தத்துவம்
என்னதான் நமக்கு ரெண்டு காது இருந்தாலும், ரெண்டு தடவை சொல்லித்தான் ஒரு விஷயம் புரியணும்னு இல்லை. அதே மாதிரி ஒரே வாய்தான் இருந்தாலும் பல விஷயங்களை ரெண்டு மூணு தடவை சொல்லித்தான் புரிய வைக்க வேண்டியிருக்கு.
பொன்மொழி
ஒரு போட்டியில் நாம் மட்டும் கலந்து கொண்டு பரிசு கிடைத்தால் வரும் சந்தோஷத்தை விட, பலர் பங்கேற்ற போட்டியில் நாம் பரிசு பெற்றால் வரும் சந்தோஷமே மிகப் பெரியது. எனவே, போட்டிக்கு ஆள் இருந்தால் சந்தோஷப் படுங்க!
ஜோக்
ஒரு ஆள் பஸ்ஸில் ரெண்டு டிக்கெட் எடுத்தார். கூட வந்தவர் கேட்டார், "நீங்க ஒரு ஆளுதான இருக்கீங்க, ஏன் ரெண்டு டிக்கெட் எடுத்தீங்க?"
அவர் சொன்னார், "ஒரு டிக்கெட் தொலைஞ்சுட்டா, இன்னொன்னு ஹெல்ப் பண்ணுமே!"
இவர் கேட்டார், "அந்த இன்னொரு டிக்கெட்டும் தொலைஞ்சுட்டா என்ன பண்ணுவீங்க?"
அவர் பதில் சொன்னார், "நான் யாரு, என்கிட்டதான் மன்த்லி பாஸ் இருக்கே!"
:
பத்தும் மூன்றும் சேர்ந்தால் ஒன்று - எப்படி?
விடை: 10 AM + 3 Hours = 1 PM
கவிதை
பழையது
சாப்பிட்டு
கஷ்டப்பட்டு
வளர்ந்து
நல்ல வேலை
கிடைத்து
அமெரிக்கா
சென்றான்
இப்பவும் பழையதுதான்
ஃபிரிட்ஜில் வைத்து!
8 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
அந்தப் ஃப்ரிட்ஜா வது கொஞ்சநாளைக்கு புதுசா இருக்குமே !
வாரச் சந்தை சூப்பர், முக்கியமா அந்த கவிதை!
ஏப்ரல் 10+3= ஏப்ரல் 13 = ஏப்ரல் 1(முட்டாள்கள் தினம்)?
// ப்ரல் 10+3= ஏப்ரல் 13 = ஏப்ரல் 1(முட்டாள்கள் தினம்)? //
அப்டிலாம் சொல்லப்டாது..
அது நாட்டோட ஜனநாயகத்தை தப்பா சொல்லுற மாதிரி ஆயிடும்..
ஜோக்
ஒரு ஆள் பஸ்ஸில் ரெண்டு டிக்கெட் எடுத்தார். கூட வந்தவர் கேட்டார், "நீங்க ஒரு ஆளுதான இருக்கீங்க, ஏன் ரெண்டு டிக்கெட் எடுத்தீங்க?"
அவர் சொன்னார், "ஒரு டிக்கெட் தொலைஞ்சுட்டா, இன்னொன்னு ஹெல்ப் பண்ணுமே!"
இவர் கேட்டார், "அந்த இன்னொரு டிக்கெட்டும் தொலைஞ்சுட்டா என்ன பண்ணுவீங்க?"
அவர் பதில் சொன்னார், "நான் யாரு, என்கிட்டதான் மன்த்லி பாஸ் இருக்கே!"//
அந்த ஆளு நீங்கதான?
//பத்தும் மூன்றும் சேர்ந்தால் ஒன்று - எப்படி?//
Shall we have it this way -
A whole number TEN combines with another whole number THREEE to give birth to a third whole number THIRTEEN?
பத்தும் மூன்றும் சேர்ந்தால் ஒன்று - எப்படி?
Shall we have it this way -
The whole number TEN combines with another whole number THREE give birth to a third whole number THIRTEEN ?
That is, two whole numbers join hands to form a single whole number.
(I am certain that you may not have thought in this way)

நல்ல தொகுப்பு.... variety !
Post a Comment