அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, January 16, 2011

2010-ல் நான் (தொடர்பதிவு )

இந்தத் தொடர்பதிவுக்கு என்னை அழைத்த மாதவன் அவர்களுக்கு நன்றி!

என்னைப் பொறுத்தவரை சென்ற ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகும். 2009-லேயே  பதிவு எழுத வந்துவிட்டாலும், முனைந்து எழுதியது சென்ற ஆண்டில்தான். அது மட்டுமில்லாமல், வெங்கட், மங்குனி அமைச்சர், ரமேஷ், இம்சை பாபு டெரர் பாண்டியன்(VAS), பன்னிகுட்டி ராமசாமி, அருண், எஸ்கே, சௌந்தர், போன்ற பல பதிவர்கள் நட்பு கிடைத்ததும் சென்ற ஆண்டில்தான். சாட்டில் மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்த இவர்களுடன் சேர்ந்து டெரர் கும்மி ப்ளாக் ஆரம்பித்தது நிலைத்து நிற்கும் சந்தோஷம்.ஒரு படி மேல் போய், ரமேஷையும் பாபுவையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

நான் பெரிதும் மதிக்கும் தண்டோரா மணிஜீ அவர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்னொரு சந்தோஷம்.

தனிப்பட்ட முறையில் என் பள்ளித் தோழர்களை இருபத்தைந்தாண்டுகள் கழித்து சந்தித்தது மிகப் பெரிய சந்தோஷம்.

ஆனால், மன வருத்தங்களும் இருக்கத் தான் செய்கிறது. ஊழலில் உலக வரலாற்றில் முதன் முறையாக ஒரு "சாதனை" செய்யப் பட்டதும், விலைவாசி என்பது பொருட்களின்  விலையை வாசிக்க மட்டும் முடியும், எதையும் வாங்க முடியாது என்ற அளவில் இருப்பதும் சில பதிவர்களின் அடாவடிச் செய்கைகளால் மணம் புண் பட்டதும் என்று மைனஸ்களும் வந்து போயின.

இனி வரும் ஆண்டுகளிலாவது ஒரு சாதாரண மனிதன் நல்ல முறையில் வாழ வழி ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன்.

19 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

வடை எனக்கே..

நன்றி, வடைக்கும் , பின்தொடர்ந்து எழுதியமைக்கும்.
இறுதி பத்தி.. நெகிழ்ச்சியாக இருந்தது..

எஸ்.கே said...

நெகிழ்ச்சியான பதிவு!

TERROR-PANDIYAN(VAS) said...

நெகிழ்ச்சியான பதிவு!... :))))

(சும்மா.. நக்கலூ.. )

எஸ்.கே said...

//TERROR-PANDIYAN(VAS) said...

நெகிழ்ச்சியான பதிவு!... :))))

(சும்மா.. நக்கலூ.. )//

ஓ! நான்தான் புதிய ஆடோ!:-)

Gopi Ramamoorthy said...

இன்னும் கொஞ்சம் விலா வாரியா எழுதி இருக்கலாம்

middleclassmadhavi said...

கொசுவத்தி சீக்கிரமா முடிஞ்சுடுச்சு...
2011 நல்ல வருடமாக அமைய வாழ்த்துக்கள்

அனு said...

2011லும் உங்களுக்கு இந்த நட்புகள் தொடரவும் புதிய பல நட்புகள் கிடைக்கவும் வாழ்த்துக்கள்... அப்படியே மாட்டு பொங்கல் வாழ்த்துக்களையும் சொல்லிக்கறேன்... :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ அனு,
//அப்படியே மாட்டு பொங்கல் வாழ்த்துக்களையும் சொல்லிக்கறேன்... //
உங்களுக்கு நீங்களே சொல்லிக்க இங்க வந்து கமெண்ட் போடறீங்க? :)

அனு said...

நம்ம எல்லோரும் ஒரே இனம் தானே.. என்ன இப்படி பிரிச்சு பேசிட்டீங்க...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனு said...
நம்ம எல்லோரும் ஒரே இனம் தானே.. என்ன இப்படி பிரிச்சு பேசிட்டீங்க..//

எப்ப ஸ்பெஷலா வாழ்த்து சொல்ல வந்தீங்களோ, அப்பவே, வேற இனமோன்னு நினைக்க வேண்டியிருக்கே!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஒருபுதிர் உங்களுக்காக போட்டிருக்கேன், பார்த்தீங்களா?
(உங்களை விரட்ட இதைவிட வேற வழி தெரியலை!)

அனு said...

சேச்சே.. ஹேப்பி நியூ இயர்னு சொல்றோம்.. அப்படின்னா அது ஒருத்தருக்கு மட்டுமா? எல்லோருக்கும் தானே.. ஹிஹி..

அந்த ப்ளாக்கை நான் இன்னும் ஃபாலோ பண்ண ஆரம்பிக்கல.. இன்னைல இருந்து ஃபாலோ பண்றேன்..

ஹிஹி.. இதுக்கு அன்ஸர் தெரியும்னு நினைக்கிறென்.. அங்க வந்து பதில் சொல்றேன்.. :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அனு said
சேச்சே.. ஹேப்பி நியூ இயர்னு சொல்றோம்.. அப்படின்னா அது ஒருத்தருக்கு மட்டுமா? எல்லோருக்கும் தானே.. ஹிஹி..

அந்த ப்ளாக்கை நான் இன்னும் ஃபாலோ பண்ண ஆரம்பிக்கல.. இன்னைல இருந்து ஃபாலோ பண்றேன்..

ஹிஹி.. இதுக்கு அன்ஸர் தெரியும்னு நினைக்கிறென்.. அங்க வந்து பதில் சொல்றேன்.. :)
//

You are welcome!
(appappa Englishilum comment poduvor sangam)

வெங்கட் said...

@ அனு & பெ.சொ.வி.,

@ அனு Said.,
// அப்படியே மாட்டு பொங்கல் வாழ்த்துக்களையும்
சொல்லிக்கறேன்... //

// பெ.சொ.வி. Said.,
உங்களுக்கு நீங்களே சொல்லிக்க இங்க
வந்து கமெண்ட் போடறீங்க? :) //

@ அனு Said.,
// நம்ம எல்லோரும் ஒரே இனம் தானே..
என்ன இப்படி பிரிச்சு பேசிட்டீங்க... . //

ஹி., ஹி., ஹி..
உண்மைகளை ஒத்துக்கொள்ளும்
தங்கங்கள்..!!

எதுக்கும் இன்னிக்கு ஒரு நாளைக்கு
வெளியே போகதீங்க..
பிடிச்சி கொம்புக்கு கலர் பெயிண்ட்
அடிச்சிட போறாங்க..

அனு said...

பெ.சொ.வி

//எதுக்கும் இன்னிக்கு ஒரு நாளைக்கு
வெளியே போகதீங்க..
பிடிச்சி கொம்புக்கு கலர் பெயிண்ட்
அடிச்சிட போறாங்க.//

மாட்டுப் பொங்கலும் அதுவுமா இவ்வளவு நேரமா ஒரு மாடு கூட கண்ணுல படலன்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. தானா வந்து மாட்டிகிச்சு பாத்தீங்களா.. சீக்கிரம் அந்த பெயிண்ட் டப்பாவ எடுங்க..

(யாரை எப்படி வெளியில கொண்டு வரணும்னு எங்களுக்கு தெரியும்ல)

வெங்கட் said...

@ அனு.,

// தானா வந்து மாட்டிகிச்சு பாத்தீங்களா..
சீக்கிரம் அந்த பெயிண்ட் டப்பாவ எடுங்க..

(யாரை எப்படி வெளியில கொண்டு வரணும்னு
எங்களுக்கு தெரியும்ல) //

ஹி., ஹி., ஹி..

யாரை எப்படி வெளியில கொண்டு
வரணும்னு எங்களுக்கு தெரியும்லே..

சீக்கிரம் அந்த பட்டாசை எடுங்கடா..
கட்டி விடலாம்..

வினோ said...

இங்களுக்கு இந்த ஆண்டில் இன்னும் நிறைய கிடைக்க வேண்டிகிறேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sorry for late coming

கோமாளி செல்வா said...

எனது பேர் போடாததால் நான் இந்தப் பதிவில் இருந்து வெளியேறுகிறேன் !!