அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Monday, October 31, 2011

காக்கும் விஷ்ணு (சவால் சிறுகதை 2011)

முன் டிஸ்கி: இந்தப் போட்டிக்கான என் இரண்டாவது கதை இது.


"என்ன சார் சொல்றீங்க, நீங்க, நம்ம விஷ்ணுவையா சொல்றீங்க, இருக்காது" அக்கவுண்ட்ஸ் மேனேஜர் ராஜீவ் நம்ப முடியாமல் கேட்டார்.
"விஷ்ணு என்ன சார், யாரா இருந்தாலும் அவங்களுக்குன்னு ஒரு வீக் பாய்ன்ட் இருக்கும், தட்டற இடத்துல தட்டினா கவுந்துடுவாங்க" வீம்பாக பதில் சொன்னார் கோகுல், அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேனேஜர். அதாவது சேல்ஸ் பிரான்ச் மேனேஜர். சுருக்கமாக எஸ்.பி.(S .B .) கோகுல் என்றுதான் அவரை அழைப்பார்கள்.. 

"இருந்தாலும் நான் இதை ஒப்புக்கவே மாட்டேன். மத்தவங்க எப்படியோ என்னுடைய பி.ஏ.விஷ்ணுவை நிச்சயம் நம்பலாம், அவனால எந்த ரகசியத்தையும் காப்பாத்த முடியும்."நிச்சயமாக சொன்னார் ராஜீவ்.

"ஓகே. ஒரு சின்ன டெஸ்ட் வச்சுடுவோம். உங்களுக்கும் விஷ்ணுவுக்குமே தெரிஞ்ச ஏதாவது ஒரு ரகசிய விஷயத்தை அவனிடம் இருந்து கறந்து காட்டவா?" இது கோகுல்.

"அதுவும் நல்ல ஐடியா தான். நான் என் கம்பியூட்டர்ல ஒரு ரகசிய டேட்டா பேஸ் வச்சிருக்கேன். அந்த ஃபைல ஓபன் பண்ற பாஸ்வேர்ட் அதாவது குறியீடு எனக்கும் விஷ்ணுவுக்கும் மட்டும்தான் தெரியும். நீங்க அந்த ஃபைலை ஓபன் பண்ணி காட்டுங்க, நான் ஒத்துக்கறேன்."

"அக்செப்டட். பட் இது விஷயமா விஷ்ணுகிட்ட நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்" பேசி முடித்து விட்டு தன் டேபிளுக்கு வந்த கோகுல் இண்டர்காமை எடுத்து விஷ்ணுவுக்கு போன் போட்டார். "விஷ்ணு ஒரு முக்கிய விஷயம், லஞ்ச் டயத்துல என் சீட் பக்கம் வர முடியுமா?" 
"ஓ, ஷ்யூர் சார்" என்றான் விஷ்ணு, என்ன விஷயம் என்றே தெரியாமல்.

****************

லஞ்ச் டயம். எஸ்.பி. கோகுல் விஷ்ணுவிடம் லேசாக ஆரம்பித்தார், "நம்ம ஹெட் ஆபீஸ்லேர்ந்து எனக்கு ஒரு ரிக்வெஸ்ட் வந்திருக்கு. இங்க இருக்கற எல்லாரையும் பத்தி நான் விசாரிச்சு ஒரு அறிக்கை தரணுமாம். அதன்பேரில், நான் யாரைப் பத்தியெல்லாம் நல்ல ரிப்போர்ட் தரேனோ அவங்களுக்கெல்லாம் ப்ரமோஷன் தரப்போறதா என்கிட்டே சொல்லியிருக்காங்க".

"அதை ஏன் சார் என்கிட்டே சொல்றீங்க?" அப்பாவியாய் கேட்டான் விஷ்ணு.

"காரியம் இருக்கு, நீயும் ரொம்ப நாளா இங்க பி.ஏ.வாவே இருக்கிறே! உனக்கு ப்ரமோஷன் வந்தா நீயும் ஹெட் ஆபீஸ்ல அசிஸ்டன்ட் மேனேஜர் ஆகிடலாம், அதான்................."இழுத்தார் கோகுல்.

"ரொம்ப சந்தோசம் சார், உங்க நேரடிக் கட்டுப்பாட்டுல வேலை செய்யலேன்னா கூட என்மேல இந்த அளவுக்கு நல்ல அபிப்ராயம் வச்சிருக்கீங்கன்னு நினைக்கும்போது பேச வார்த்தையே வரல, சார்"

"இட்ஸ் ஓகே! பட் ஒரே ஒரு விஷயம் உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும். முடியுமா?"

"என்ன சார்?"

"அதாவது இந்த விசாரணை சம்பந்தமா எனக்கு சில தகவல்கள் தேவைப்படுது அது நம்ம ஜெனரல் மேனேஜர் கம்பியூட்டர்ல ஒரு பைல்ல இருக்கு. ஆனா அதுக்கு ஏதோ குறியீடு இருந்தாதான் ஒப்பன் பண்ண முடியுமாம். அந்த குறியீடு உனக்கு தெரியுமா? தெரிஞ்சா சொல்லேன் "

"தெரியும், சார், ஆனா........................... "இழுத்தான், விஷ்ணு.

"என்ன ஆனா...?"

"இல்ல, சார், நீங்களும் ராஜீவ் சாரும் ஒரே ஸ்டேட்டஸ்ல இருக்கறவங்கதான், ஆனாலும் என்னை நம்பி ஒரு குறியீடு கொடுத்திருக்காரு எங்க பாஸ், அதை உங்ககிட்ட சொல்றது தப்பு சார்"

"இதில என்ன தப்பு இருக்கு? இப்ப நீயே சொல்ற நானும் ராஜீவும் ஒரே ஸ்டேட்டஸ்ல இருக்கோம்னு. ஹெட் ஆபீஸ் என்கிட்டதான ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கு, அப்பவே தெரியலையா, நான் ராஜீவை விட கொஞ்சம் மேல் தட்டுல இருக்கேன்னு?  இதே விஷயத்தை ராஜீவ்கிட்டயே தெரிஞ்சுக்கறது எனக்கு ஒன்னும் கஷ்டமில்லை, ஆனா உன்கிட்ட கேட்டு உனக்கும் ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன்.  ஆனா ஒன்னு, இதுக்கு நீ நிச்சயம் பின்னால வருத்தப்படுவே"  

விஷ்ணு எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

பிற்பகல் மூன்று மணியளவில் ராஜீவிடமிருந்து ஒரு ஃபைல் வந்தது கோகுலுக்கு. அதே நேரம் விஷ்ணு இன்டர்காமில் அழைத்தான். "சார், உங்ககிட்ட ஒரு File வந்திருக்கா, அதில கடைசியில பாருங்க" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான். 

பரபரவென்று கடைசி பக்கத்தைப் புரட்டியவர் அதில் ஒரு ஸ்லிப் இருப்பதைக் கண்டார். அதில் இருந்த குறியீட்டை மனப்பாடம் செய்து கொண்டவர் அந்த ஸ்லிப்போடு ராஜீவின்  ரூமுக்கு சென்றார். ராஜீவிடம் எதுவும் பேசாமல் நேரே கம்பியூட்டரை இயக்கியவர் அந்த ஃபைலை ஓபன் செய்தார். type the password என்று கர்சர் நின்ற இடத்தில் மனப்பாடம் செய்து வைத்திருந்த குறியீட்டை டைப் செய்தார். டக்கென்று ஃபைல் ஓபன் ஆனது. ஆனால், பைலில் தான் எந்த எழுதும் தெரியவில்லை அப்படியே ப்ளாங்க்காக இருந்தது.வெற்றிப் புன்னகையுடன் ராஜீவின் டேபிள் அருகே வந்தார். ராஜீவ் ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தார்.  தன்னுடைய பாக்கெட்டில் இருந்து அந்த ஸ்லிப்பை எடுத்து ராஜீவ் டேபிளில் போட்டார்.

ராஜீவும் தன பாக்கெட்டில் இருந்து ஒரு ஸ்லிப்பை போட்டார். அந்த ஸ்லிப்பை எடுத்துப் பார்த்த கோகுல் அதிர்ந்தார், அதில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது.


Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத் தான் தந்திருக்கிறேன், கவலை வேண்டாம்
-விஷ்ணு


"லஞ்ச் முடிஞ்சதும் விஷ்ணு எனக்கு ஒரு ஸ்லிப் அனுப்பி வச்சான். அதில் நீங்க அவனிடம் பாஸ்வேர்ட் கேட்டதைப் பத்தியும் அதனால தான் தப்பான குறியீட்டை சொல்லப்போவதாகவும் எழுதியிருந்தான். இதை நேர்ல சொல்ல  கூச்சமா இருந்ததாகவும் அதுனாலதான் ஸ்லிப்பில எழுதி அனுப்பினதாவும்  அதில சொல்லியிருந்தான்" என்றார் ராஜீவ்.   சொல்லிவிட்டு கோகுல் நீட்டிய ஸ்லிப்பைப் பார்த்த ராஜீவ் மேலும் ஆச்சரியமடைந்தார். அதில் இருந்த வாசகம் 


Mr. கோகுல், S W H2 6F இதுதான் குறியீடு. கவனத்தில் கொள்ளவும்
- விஷ்ணு  


"என்ன சார் ஆச்சரியமா பார்க்கறீங்க?" என்ற கோகுலிடம், "விஷ்ணு தப்பான குறியீட்டைத் தான் உங்களுக்கு குடுத்திருக்கான் நீங்க எப்படி ஓபன் பண்ணினீங்க?" என்று கேட்டார் ராஜீவ்.


அதிர்ந்து போனார், கோகுல். "இல்லையே, சரியான Passwordதான, அது? S W B2 8F சரியாதான சொல்றேன்?" ராஜீவுக்கு புரியவில்லை, "நீங்க சொன்ன பாஸ்வோர்ட் சரிதான், ஆனா இதில விஷ்ணு அப்படி எழுதலையே!"


"கொஞ்சம் இருங்க," கோகுல் இப்போது தன் மூக்குக்கண்ணாடியை பையில் இருந்து எடுத்து படித்தார். "அட ஆமாம், வேற தான் எழுதிக் குடுத்திருக்கான், அது.....நான் கண்ணாடி மாட்டாம படிச்சேனா, H  வந்து B மாதிரியும் 6-௮ பாத்தா 8  மாதிரியும் தெரிஞ்சிருக்கு. ஒரு Flukeல அதுவே சரியான பாஸ்வேர்டா அமைஞ்சிருக்கு" அசடு வழிந்தார், கோகுல்.
இரண்டு பேரும் வயிறு குலுங்க சிரித்தார்கள். கோகுல் ஒப்புக்கொண்டார், "விஷ்ணு உண்மையில்தான் நல்ல பி.ஏ.தான். அவன்கிட்ட என் பாட்சா பலிக்கலை. அது போகட்டும், ஏதோ முக்கிய டேட்டா பேஸ் வச்சிருக்கேன்னு  சொன்னீங்க, ஆனா அங்க ஒண்ணுமே தெரியலையே?"  
ராஜீவ் பதில் சொல்லுமுன் அவர் செல்பேசி அழைத்தது. "Vishnu Informer calling" என்று ஒளிர்ந்தது. போனை எடுத்துப் பேசினார் ராஜீவ், "எஸ், சொல்லுங்க, ஓகே. நோ ப்ராப்ளம். நான் பார்த்துக்கறேன்" என்று பேசி வைத்துவிட்டார். "யார் சார் அது விஷ்ணு இன்பார்மர்?" என்று கேட்ட கோகுலிடம் "அட நம்ம ஹெட் ஆபீஸ்ல இருக்காங்களே விஷ்ணுப்ரியா, ஸ்டெனோ, அவங்கதான். நமக்கு அங்கேருந்து இன்பர்மேஷன் அவங்கதான் தராங்கங்கறதால அவங்க நம்பரை அப்படியே சேவ் பண்ணிட்டேன்" சொல்லி சிரித்தார் ராஜீவ். 
கூட சிரித்த கோகுல் மீண்டும் கேட்டார், "அந்த டேட்டா பேஸ் விஷயம்....?"
இப்போது ராஜீவ் சிரித்தார், "அதுவா, நான் டேட்டா பேஸ் வச்சிருக்கறது உண்மைதான்.  ஆனா ஃபான்ட் கலர் வெள்ளையில் வச்சிருக்கேன். CTRL A அழுத்தினா போதும், மொத்த டேட்டாவும் நல்லா தெரியும்.  அதுனால பாஸ்வேர்ட் தெரிஞ்சிருந்தாலும் யாராலும் டேட்டாவை படிக்க முடியாது"
"இதுநல்ல ஐடியா தான். புதுசா யோசிச்சிருக்கீங்க, போலிருக்கு" இருவரும் சிரித்தனர்.

டிஸ்கி :  கதை பிடிச்சிருந்தா உடான்ஸ்ல  மறக்காம வோட்டு போட்டுடுங்க. 

28 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி...

#ஆமா, இதுக்கு முந்தி எந்தப் பதிவு வொயிட் லெட்டர்ல போட்டு இருக்கீங்க?

Madhavan Srinivasagopalan said...

நீங்க இந்தக் கதையையும் வெள்ளை ஃ பாண்ட்ல எழுதி இருந்தா.. உங்களுக்கு புண்ணியமாப் போயிருக்கும்..

Madhavan Srinivasagopalan said...

உங்கள் கதையில் வன்முறை, போலீஸ், இதெல்லாம் இல்லை..
ஆனாலும் வித்தியாமா யோசிச்சீங்க.. ஆள் தி பெஸ்ட்.

Shanmugam Rajamanickam said...

சோ சேட்....

Shanmugam Rajamanickam said...

சோ சேட்....

SURYAJEEVA said...

சரி தான், கடைசி நிமிஷங்களில் வரும் சவால் போட்டி சிறுகதைகளை படிச்சா அடுத்த வருஷம் ஆணியே புடுங்க வேணாம் அப்படின்னு சொல்லிடுவாங்க போலிருக்கு, உடான்ஸ் தேர்வுக் குழுவினர்

பெசொவி said...

@ வெளங்காதவன்
http://ulagamahauthamar.blogspot.com/2010/04/blog-post_18.html

பெசொவி said...

//சண்முகம் said...
சோ சேட்....
//

But why???!!!

பெசொவி said...

//suryajeeva said...
சரி தான், கடைசி நிமிஷங்களில் வரும் சவால் போட்டி சிறுகதைகளை படிச்சா அடுத்த வருஷம் ஆணியே புடுங்க வேணாம் அப்படின்னு சொல்லிடுவாங்க போலிருக்கு, உடான்ஸ் தேர்வுக் குழுவினர்
//

But I think I have not violated any of the conditions mentioned therein! :))

பெசொவி said...

//Madhavan Srinivasagopalan said...
நீங்க இந்தக் கதையையும் வெள்ளை ஃ பாண்ட்ல எழுதி இருந்தா.. உங்களுக்கு புண்ணியமாப் போயிருக்கும்..

//

krrrrr.............!

பெசொவி said...

//Madhavan Srinivasagopalan said...
உங்கள் கதையில் வன்முறை, போலீஸ், இதெல்லாம் இல்லை..
ஆனாலும் வித்தியாமா யோசிச்சீங்க.. ஆள் தி பெஸ்ட்.
//

thank you, thank you!

TERROR-PANDIYAN(VAS) said...

//அது.....நான் கண்ணாடி மாட்டாம படிச்சேனா, H வந்து B மாதிரியும் 6-௮ பாத்தா 8 மாதிரியும் தெரிஞ்சிருக்கு. ஒரு Flukeல அதுவே சரியான பாஸ்வேர்டா அமைஞ்சிருக்கு" அசடு வழிந்தார், //

இங்கதான் கொஞ்சம் சறுக்கிட்டிங்க. மத்தபடி கதை ஓ.கே... எல்லாரை மாதிரி போலீஸ கட்டிகிட்டு அழாம மாத்தி யோசிக்கி இருக்கிங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@மாதவன்

//நீங்க இந்தக் கதையையும் வெள்ளை ஃ பாண்ட்ல எழுதி இருந்தா.. உங்களுக்கு புண்ணியமாப் போயிருக்கும்.//

ஹா... ஹா.. பின்னிட்டிங்க.. :))

பெசொவி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//அது.....நான் கண்ணாடி மாட்டாம படிச்சேனா, H வந்து B மாதிரியும் 6-௮ பாத்தா 8 மாதிரியும் தெரிஞ்சிருக்கு. ஒரு Flukeல அதுவே சரியான பாஸ்வேர்டா அமைஞ்சிருக்கு" அசடு வழிந்தார், //

இங்கதான் கொஞ்சம் சறுக்கிட்டிங்க. மத்தபடி கதை ஓ.கே... எல்லாரை மாதிரி போலீஸ கட்டிகிட்டு அழாம மாத்தி யோசிக்கி இருக்கிங்க... :)
//

அப்படியில்ல, டெரர்! இப்படி யோசிச்சு பாருங்க, கோகுல்கிட்ட கம்ப்ளீட்டா தப்பான பாஸ்வேர்டைக் கொடுக்க முடியாது, ஏன்னா விஷ்ணுவுக்கு அவரோட தயவும் தேவை. அதே சமயம் சரியான பாஸ்வேர்டை கொடுக்க மனசாட்சி இடம் கொடுக்கலை. அதான், ஒருவேளை, பின்னாடி அது பத்தி கேட்டா ரெண்டு இடத்திலையும் பதட்டத்துல தப்பா எழுதினதா சமல்லிக்கலாம் இல்லையா?

(ங்கொய்யால, விஷ்ணு சமாளிக்கறானோ இல்லையோ, நான் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!)

TERROR-PANDIYAN(VAS) said...

//ங்கொய்யால, விஷ்ணு சமாளிக்கறானோ இல்லையோ, நான் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!//

சமாளிக்க முயற்சி பண்ணி இருக்கிங்க. ஆனா சமாளிக்கவில்லை... :))) திரும்ப வந்து பாஸ்வேர்ட் கேட்டா.. அப்போ கொடுத்துடுவானா...

பெசொவி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//ங்கொய்யால, விஷ்ணு சமாளிக்கறானோ இல்லையோ, நான் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!//

சமாளிக்க முயற்சி பண்ணி இருக்கிங்க. ஆனா சமாளிக்கவில்லை... :))) திரும்ப வந்து பாஸ்வேர்ட் கேட்டா.. அப்போ கொடுத்துடுவானா...
//

அந்தத் தேவையே இருக்காதே, இப்பதான் கோகுலே தன்னோட தவறை ஒத்துகிட்டாரே......
(மைன்ட் வாய்ஸ் : திரும்பத் திரும்பப் பேசறே, நீ!)

Madhavan Srinivasagopalan said...

சவால் போட்டிக் கதை பலவற்றை படித்து கமெண்டு போட்டுவிட்டு, எனது கதையை இதுவரை சீண்டாத டெர்ரர் அவர்களை ______________

TERROR-PANDIYAN(VAS) said...

//இதுவரை சீண்டாத டெர்ரர் அவர்களை ______________//

இது தவறான கருத்து. அன்னைக்கே படிச்சிட்டேன்.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கதைய நேக்கா கொண்டு போயிட்டீங்களே....?

ஷைலஜா said...

sb கோகுல் என்ற ஆரம்பமே வித்யாசமா கதை போகப்போகிறத சொல்லிவிட்டது...அருமை வாழ்த்துகள்!

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said... 19

கதைய நேக்கா கொண்டு போயிட்டீங்களே....?
//


//ஷைலஜா said...

sb கோகுல் என்ற ஆரம்பமே வித்யாசமா கதை போகப்போகிறத சொல்லிவிட்டது...அருமை வாழ்த்துகள்!//


Thanks for the compliments!

:))

rajamelaiyur said...

கலகிடிங்க பாஸ்

வெங்கட் நாகராஜ் said...

இரண்டாவது முயற்சி... நல்ல விஷயம். வெற்றி பெற வாழ்த்துகள்...

Unknown said...

நல்ல இருக்கு....வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

நல்லாயிருக்கு கதை!! Ctrl+A idea புதிது!

என் சிறுகதையையும் முடிந்தால் படியுங்கள்! -http://middleclassmadhavi.blogspot.com/2011/10/2011.html

இராஜராஜேஸ்வரி said...

இதுநல்ல ஐடியா தான். புதுசா யோசிச்சிருக்கீங்க, போலிருக்கு"

.அருமை வாழ்த்துகள்!

Ganpat said...

உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் நீங்கள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்.நிறைய படியுங்கள்.
வாழ்த்துக்கள்.

bigilu said...

வாழ்த்துக்கள்..


நெசமா இது ரெம்ப நல்ல ஐடியா தான்... //நான் டேட்டா பேஸ் வச்சிருக்கறது உண்மைதான். ஆனா ஃபான்ட் கலர் வெள்ளையில் வச்சிருக்கேன். CTRL A அழுத்தினா போதும், மொத்த டேட்டாவும் நல்லா தெரியும்.//