இது துக்ளக் "சோ"வின் பிரபல நாடகத்தின் தலைப்பு. அதைத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது, நம் தமிழக மீனவர்களின் சோக நிலையைப் பார்க்கும்போது!
நான் ஒன்றும் புதிதாக சொல்லப் போவதில்லை.
பின்ன,
நான் ஒன்றும் புதிதாக சொல்லப் போவதில்லை.
- தன் குடும்ப நலனுக்காகவும், தனக்கு வேண்டிய இலாக்காக்களைப் பெற வேண்டியும் டில்லி செல்லும் முத்தமிழ் "வித்தவ"ருக்கு
- "என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாவேன்.அதில் நீங்களேறிப் பயணம் செய்யலாம்" என்று மக்களுக்கு சொல்லாலேயே தோரணம் கட்டும் "கொலைஞருக்கு"
- "இலங்கையில் நடக்கும் சண்டையில் நாம் தலையிட முடியாது, இது இறையாண்மை சம்பந்தப் பட்ட விஷயம்" என்று சமாதானம் சொன்ன திரு"war"ஊர் பிரகஸ்பதிக்கு
பின்ன,
- தா. கிருட்டிணன் கொலையுண்டபோது "அரசியலில் இதெல்லாம் சாதாரணம்" என்று சொன்ன
- தினகரன் அலுவலக எரிப்பில் மூவர் பலியானபோது "அது வெறும் ஆக்சிடென்ட் தான்" என்று சமாளித்த
- எக்குத் தப்பாய் நிருபரிடம் மாட்டிக் கொண்டபோது "நானும் நீயும் தீக்குளிக்கலாமா?" என்று கோபம் காட்டிய
- ஆ.ராசா வீட்டில் ரெயிடு நடந்தபோது "உன் வீட்டிலேயா ரெய்டு நடந்துச்சு?" என்று புத்திசாலித் தனமாய் எதிர் கேள்வி கேட்ட
ஒரு ரூபாய் அரிசிக்கும், இலவச டிவிக்கும்(அது இலவசமே இல்லை, நம்ம வரிப்பணமும் குடித்து சீரழியும் மக்களின் பணமும் தான் டிவியாக மாறியது) இன்ன பிற கவர்ச்சி விளம்பரத்துக்கும் மயங்கி அவர்கள் தந்த ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் ஆசைப்பட்டு அவர்களுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு அவர்கள் இப்படிதான் வேட்டு வைப்பார்கள்.
விடுதலைப்புலிகளை எதிர்க்கிறோம் பேர்வழி என்று இலங்கைக்கு ராணுவ உதவி செய்ய மட்டும் எங்களால் முடியும் ஆனால், என் நாட்டு மீனவனை நீ அழிக்க என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்க மட்டும் எனக்கு மனம் வராது என்று இருக்கும் மத்திய அரசின் நிலையை எதிர்த்து பகிரங்கமாக இந்த இடத்தில என் கோபத்தை பதிவு செய்கிறேன். (கையாலாகாத ஒரு குடிமகன் வேறென்ன செய்ய முடியும்?)
ஒரு பதில் வைத்திருக்கிறார்கள் - இவர்கள் கடல் எல்லையைத் தாண்டினால்தான் இந்த விபரீதமாம்! நான் கேட்கிறேன், ஒரு வாதத்திற்கு சரி என்று கொண்டாலும், அதற்காக அவர்களைக் கைது செய்து நம் நாட்டுத் தூதரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பின் திருப்பி அனுப்புவதுதானே வழக்கம். காலம் காலமாய் நம்மிடம் வாலாட்டும் பாகிஸ்தான் நாட்டு மீனவர்களையே நாம் ஒன்றும் செய்வதில்லையே! நாம் பிறரிடம் மனிதம் காட்டுவோம் ஆனால் நம் மக்களை யார் என்ன செய்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டோம் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
ஒரு சீக்கியருக்கு தலைப்பாகை வைப்பதில் பிரச்சினை என்றவுடன் பிரான்ஸ் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்திய மன்மோகன் சிங், ஒரு மலையாளிக்கோ, தெலுங்கருக்கோ, கன்னடியருக்கோ ஏதேனும் பிரச்சினை வந்தால் அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் எங்கே, இங்கே என்ன நடந்தாலும் கவலை இல்லை, "நான்-என் குடும்பம்-என்ன ஒரு டீம்!" என்று மகிழ்ந்திருக்கும் முத்தமிழ் வித்தவர்(இங்கே ர் என்ற மரியாதை அவருடைய வயதைக் கருதி மட்டுமே)"கொலைஞர்" தமிழ்"ஈனத்"தலைவர் எங்கே?
ஒரு தமிழன் என்ற முறையில் மட்டுமல்ல, ஒரு மனிதன் என்ற முறையிலாவது யாருக்கும் இங்கே பரிதாபம் காட்டாத இந்த அரசிடம் என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்.
10 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
நம் இனத்தின் அவலம் இது :(
//ஒரு தமிழன் என்ற முறையில் மட்டுமல்ல, ஒரு மனிதன் என்ற முறையிலாவது யாருக்கும் இங்கே பரிதாபம் காட்டாத இந்த அரசிடம் என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன். //
நாங்களும்!
தமிழனக்கு மறதி ஜாஸ்தி என்று தமிழின காவலர்(துரோகி ) நினைத்து விட்டார் போல PSV ..........ஆனால் நாங்கள் மறக்க வில்லை என்று நினைவு கூறும் பதிவு PSV சார்
வெட்கக்கேடு
உங்களுடன் நானும் :-(
நாங்களும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.....
முத்தமிழ் வித்தவர்... கோபம் புரிகிறது..
எல்லோர் மனத்திலும் இருக்கும் கோபங்களையும் வேதனைகளையும் பதிவாக்கியிருக்கிறீர்கள்.
.
கண்டனங்கள். வருத்தங்கள்.
எதிர்ப்பு தீ அணையாமல் பார்த்துக்கொள்வோம்!
உங்கள் கோபம் நியாயமானது..
நாங்களும் எங்கள் கண்டனங்களை
பதிவு செய்கிறோம்..!!
Post a Comment