அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, October 8, 2011

ஒரு விடுகதையின் மற்றொரு கோணம் (அல்லது நான் என் மகளிடம் வாங்கிய பல்பு)

விடுமுறை நாட்களில் என் இரு மகள்களிடமும் விடுகதை சொல்லி வேடிக்கை காட்டுவது என் வாடிக்கை. இன்று காலை நான் ஒரு விடுகதை புதிர் போட்டேன், அது இதுதான்:
"ஒரு அமாவாசை அன்னிக்கு ஒரு ஆளு காருல வேகமா ஓட்டிகிட்டு போறாரு. அப்போ கார் விளக்கு ஏதோ ஒரு காரணத்தால எரியலை. ரோட்டிலையும் எந்த லைட்டும் எரியலை. மழை வேற "சோ"ன்னு கொட்டிகிட்டிருக்கு. அந்த நேரம் பார்த்து எதிர்ல ஒரு வயசானவரு கறுப்புக் குடை வச்சுகிட்டு வராரு. ஆனாலும், அந்த கார் டிரைவர் அந்த வயசானவரு மேல மோதாம சமாளிச்சு ஓட்டறாரு. எப்படி?"

என் பெரிய பெண் உடனே, "இதுக்கு நான் பதில் சொல்றது இருக்கட்டும், நான் கேக்கறதுக்கு நீ பதில் சொல்லு" என்று சொல்லி கீழ்க் கண்ட கேள்விகளை என்னிடம் கேட்டாள்.

  • அந்த டிரைவருக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? கார் லைட்டு, டயருல  காத்து எல்லாம் செக் பண்ணாம கார எடுத்துகிட்டு போகலாமா? 
  • இப்படிப்பட்ட மழையில அந்தப் பெரியவரு ஏன் வீட்டை விட்டு வெளிய வரணும்?
  • அந்தப் பெரியவரு வீட்டுல உன் வயசுல யாரும் இல்லையா? வயசானவருக்கு  துணையா வந்தா குறைஞ்சா போயிடுவாரு?
  • அட் லீஸ்ட் அந்தப் பெரியவர் கையில ஒரு டார்ச் லைட்டாவது கொடுத்து அனுப்பிசிருக்கலாமே?
  • அந்த டிரைவராவது அந்த பெரியவரை தன் காருல வச்சுகிட்டு பத்திரமா அவரு வீட்டுல விட்டுட்டு போனா குறைஞ்சா போயிடுவாரு?
 இதுக்கு மேலயும் அவகிட்ட விடுகதை போடுவேனா என்ன?

டிஸ்கி : நான் போட்ட புதிருக்கு விடை அனேகமா எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். அதுனால பின்னூட்டத்துல சொல்லலாம். 
டிஸ்கிக்கு டிஸ்கி : இந்த பல்பு இந்தப் பதிவோட நிக்கலை, அடுத்த பதிவுலேயும் தொடரும்.


   

21 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

cheena (சீனா) said...

பொண்ணு அப்பாவ வுட புத்திசாலியா இருக்கு - பலே பலே நல்வாழ்த்துகள் பொண்ணுக்கு - நட்புடன் சீனா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பகல்ல போனாரு

middleclassmadhavi said...

ரமேஷ் சரியான பதிலைச் சொல்லிட்டாரு!

பொண்ணு ரொம்ப புத்திசாலி, சமூக அக்கறையும் இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பகல்ல போனாரு/////

ஏன் காலைல போயிருக்க மாட்டாரா?

Madhavan Srinivasagopalan said...

ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

MANO நாஞ்சில் மனோ said...

இதென்ன சின்னபுள்ளதனமான கேள்வி....!!! ஹி ஹி அமாவாசை அன்னைக்கு பகல்ல நடந்த சம்பவம், அந்த டிரைவர் நீங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

ரமேஷ் சரியான பதிலைச் சொல்லிட்டாரு!

பொண்ணு ரொம்ப புத்திசாலி, சமூக அக்கறையும் இருக்கு!(C&P)

rajamelaiyur said...

நல்ல பல்பு

rajamelaiyur said...

இன்று என் ப்ளாக் இல் ...


தெரியுமா உங்களுக்கு ?

வெங்கட் said...

// என் இரு மகள்களிடமும் விடுகதை சொல்லி வேடிக்கை காட்டுவது என் வாடிக்கை. //

பாத்தா அப்படி தெரியலையே..

விடுகதை சொல்றது உங்க வாடிக்கை..
வேடிக்கை காட்டுவது அவங்க வாடிக்கை
மாதிரியில்ல இருக்கு..!

Yoga.s.FR said...

நல்ல பொண்ணுங்க!நல்ல அப்பா! சுத்த லூசுக் கூட்டமால்ல இருக்கும் போலருக்கு?????????

Madhavan Srinivasagopalan said...

// Yoga.s.FR said... 11

நல்ல பொண்ணுங்க!நல்ல அப்பா! சுத்த லூசுக் கூட்டமால்ல இருக்கும் போலருக்கு????????? //

இதைப் படித்து.. பின்னூட்டமும் போடுறாங்க.. உங்களையும் சேர்த்து.. அப்ப நீங்க..?

பெசொவி said...

// Yoga.s.FR said...//

இது யாருன்னு தெரியலையே, புது பீசா இருக்கு? ஒரு வேளை லூசுங்க ப்ளாக் மட்டும் படிக்கற புத்திசாலியா இருக்குமோ?

cho visiri said...

That driver had night vission spectacles. No,no no......wait.
I thing that driver had lost both eyes in an accident a year ago and the doctors successfully translplanted Both eyes from a dyeing OWL.

Wait..wait there is one more solution(certainly not the one you have in mind)

The car was functioning on rador type mechanism, exactly the same way as a bat flies.

Eppady - Emaathittenenaa?

பெசொவி said...

@ cho visiri

I have heard of lateral thinking. I have got few more of the types from your comment. Thanks

பெசொவி said...

@ cho visiri
//The car was functioning on rador type mechanism, exactly the same way as a bat flies.
//

Is it not radar?

Eppadiyum thappu kandupidippor sangam!

Yoga.s.FR said...

Madhavan Srinivasagopalan said...

// Yoga.s.FR said... 11

நல்ல பொண்ணுங்க!நல்ல அப்பா! சுத்த லூசுக் கூட்டமால்ல இருக்கும் போலருக்கு????????? //

இதைப் படித்து.. பின்னூட்டமும் போடுறாங்க.. உங்களையும் சேர்த்து.. அப்ப நீங்க..?////காலை வணக்கம்!கரெக்டா சொல்லிட்டீங்க!உங்களுக்கு "டாக்குடர்" பட்டம் கொடுக்கணும்!

Yoga.s.FR said...

பெசொவி said...

// Yoga.s.FR said...//

இது யாருன்னு தெரியலையே, புது பீசா இருக்கு? ஒரு வேளை லூசுங்க ப்ளாக் மட்டும் படிக்கற புத்திசாலியா இருக்குமோ?///காலை வணக்கம்!கரெக்டா சொல்லிட்டீங்க!

பெசொவி said...

//Madhavan Srinivasagopalan said... 5
ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..
//

கீ போர்டு கீ போர்டுன்னு சொல்றீங்களே, அப்போ "லாக்" போர்ட்ன்னு ஒன்னு இருக்குதா?
சம்பந்தப் பட்டவர்கிட்ட சம்பந்தமில்லாம பேசுவோர் சங்கம்

ஸ்ரீராம். said...

ஒன்று நிச்சயம்...உங்கள் பெண் பிற்காலத்தில் உங்களை மழையில் வெளியில் அனுப்பினாலும் டார்ச்சோடுதான் அனுப்புவாள்!

Yoga.s.FR said...

பெசொவி said... 13

// Yoga.s.FR said...//

இது யாருன்னு தெரியலையே, புது பீசா இருக்கு?///என்னங்க நீங்க?நான் பழைய பீசு தான்!ஐம்பது புளுஸ்!