1. மூன்றை மூன்றால் மூன்று முறை பெருக்கினால் என்ன விடை வரும்?
மூன்றை மூன்றால் எத்தனை முறை பெருக்கினாலும் ஒன்பது தான் வரும்.
2. 217-லிருந்து எத்தனை முறை 25-ஐக் கழிக்கலாம்?
ஒரு முறைதான் கழிக்க முடியும். ஏனென்றால் ஒரு முறை கழித்த பிறகு, அந்த எண் 192 ஆகிவிடும் அல்லவா?
3. பேருந்தில் பயணம் செய்யும்போது ஒருவர் முப்பது ரூபாய்க்கு டிக்கெட் எடுத்ததால் என் கையைவிட்டு எழுபது ரூபாய் போனது, எப்படி?
பலரும் நான் கண்டக்டர் என்று விடை எழுதியிருக்கிறார்கள். அதுவும் ஒரு விடைதான். நான் நினைத்த விடை இதோ:
ஒருவர் என் மூலமாக முப்பது ரூபாய் டிக்கெட் எடுக்க என்னிடம் ஐம்பது ரூபாய் கொடுத்தார். நான் அதை கண்டக்டரிடம் கொடுக்க அவர் என்னிடம் டிக்கெட்டும் மீதி சில்லறை இருபது ரூபாயும் கொடுத்தார். நான் அதை அப்படியே டிக்கெட் உரிமையாளரிடம் கொடுத்தேன். இப்போது பார்த்தால், நான் மொத்தமாக ஐம்பது மற்றும் இருபது ஆக மொத்தம் எழுபது ரூபாய் என் கையால் கொடுத்திருக்கிறேன். எப்படி?
விடை அளித்த அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்!
32 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
@ டெரர்.,
ரெண்டு பதிவுக்கு முன்னாடி
அருவா வாங்க போறேன்னு
சொன்னீங்களே..
அந்த அருவாவுக்கு இப்ப
வேலை வந்துடுச்சி..!!
1) மூணு தடவையென்ன, 30 தடவை.. 300 தடவை மூண மூணால பெருக்குனாலும் ஒவ்வொரு தடவையும் '9 ' தான் வரும்.
2) 217-லிருந்து 25-ஐக் எத்தனை தடவை வேண்டுமானாலும் கழிக்கலாம்.. ஒவ்வொரு தடவையும் விடை 192 தான் வரும்.
ஒரேமாதிரி பதில் வர்றாப்புல கேள்விலாம் கேக்கப்டாது..
3) -------------------
அதுக்குன்னு இந்த மாதிரிலாம் ரொம்ப கஷ்டமா கேள்வி கேக்கலாமா.. ?
நீங்க ஒரு லையன மேல எழுதலன்னு நெனைக்கிறேன்.. அதான்.. மொதல்ல "பின்வரும் கேள்விகளில் ஏதாவது இரண்டிற்கு பதில் தரவும்"...
PS. me the first ?
3) ரொம்ப ஈசி.. உதாரணத்துக்கு.. அவரு கும்பகோனத்துலேர்ந்து திருச்சிக்கி டிக்கெட் வாங்கினாரு (30 ரூபாயில), நீங்க கரூருக்கு டிக்கெட்டு வாங்கினீங்க.. (70 ரூபாய்).. ரேஷியோ கிட்ட-தட்ட சரிதானே..?
மூன்றை மூன்றால் மூன்று முறை பெருக்கினால் மூன்று தான் வரும்......அப்படீன்னு ஒரு ஷாம்பு கம்பெனி முட்டாள் சொன்னதுங்க.........
மாதவன், முதல் கேள்விக்கு பதில் சரி. இரண்டாவது, இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக பதில் வேண்டும். மூன்று, தப்பு
ம்ம்.. முயற்சித்துதான் பார்ப்போமே:)
1) 27
2)8 முறை
3) நீங்க நடத்துனரா இருந்தா அவர் 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தா மீதி சில்லறை 70 ரூபாய் கொடுத்திருப்பிங்க.
வேற ஏதாவது குண்டக்க மண்டக்க விடை இருந்தா சீக்கிரம் சொல்லிருங்களேன்:))
1. தலைவரே! எத்தனை முறை மூன்றை மூன்றால் பெருக்கினாலும் ஒன்பது தான் விடை வரும்
2. ஒரே முறை தான் கழிக்க முடியும்.
3. நீங்க பஸ் கண்டக்டர். அவரு 100 ரூபாய் கொடுத்தாரு. நீங்க 30 ரூபாய்க்கு டிக்கெட் பணம் போக மீதி 70 ரூபாயை திருப்பி தந்தீர்கள்!
சரியா தலை!
3) கண்டக்டருக்கு (உங்க ஃபிரண்டோ ?) நீங்க 70 ரூபா பாக்கி வெச்சிட்டீங்க.. அதனால, ஒருத்தரு, 100 ரூபா நோட்ட கொடுத்து 30 ரூபாய்க்கு டிக்கெட்டு எடுத்ததுனால, கண்டக்கடறு , பாக்கி 70 ரூபாவ, உங்ககிடேருந்து வாங்கிக்கச் சொன்னாரு..
தேவையா?.. எப்படிலாம் யோசிக்க முடியுது..
2) எத்தனை தடவை வேண்டுமானாலும் கழிக்கலாம்......
எட்டுதடவை கழிச்ச பின்னாடி, எல்லா நம்பரும் நேகடிவுல போக ஆரம்பிக்கும்.... இன்பினிட்டி வரைக்கும்..
1. 81
2. 8
3. டிக்கெட் எடுக்க உங்ககிட்ட ஒருத்தர் 100 ரூபா கொடுத்திருப்பார், கண்டக்டரிடம் இருந்து வாங்கி டிக்கெட்டையும், மீதம் 70 ரூபாவையும் நீங்க உங்க கையால கொடுத்தீங்க
தல சீரியஸா பதில் சொல்லனுமா, இல்லை இதுவும் வழக்கம் போல மொக்கையா?
for followup
முதல் பதில் : எத்தனை தடவை பெருக்கினாலும் 9 தான் வரும்
2வது பதில்: ஒரு தடவைதான்.... ஒரு தடவ கழிச்சிட்டாலே நம்பர் மாறிருமே
3வது பதில்:நான் தான் கண்டக்டர், மீதி சில்லறை கொடுத்தேன்பா
1. 81
2. 8 முறை (ஆக்சுவலா, 217 ல இருந்து எத்தனை முறை வேணும்னாலும் 25 கழிக்கலாம். விடை எப்பவும் 192 வரும்)
3. நீங்க வேற ஊருக்கு டிக்கெட் எடுத்திருப்பீங்க.
சரியா... இல்ல பல்பா :-)
விடைகள் இரண்டு நாட்கள் கழித்து. அதுவரை பின்னூட்டங்கள் மட்டறுக்கப் படும்
..... அப்போ ரெண்டு நாள் கழிச்சு வாரேன்.....
1. மூன்றை மூன்றால் மூன்று முறை பெருக்கினாலும் முப்பது முறை பெருக்கினாலும் ஒன்பது தான் வரும்
அல்லது
3x3x3x3 = 81
2. எட்டு முறை
3. அவர் நூறு ரூபாய் தந்து டிக்கெட் எடுத்திருப்பார் நீங்க மிச்சப் பணம் எழுபது ரூபாய் கொடுத்திருப்பீங்க...
( இதெல்லாம் என் மனைவி சொன்னது. )
Ans :
1. 3 ( மூணு ). அப்படித்தான் இப்ப ஒரு
விளம்பரத்துல சொல்றாங்க..
2. ஒரு தடவை தான்..
3. நீங்க தான் அந்த பஸ் கண்டக்டர்.,
அவர் 100 ரூபா குடுத்து சில்லரை
வாங்கிட்டாரு..
1.Answer-9.
2.one time only.
3.He may be conductor.
1) 9
1) 9
2) oru murai
3) u r a conductor
//விடைகள் இரண்டு நாட்கள் கழித்து. அதுவரை பின்னூட்டங்கள் மட்டறுக்கப் படும்
///
அதனாலா நான் இரண்டு நாள் கழிச்சு வந்து பார்த்துக்கிறேன் ..!!
1 .எத்தனை முறை பெருக்கினாலும் 9 தான் வரும் ..!!
2 .ஒரே முறை தான் கழிக்க முடியும் ..!!
3 .நீங்க கண்டக்டரா இருந்தா அவரு 100 ரூபாய் கொடுத்திருப்பாரு. அதனால நீங்க மிச்சம் 70 ரூபாய் திருப்பி கொடுத்திருப்பீங்க.
1.81
2.8
3. நீங்க கண்டக்டரா இருந்து அவர் நூறு ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தால்,உங்களிடம் இருந்து எழுபது ரூபாய் போகும்!
:-((
@என்னது நானு யாரா & செல்வகுமார் - அதேதான், மூனும் சரி.
Vithiya - முதல் வருகைக்கு நன்றி. மூனும் சரி.
படுபாவி - என்னங்க பேரு அது, சூப்பர், மூனும் சரி.
சிவராம் குமார் - முதல் வருகைக்கு நன்றி, மூனும் சரி.
@ அருண் - என்ன பாஸ் கேள்வி இது, சீரியஸ் தான், மொக்கை இல்லை.
@ மாதவன் - மூணாவது கேள்வி பாடாய் படுத்துதோ?
@ ராதை - சாரி, நீங்க இன்னும் யோசிக்கணும்.
@ ரசிகன் & ராஜூ - மூணாவது கேள்விக்கு சரியான பதில் கொடுத்திருக்கீங்க, ஒன்னு & ரெண்டு இன்னும் யோசிங்களேன்.
9,1,மிச்சம்
//@என்னது நானு யாரா & செல்வகுமார் - அதேதான், மூனும் சரி.///
ஐயோ இங்கே என்ன கொடுமை நடக்குது ..? என்னோட பேர்ல 'க்' போடாம விட்டுட்டார்.. அவர என்ன பண்ணலாம் .. பேசாம நீங்க செல்வா அப்படின்னே சொல்லுங்க ..!!
1) 81
2) ஒரு தடவை
3) நான் நடத்துனர் என்பதால்...
முதல் கேள்விக்கு விடை ஒன்பது என்றும் சொல்லலாம்.
//என்ன பாஸ் கேள்வி இது, சீரியஸ் தான், மொக்கை இல்லை.//
செல்லாது செல்லாது.... சீரியஸ்னு சொல்லிட்டு மொக்கை விடை சொல்லுறீங்க....
இதுக்கு எதிர் பதிவா நான் கேள்விகேட்டு அடுத்த பதிவு போடுறேன்.... வெள்ளிகிழமை எதிர்பாருங்கள்
// Madhavan said...
2) 217-லிருந்து 25-ஐக் எத்தனை தடவை வேண்டுமானாலும் கழிக்கலாம்.. ஒவ்வொரு தடவையும் விடை 192 தான் வரும்.//
I was wrong from the 'mokkai' point of view, but, not mathematically.
Your question also means 'how many times a set of "25" taken out from 217 ?
// 3) கண்டக்டருக்கு (உங்க ஃபிரண்டோ ?) நீங்க 70 ரூபா பாக்கி வெச்சிட்டீங்க.. அதனால, ஒருத்தரு, 100 ரூபா நோட்ட கொடுத்து 30 ரூபாய்க்கு டிக்கெட்டு எடுத்ததுனால, கண்டக்கடறு , பாக்கி 70 ரூபாவ, உங்ககிடேருந்து வாங்கிக்கச் சொன்னாரு..
//
I argue that above answer is right from 'creative thinking' or 'mokkai point of view'.
கணக்கு பிள்ளைவாள் வாழ்க....
இதுக்கு எல்லாம் உங்களுக்கு ஆன்சர் தெரியுமா?
Post a Comment