அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, October 30, 2011

போலீசா கொக்கா? (சவால் சிறுகதை-2011)

டிஸ்கி: யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதை போட்டிக்கு எழுதியது

பிரபல பத்திரிக்கையாளர் கருப்பசாமி கொலை
கொன்றது யார்? திணறுகிறது போலீஸ்!

அன்றைய மாலை செய்தித் தாள்கள் எல்லாம் ஒருசேர இந்த செய்தியைத் தான் வெளியிட்டிருந்தன.

 "வாட் ஆர் யு டூயிங்? இறந்தது யார் தெரியுமா? அவர் ஒரு பத்திரிக்கையாளர் மட்டுமில்லை, ஆளுங்கட்சி மந்திரி கோவிந்தசாமியின் மாமனார் கூட. எனக்கு மேலிடத்திலிருந்து கேள்வி மேல் கேள்வி கேக்கறாங்க, நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்ல?"  கோபமாய் இருந்த டி.ஜி.பியிடம் என்ன பதில் சொல்லி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார் எஸ்.பி. கோகுல்.

"ஐ யாம் டூயிங் மை லெவல் பெஸ்ட், சார்" என்றவரிடம் "ஐ டோன்ட் வான்ட் யுவர் வேர்ட்ஸ், ஐ வான்ட் ஆக்சன் அண்ட் யு மே கோ நவ்." என்று முடித்துக் கொண்டார் டி.ஜி.பி.

வெளியில் வந்து நேரே தன்னுடைய அலுவலகத்திற்கு வந்த கோகுல் அந்த இளைஞனைப் பார்த்தார். இருபத்தைந்து வயதிருக்கும், மாநிறம், வெளிர்த்த ஜீன்சும் சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாத ஒரு டி-சர்ட்டும் அணிந்திருந்தான்.

"சார், என் பேர் விஷ்ணு.  உங்களுக்கு முன்னாடி இருந்த எஸ்.பி.க்கு நான்தான் சில முக்கிய செய்திகள் எல்லாம் சொல்வேன், சார்"

"ஓகே, விஷ்ணு, இப்ப நான் ஒரு முக்கிய விஷயமா பிசியா இருக்கேன், உங்க நம்பரைக் கொடுங்க, தேவைப்படும்போது கூப்பிடறேன்" என்றதும், அவன் தன் விசிடிங் கார்டை கொடுத்து விட்டு சென்றான். அந்த கார்டில் இருந்த நம்பரை தன் செல்போனில் சேவ் செய்தார் கோகுல்.

கருப்பசாமி கொலை வழக்கு பைலை எடுத்து அதிலேயே ஆழ்ந்திருந்தபோது செல்போன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்த கோகுல், "சொல்லுங்க விஷ்ணு, என்ன விஷயம்?"

"சார் பத்திரிக்கையாளர் கருப்பசாமி கொலை விஷயமா ரொம்ப இம்பார்டன்ட் இன்பர்மேஷன்! கொஞ்சம் அர்ஜெண்டா ஹோட்டல் ராயல் வர முடியுமா?"

அடுத்த பத்து நிமிடத்தில் ஹோட்டல் ராயல் சென்றவரிடம் கிட்டே வந்த விஷ்ணு, "சார், பேச நேரமில்லை, எட்டாவது டேபிள்ல Salt & Pepper வச்சிருக்கற ப்ளேட்டுக்கு அடியில ஒரு சீட்டு இருக்குது, அதைப் பாருங்க, என்றபடியே தன் டூ-வீலரில் பறந்து சென்றுவிட்டான்.

உள்ளே நுழைந்து நேரே அந்த எட்டாவது டேபிளில் இருந்த அந்த சீட்டை எடுத்துப் படித்தார். அதில் இப்படி இருந்தது.

"இந்த கேசில் முக்கிய க்ளூ கிடைத்துள்ளது. அது பற்றி விவரிக்க நேரமில்லை, எனவே, மாலை ஐந்து மணிவரை பொறுத்துக் கொள்ளவும்".
(இங்கேயே அந்த க்ளூ வரிகளை நான் கொடுத்துவிட்டால், மற்றவருக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்காதே......ஹிஹி)
வெறுப்புடன் ஸ்டேஷன் வந்தார். எஸ்.ஐயை அழைத்து கேட்டார். "அந்த விஷ்ணு எப்படிப்பட்ட ஆளு, நல்ல ஆளுதானா?"


"நம்பகமான ஆளு சார், பழைய எஸ்.பி. அவர் துணையோடதான் நிறைய கேசில் துப்பு துலக்கியிருக்கிறார், சார்!"

எஸ்.ஐயை அனுப்பிவிட்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டே யோசித்தார். ஒரு பத்திரிக்கையாளனுக்கு நிறைய எதிரிகள் இருக்கத் தான் செய்வார்கள்,. அதுவும் இந்த கருப்பசாமி ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்கட்சிகளை குறிவைத்தும் நிறைய பொய் செய்திகளைக் கூட வெளியிட்டவர், எனவே, இந்தக் கொலையில் எதிர்க்கட்சிக்கு நிச்சயம் பங்கிருக்கும், அவர் எதிர்க்காத எதிர்க்கட்சியே கிடையாது எனும்போது அந்த கொலைகாரனை எப்படி அடையாளம் காண்பது?

யோசித்துக் கொண்டிருக்கும்போது வெளியே பார்த்தார். அங்கே, எஸ்.ஐ. யாரிடமோ சீரியசாக போனில் பேசிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.  அது மட்டுமில்லாமல், எஸ்.ஐ. பேசிக்கொண்டிருக்கும்போது அப்போதைக்கப்போது தன்னுடைய ரூமையும் நோட்டம் விடுவதுபோல் தோன்றியது. சிறிது நேரத்தில் அந்த எஸ்.ஐ.  தன் மேஜை டிராயரில் இருந்து ஏதோ பேப்பரை எடுத்துப் பார்த்து விட்டு திரும்பவும் அதை டிராயரிலேயே போட்டு மூடினார். இதைப் பார்த்த கோகுலுக்கு ஏதோ பொறி தட்டியது. சற்று நேரத்தில் எஸ்.ஐ.வெளியே போனதும் விடுவிடுவென்று அவர் டேபிளுக்கு வந்த எஸ்.பி. டிராயரைத் திறந்து அந்தப் பேப்பரை வெளியே எடுத்தார்.  அதில் இவ்வாறு நீட்டாக டைப் செய்யப்பட்டு இருந்தது:

Mr. கோகுல், S W H2 6F இதுதான் குறியீடு. கவனத்தில் கொள்ளவும்
- விஷ்ணு 


கோகுலுக்கு ஒன்றும் புரியவில்லை. இதன் மூலம் விஷ்ணு என்ன சொல்லவருகிறான்? இதை ஏன்  எஸ். ஐ. தன்னிடம் கொடுக்கவில்லை?
குழப்பத்துடன் தன்னுடைய டேபிள் டிராயருக்குள் அந்த பேப்பரை பத்திரப்படுத்தி வைத்தார்.  டேபிளில் இருந்த டெலிபோன் ஒலித்தது. எடுத்தார். எதிரில் ஒரு குரல்: "ஹலோ, நான் யாருன்னு உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை, ஆனா உங்க நல்லதுக்கு சொல்றேன், இந்த கருப்பசாமி கொலை விவகாரத்தில் நீங்க ரொம்ப மூக்கை நுழைக்காதீங்க. அப்படியே விட்டுடறதுதான் உங்களுக்கு நல்லது.....அந்த விஷ்ணுவை நம்பாதீங்க, அவன் ஒரு அயோக்கியன்...."


"ஹலோ, நீங்க யாரு, ஹலோ,ஹலோ,....."கோகுல் மீண்டும் மீண்டும் குரல் கொடுத்ததும் பயனில்லை, எதிர்முனை ரிசீவர் எப்போதோ வைக்கப் பட்டிருந்தது. 

"சார்,கூரியர் வந்திருக்கு" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தார், எதிரே ஒரு இளைஞன் கையில் தபாலுடன்.

"ஏம்பா, அதைக் கொடுக்க நேரா என் ரூமுக்குள்ளேயே வரணுமா?" 

"சாரி சார், உங்க பேருக்கு வந்திருக்கு, அதான்..."

கையெழுத்து போட்டு வாங்கிப் பிரித்தார். உள்ளே ஒரே ஒரு துண்டுச் சீட்டு, அதில் இவ்வாறு டைப் பண்ணப்பட்டு இருந்தது:

 Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத் தான் தந்திருக்கிறேன், கவலை வேண்டாம்
-விஷ்ணு
 
இப்போது கோகுல் சுத்தமாகக் குழம்பியிருந்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

இரண்டு பேப்பரையும் வெளியே எடுத்தவர் அவற்றில் ஏதாவது க்ளூ கிடைக்குமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே செல் அலறியது. "vishnu  informer calling" என்று ஒளிர்ந்தது. ஒரு நிமிடம் யோசித்தார் பிறகு பட்டனை அழுத்த மறு முனையில், "சார், நான்தான் விஷ்ணு பேசறேன்,ஒரு அஞ்சு மணிக்கு ராசி மஹால் வந்துடலாமா,ப்ளீஸ்"
டென்சன் ஆன  கோகுல், இரைந்து பேசினார்,"மிஸ்டர் நீங்க ஒரு காவல்துறை உயர் அதிகாரியோட பேசிகிட்டிருக்கீங்க, மறந்துடாதீங்க".
"எஸ், ஐ நோ, பட் உங்களுக்கு க்ளூ வேணும்னா வந்துதான் சார், ஆகணும்" போன் வைக்கப் பட்டது.
தன் விதியை நொந்துகொண்டு ஐந்து மணிக்கு ராசி மஹால் வந்தார், அங்கு காத்துக் கொண்டிருந்த விஷ்ணு அவரிடம் ஒரு பையை நீட்டினான். பைக்குள் ஒரு துணி பிரித்துப் பார்த்தார்,அது எதிர்க்கட்சிக் கொடித் துணி.."இது என்ன?" என்றவரிடம் "சார், இந்தத் துணி செத்துப்போன கருப்பசாமி கைக்குள் இருந்ததுன்னு சொல்லி ஒரு ஆளு என்கிட்டே வந்து கொடுத்தான். சாரி சார், எனக்கு வேற ஒரு வேலை இருக்கு, இப்போ கிளம்பறேன்" பதிலுக்கு காத்திராமல் விருட்டென்று வெளியேறினான். அப்போதுதான் அந்தக் குறியீடு உள்ள பேப்பரை பற்றி கேட்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்தினார் கோகுல்.

ஸ்டேஷனுக்கு வந்த கோகுலிடம் எஸ்.ஐ. வேகமாக ஓடி வந்தார். "சார், காலையிலேயே விஷ்ணு என்கிட்டே ஒரு கவர் கொடுத்தான் சார், அதை உங்ககிட்ட கொடுக்க மறந்துட்டேன்..ஆனா அந்த கவரை என் டேபிளில் இப்போ காணோம்" என்று பதட்டத்தோடு சொல்ல,"இட்ஸ் ஓகே, லீவ் இட்" என்று சொல்லிவிட்டு தன டேபிளுக்கு வந்தார். போன் அலறியது. எடுக்க, எதிர் முனையில் டி.ஜி.பி. "என்ன மிஸ்டர் மந்திரி மாமனார் கொலை வழக்கு என்ன ஆச்சு? எனி க்ளூ?" என்று கேட்டார்.  உடனே கோகுல், "சார், சில விஷயங்களைப் பார்க்கும்போது இது எதிர்க்கட்சி வேலை மாதிரிதான் தெரியுது" என்றார். "நீங்க நினைக்கறது எல்லாம் எனக்கு தேவை இல்லை, ஐ வான்ட் கிளியர் எவிடென்ஸ்" கறாராக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் டிஜிபி. விஷ்ணு சம்பந்தப்பட்ட இரண்டு பேப்பர்களையும் வைத்து உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார் கோகுல்.

*******************

ஹோட்டல் ராயல் மூன்றாம் மாடியில்  ஒரு அறையில் கையில் கிளாசுடன் இருந்த மந்திரி கோவிந்தசாமி சிரித்துக் கொண்டிருந்தார். எதிரில் விஷ்ணு பவ்யமாக நின்றிருந்தான்.
"கலக்கிட்டேடா விஷ்ணு. எனக்கு சொத்துல பைசா கூட தரமாட்டேன்னு வம்பு பண்ணிட்டிருந்த என் மாமனாரை நானே விஷம் வைத்துக் கொன்னுட்டேன், ஆனா போலீஸ் இப்போ எதிர்க்கட்சிக்காரனுங்களை வேவு பார்க்க ஆரம்பிச்சிடுச்சு. இப்பதான் டிஜிபி என்கிட்டே போன்ல பேசினார். உங்க கோகுல் அப்படிதான் சொன்னாராம்" 
"ஆமாய்யா ஒரு சாதாரண இன்பார்மரா இருந்த நான் இப்போ பல லட்சங்களுக்கு அதிபதியா மாறப்போறேன்னா அது ஐயா தயவுலதான். யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு உங்க நம்பரைக் கொடுத்து உங்களைச் சந்திக்க சொன்னப்போ எனக்கு ஒன்னும் புரியலை. ஆனாஉங்களைப் பார்த்ததும் தான் உங்க திட்டம் புரிஞ்சு நான் ஒத்துகிட்டேன். நீங்க சொன்னபடி முதல்ல கோகுலைப் பார்த்து என்னை அறிமுகப்படுத்திகிட்டேன். அப்புறம் எஸ்.ஐக்கு கொஞ்சம் பணம் கொடுத்து ஒரு பேப்பர்ல குறியீடு அப்படி இப்படின்னு டைப் பண்ணி அதை கோகுல்கிட்ட நேரா கொடுக்காம கொஞ்சம் சந்தேகம் வரா மாதிரி மறைமுகமா கொடுக்க வச்சேன். நானே வேற ஒரு பேப்பர்ல அந்த குறியீடு தப்புன்றமாதிரி எழுதி அதை குரியர் மூலமா கோகுல்கிட்ட சேர்த்திட்டேன். சாயந்திரம் கோகுலை ஹோட்டலுக்கு வரவழைச்சு எதிர்க்கட்சி துணியையும் கொடுத்திட்டேன். இப்ப யாருக்குமே உங்க மேல சந்தேகம் வராது." சொல்லிவிட்டு இளித்தான் விஷ்ணு.. 
"ஒரு இன்பார்மரே இப்படி குழப்பிவிட்டாதான் என் மேல போலீசுக்கு துளியும் சந்தேகம் வராதுன்னுதான் நான் உன்னை தேர்ந்தெடுத்தேன், ஓகே, உன் நடிப்புக்கு கூலியா பத்து லட்சம், இந்த சூட்கேஸ்ல இருக்கு, உனக்குத்தான், எடுத்துக்கோ" என்று ஒரு சூட்கேசை நீட்டினார். பவ்யமாக அதை வாங்கிக்கொண்டான் விஷ்ணு.

அதே சமயம், படாரென்று கதவு திறந்தது, கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த எஸ்.பி.கோகுல் "யாரும் அசையக் கூடாது. மிஸ்டர் கோவிந்தசாமி உங்க மாமனாரை கொலை செஞ்ச குற்றத்துக்காக உங்களைக் கைது செய்யறேன்" என்றார்.
அதிர்ச்சியில் உறைந்திருந்த விஷ்ணுவின் அருகில் சென்று அவன் கையில் இருந்த சூட்கேசை வாங்கிய கோகுல், "என்ன மேன், பாக்கறே? எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னா? முட்டாள், நீ ஒரு லெட்டரை எஸ்.ஐ. கிட்ட கொடுத்திருந்தியே, அந்தப் பேப்பரை உற்று பார்த்தப்போ அதில் சில நம்பரோட இம்ப்ரெஷன் இருந்தது. லேபுக்கு அனுப்பி பார்த்தா அது ஒரு செல்போன் நம்பர், இதோ இந்த மந்திரியோட செல்போன்.நம்பர் அது. நீ வேற வாலண்டியரா வந்து இந்த கேஸ்ல துப்பு கொடுத்தே. அதான், அப்பவே உன்மேல ஒரு சந்தேகம் வந்து உன் செல்போனை ஒட்டுக்கேட்க ஏற்பாடு செஞ்சேன்.  நீயும் மந்திரியும் சந்திக்கறது தெரிஞ்சதும் இந்த ரூமில நடக்கிறதை எல்லாம் அதோ அந்த CCTV கேமரா மூலம் பார்த்துக்கொண்டே இருந்தோம்.  நீங்க பேசினது எல்லாம் இந்த டேப்ல பதிவாயிருக்கு. போலீசை ரொம்ப குறைவா எடை போட்டுட்டீங்க, போலிருக்கு, ஐ ஆம் சாரி,  ஒரு சின்ன க்ளூ கிடைச்சாகூட போதும் நாங்க எந்த கேசையும் சுலபமா கண்டுபிசுடுவோம், ஸ்டேஷன் போகலாமா?" 

25 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ஷைலஜா said...

ம்ம் சவால் கதை நன்றாகவே இருக்கே வாழ்த்துகள்!

அனு said...

கதை கலக்கலா இருக்கு, பெசொவி.. வெற்றி பெற வாழ்த்துக்கள்!! :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கதை சூப்பரா இருக்கு, வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan said...

துப்பறியும் கதை....
விறுவிறுப்பிற்கு குறையில்லை.. வாழ்த்துக்கள்..

Madhavan Srinivasagopalan said...

தலைபிற்கும் கதைக்கும் 50 சதவிகிதம்தான் லிங்க் இருக்குபோல..
அதாங்க.. கடைசி வரைக்கு 'கொக்கு' என்ட்டர் ஆகவே இல்லையே..

Madhavan Srinivasagopalan said...

இந்த கதைய நான் சிரிப்பு போலீசிற்கு டெடிகேட் பண்ணுறேன். ----- பெ.சோ.வி

பெசொவி said...

வாழ்த்திய வாழ்த்தப் போகும் உள்ளங்களுக்கு நன்றி! அப்படியே உடான்சில் வோட்டும் போட்டுடுங்க!

பெசொவி said...

@ Madhavan
//அதாங்க.. கடைசி வரைக்கு 'கொக்கு' என்ட்டர் ஆகவே இல்லையே..//

போலீசா, கொக்கா என்ற கேள்வி எழும்போது போலீசே வெல்லும் என்ற ரீதியில் கதை அமைந்திருப்பதால் தலைப்பிற்கும் கதைக்கு இருநூறு சதம் சம்பந்தம் இருக்கிறது.......................சோடா ப்ளீஸ்.

பெசொவி said...

@ Madhavan
//இந்த கதைய நான் சிரிப்பு போலீசிற்கு டெடிகேட் பண்ணுறேன். ----- பெ.சோ.வி//

என்னதான் கதையில் இரண்டு இடத்தில ஹோட்டல் வந்திருந்தாலும் அதுக்காக ரமேஷுக்கு இந்த கதையை டெடிகேட் பண்ணிட முடியுமா? :))

Madhavan Srinivasagopalan said...

// போலீசா, கொக்கா என்ற கேள்வி எழும்போது //

அத எவன் எழுப்பி விட்டான் ?

RVS said...

சவாலை சமாளிச்சிடீங்க... கதை நல்லாயிருக்கு.... ”திருடனைப் பிடிக்க காத்திருக்குமாம் போலீஸ் கொக்கு”ன்னு கூட நீங்க மாதவன்ஜிக்கு பதில் சொல்லியிருக்கலாம் பெசொவிஜி :-)

வெளங்காதவன்™ said...

:-)

ஜூப்பரு....

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

RVS..

ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு

வெங்கட் said...

கதை சூப்பரா இருக்கு, வாழ்த்துக்கள்!

Madhavan Srinivasagopalan said...

//வெங்கட் said...

கதை சூப்பரா இருக்கு, வாழ்த்துக்கள்!//

பெ.சோ.வி VASக்கு மாறிட்டாரா ?

பெசொவி said...

@ Madhavan

//பெ.சோ.வி VASக்கு மாறிட்டாரா ?

NO. But Venkat has joined PAS.
(Pesoviyai aatharippor sangam)

rajamelaiyur said...

கதை அருமை ...

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல கதை!

((கோகுல் பெயருக்கு வந்த கூரியரில் ))

இதை மட்டும் கொஞ்சம் மாற்றியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

ட்விஸ்ட்டா வச்சி கலக்கியிருக்கீங்க. வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்....

வைகை said...

கதை சூப்பரா இருக்கு பெசொவி.. வெற்றி பெற வாழ்த்துக்கள்!! :)

செல்வா said...

கதை ரொம்ப நல்லா இருக்குணா :))

middleclassmadhavi said...

Very nice story! Congrats!

bigilu said...

நல்லா இருந்துச்சுங்க கதை.. வாழ்த்துக்கள்...