அந்த மிகப் பெரிய பணக்காரருக்கு கோபமான கோபம். போயும் போயும் தன் ஒரே பெண் அந்த பரம ஏழைப் பையனைக் காதலிக்கிறாளே என்று.
பெண்ணுக்கு பலமுறை புத்தி சொன்னார், அவள் கேட்கவில்லை, கட்டினால் அந்தப் பையனைத் தான் கட்டுவேன் என்று சொல்லிவிட்டாள்.
தனக்குத் தெரிந்த ஒரு கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஆளைக் கூப்பிட்டு அவனைக் காலி செய்யும்படி சொன்னார். ஆனால் அவன் அந்த ஆட்களை அடித்து நொறுக்கி விட்டான்.
பொறுக்க முடியாத அவர் தானே அவனை நேரில் சந்தித்து அவனை தன் பெண்ணை மறக்கும்படி கூறினார். அவன் மறுத்தான். கொதித்துப் போன அவர் தன்னுடைய கத்தியால் அவனைக் குத்திவிட்டார். குத்தும்போது அவருடைய கையைக் கத்தி கீறி விட்டது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அவனை மலையிலிருந்து கீழே உருட்டிவிட்டு நிம்மதியாய் வீடு வந்து சேர்ந்தார்.
மலையிலிருந்து விழுந்த அவன் சிலரால் காப்பாற்றப் பட்டு சில நாளில் முழுதும் குணம் அடைந்து விட்டான். காதலியைச் சந்தித்த அவன் அவளுடைய தந்தையின் சதிச் செயலைப் பற்றி சொன்னான். ஆத்திரமடைந்த அவள் போலீசில் புகார் செய்தாள். ஆனால் ஆதாரம்?
சட்டென்று அவனுக்குத் தோன்றியது. தன்னை அவர் கொல்ல முயன்றபோது போட்டிருந்த சட்டையில் இன்னும் ரத்தக் கறை இருந்தது. அது மட்டுமல்லாமல், கத்தி அந்தப் பணக்காரருடைய கையைக் கீறியபோது வந்த அவருடைய ரத்தக் கறையும் அந்த சட்டையில் இருந்தது. எனவே அந்த ரத்தக் கறையில் இருந்த DNA டெஸ்ட் மூலம் அது அவருடைய ரத்தம்தான் என்று நீதிமன்றத்தில் ஊர்ஜிதம் செய்யப் பட்டது.
நீதிமன்றம் அந்தப் பணக்காரருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை கொடுத்தது. மனம் திருந்திய அவர் தன்னுடைய பெண்ணை அவனுக்கே திருமணம் செய்து கொடுத்தார்.
இந்தக் கதையில் இருந்து தெரியும் நீதி என்ன?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
அந்தப் பணக்காரர்தான் கொலை செய்ய முயற்சி செய்தார் என்பதை நீதி மன்றத்தில் நிரூபிக்க உதவியதால்
கறை நல்லது
7 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
அப்ப சர்ஃப் யூஸ் பண்ண வேணாம்னு சொல்லுறீங்களா ?
ஆனா அந்த பணக்காரருக்கு கறை கெட்டதாச்சே...?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆனா அந்த பணக்காரருக்கு கறை கெட்டதாச்சே...//
கெட்டவங்களுக்குக் கெட்டது, நல்லவங்களுக்கு நல்லது
arumai.இலக்கியாவின் நடை சீ இலக்கிய நடை சூப்பர்
அடங்கொண்ணியா
நீதி கதை நல்லது...... ஹா,ஹா,ஹா,ஹா....
மனதைப்பிழிந்த காதல் கதை!
http://somayanam.blogspot.com/2011/03/blog-post_18.html
Post a Comment