கன அளவு என்னன்னு கேட்டா
 \!V = \frac{4}{3}\pi r^3
என்று சொல்கிறாய். ஆனா இது எப்படி வந்ததுன்னு உனக்கு தெரியணும்னா அது பிளஸ் டூ சிலபஸ்ல தான் இருக்கு. அந்த வயசுல சொல்லிக் கொடுத்தாத் தான் உனக்குப் புரியும்கறதால தான் அதை இப்பவே சொல்லிக் கொடுக்கறதில்லை. அது போல, இந்த கேள்விக்கு பதிலும் நீ பிளஸ் டூ படிக்கும்போது நான் சொல்றேன்".

அந்த வயதில் நான் சொல்லி கொடுக்காமலேயே, இந்த சமுகம் அவளுக்கு அதுபற்றி சொல்லிக் கொடுக்கும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் அதை விடுத்து, "வயசுக்கு மீறி இப்படி கேள்வி கேட்டே, தெரியும் சேதி! ஒழுங்கா படி!" என்று சொல்வதால் நம் மீது கோபமும் அந்த கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் தான் வளருமே தவிர வேறு உருப்படியான விளைவுகள் இருக்காது.

சற்று புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், நம் குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதை விட, அந்தக் கேள்விகளை பொறுமையாகக் காது கொடுத்து நாம் கேட்டாலே போதும், நம் மீது மரியாதையும் நம் பதிலை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் அவர்களுக்கு வந்துவிடும்.

மீண்டும் சிந்திப்போம்!

23 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

என்னது நானு யாரா? said...

உங்க பதிவை படிச்சிப் பாத்தா, நீங்க உங்க குழந்தைங்களுக்கு ஒரு நல்ல தந்தையா இருப்பீங்கன்னு நிச்சயமா நம்புறேன்.

இதை எல்லா பெற்றோர்களும் Follow செய்தா எவ்வளவு நல்லா இருக்கும். பிள்ளைங்க அழகான ரோஜாப் பூக்கள் என்பதையே மறந்து அவர்களை கசக்கிப் பிழிந்து விடுகிறார்கள்.

suneel krishnan said...

ஆம் குழந்தைகள் நம்மை அறியாமலே நம்மிடமிருந்து பல விஷயங்களை சேகரிக்கிறது . 6- 14 வயது முதல் முக்கியமான தருணம் , இது தான் ஒரு மனிதனின் குணாதிசயங்களை முடிவு செய்கிறது .பிற்ப்பாடு அதை மாற்ற பெரும் உழைப்பு தேவை

அருண் பிரசாத் said...

சரி நீங்க சொல்லுறபடியே செய்துடுவோம்....

ஆனா, இந்த கால கல்விமுறை மிக கடினமாக இருக்கு. அதுக்கு முதலில் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருடன் said...

//தான் என்னவோ சாக்ரடீஸ் போன்ற மேதை போலவும் மற்றவருக்கு புத்திமதி சொல்வதற்காகவே இந்தப் பிறவி அமைந்தது போலவும் ஒரு நினைப்பில்! //

சூப்பர் பொ.சொ.வி.... நீங்க பேசுங்க நாங்க கேக்கறோம்...


(ஆமாம் நான் உங்கள் எப்படி கூப்பிடறது?? சார்? தல? ஐயா? சாமி?... )

R.Gopi said...

பதிவு மிக அமர்க்களம்...

//உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதைவிட, உங்கள் நடவடிக்கையின் மூலம் அவர்களுக்குத் தெரிய வைப்பதுதான் நல்ல பலனைக் கொடுக்கும்.//

தெளிவான விளக்கம்... நடைமுறையில் நாம் காணும் உண்மையும் கூட...

//உங்கள் பிள்ளைகளை எப்போதும் பிறரை ஒப்பிட்டு பேசவே பேசாதீர்கள்! இதனால் அவர்கள் மனம் புண்படுவதோடு, அந்த இன்னொரு பிள்ளையை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்//

யெஸ்.... இது அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும்.. இதை கண்டிப்பாக எந்த பெற்றோரும் செய்யக்கூடாது...

//நம் குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதை விட, அந்தக் கேள்விகளை பொறுமையாகக் காது கொடுத்து நாம் கேட்டாலே போதும், நம் மீது மரியாதையும் நம் பதிலை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் அவர்களுக்கு வந்துவிடும்.//

அருமையாக சொல்லி முடித்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்..

பெசொவி said...

@ என்னது நானு யாரா?
உண்மைதான் தோழரே, நான் என் பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்கிறேனோ அதைத் தான் சொல்லியிருக்கிறேன். நான் சொல்வதைக் கேட்கும் பிள்ளைகள் கிடைத்ததும் என் பாக்கியமே!

பெசொவி said...

@ dr suneel krishnan

மிக்க நன்றி, டாக்டர்!

பெசொவி said...

@ அருண் பிரசாத்

சரியா சொன்னீங்க, அருண்! நம்ம கல்வி முறை மார்க் வாங்க வைக்கிறதா இருக்கே தவிர, வாழ்க்கையில் ஜெயிக்க வைக்க எதுவும் சொல்வதாக தோணலை!

பெசொவி said...

@ TERROR PANDIAN (VAS)
எதுவும் உள்குத்து இல்லையே!

//(ஆமாம் நான் உங்கள் எப்படி கூப்பிடறது?? சார்? தல? ஐயா? சாமி?... )
//

எப்படி வேணும்னாலும் கூப்பிடலாம் தம்பி!

பெசொவி said...

@ R Gopi

ரொம்ப தேங்க்ஸ் கோபி! நீங்க வாழ்க்கைத் தொடர் எழுதுவதுதான் எனக்கு inspiration!

Madhavan Srinivasagopalan said...

நல்ல மேட்டராத்தான் சொல்லுறீங்க.. இன்னும் எழுதுங்க.. காத்திருக்கிறேன்..

ஸ்ரீராம். said...

நல்ல படியாகப் போகிறது. தொடருங்கள்...

பெசொவி said...

Thanks Madhavan & Sriram!

Jaleela Kamal said...

நல்ல விளக்கம்

வெங்கட் said...

// பல பெற்றோரின் சவால், குழந்தைகளின் வயதுக்கு
மீறிய கேள்விகள் தான்! குறிப்பாக குழந்தை பிறப்பு
பற்றி அவர்கள் கேட்கும்போது என்ன சொல்வது
என்று யாருக்கும் தோன்றாது! //

இதை படிக்கும் போது எனக்கு
ஒரு ஜோக் நியாபகம் வருது..

ஒரு குட்டி பையன் ( 5 வயசு )
அவங்க அம்மாகிட்ட கேக்குறான்..

" அம்மா..!! நான் எப்படிம்மா பொறந்தேன்..? "

( அம்மா என்ன சொல்றதுன்னு முழிக்கறாங்க..
அப்புறம் சமாளிக்க Try பண்றாங்க.. )

" அது வந்துடா கண்ணா..., ஒரு நாள் நைட்
ஒரு தேவதை உன்னை வானத்தில இருந்து
தூக்கிட்டு வந்து எங்ககிட்ட குடுத்தது.."

" அப்ப தங்கச்சி எப்படிமா பொறந்தா..? "

" தங்கச்சி பாப்பாவையும் ஒரு தேவதைதான்
வானத்தில இருந்து தூக்கிட்டு வந்து
எங்ககிட்ட குடுத்தது.. "

" அப்பா., நீயெல்லாம் எப்படிம்மா
பொறந்தீங்க.. "

" எல்லாம் இதே மாதிரி தேவதை கொண்டு
வந்து குடுத்து தான்.."

" ஓஹோ..!! அப்ப நம்ம வீட்ல யாரும்
நார்மல் டெலிவரி இல்லையா..? "

vasu balaji said...

நல்ல கருத்து. நானும் நினைக்கிறதுண்டு. இந்த கூட்டுக்குடும்பத்தில வளர்ரவங்களுக்கும் தனியா வளர்ரவங்களுக்கும் நிறைய வித்தியாசம் தெரியும். டாக்டர் சொன்னா மாதிரி அந்த வயசில பலரோட அவதானிப்பு தரும் அனுபவங்கள்னு புரியுது. தொடருங்கள்:)

DreamGirl said...

super message..
continue to give more.

மங்குனி அமைச்சர் said...

உள்ளேன் அய்யா ...
அந்த பார்முலாவ இங்க எப்படி டைப் பண்ணின ???

பெசொவி said...

அது ரொம்ப ஈசி மங்குனி. அது இமேஜ் பைலா தான் இருக்கு. அப்படியே பேஸ்ட் பண்ணிட்டேன்.

t8 said...

I will ask my mum and think about it...
;-D

vinu said...

super

ரோஸ்விக் said...

உபயோகமான பதிவுதான்... நன்றி.

Vijayan Durai said...
This comment has been removed by the author.