உலகில் அரியது என்று, என் சிற்றறிவுக்குப் பட்டவரை,
1. பணம் சம்பாதித்தல்,
2. நண்பனை அடைதல்,
3. புகழ் சம்பாதித்தல்
4. மக்களைப் பெற்று வளர்த்தல்
5. பிறருக்கு நல்லது செய்தல்
6. நாமாக யோசித்து ஒரு பதிவு போடுதல்
7. நம் பதிவுக்கு பின்னூட்டம் பெறுதல்
இப்பொழுது மேல் சொன்னவற்றை விட, மிகவும் அரிதான விஷயங்களைப் பார்ப்போம். (மேற்சொன்ன வரிசையில் படிக்க வேண்டும்)
1. சம்பாதித்த பணத்தை நல்ல முறையில் செலவழித்தல்
2. சம்பாதித்த நண்பனை கடைசி வரை நண்பனாகவே இருக்க வைத்தல்
3. பெற்ற புகழை இறுதிவரை நிலை நிறுத்தல்
4. வளர்த்த குழந்தைகள் பின்னாளில் எனக்காக என்ன செய்தாய் என்று கேட்காமல் இருத்தல்
5. நாம் நல்லது என்று நினைத்து செய்ததை அவர் தொந்தரவு என்று நினைக்காமல் இருத்தல்
6. நாம் போட்ட பதிவுக்கு "இங்கே நானும் போட்டிருக்கேனே!" என்று ஒரு பின்னூட்டம் வராமல் இருத்தல்
7. அந்த பின்னூட்டம் நாம் எதிர்பார்த்த பதிவரிடமிருந்து வருதல்
(ஏன்னா பிரதாப்ன்னா, பதிவு சும்மா மொக்கையா இருக்குதான்னா....)
9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
நன்றாகவே இருக்கிறது:)!
நான் தான் First
//அந்த பின்னூட்டம் நாம் எதிர்பார்த்த பதிவரிடமிருந்து வருதல்//
நான் அந்த லிஸ்ட்ல இருக்கேனா?
தல அழுகாச்சி அழுகாச்சியா வருது தல... உங்ககிட்டு இருந்து இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்.
//சங்கர் said...
நான் தான் First
//அந்த பின்னூட்டம் நாம் எதிர்பார்த்த பதிவரிடமிருந்து வருதல்//
நான் அந்த லிஸ்ட்ல இருக்கேனா
//
First, you are not the first.
Second,
உங்களை இப்பத்தான் பார்க்கிறேன். அதுனால, உங்க பெயர் "எதிர்பாராத பதிவரிடமிருந்து" லிஸ்ட்ல இருக்குது.
//அரியது கேட்கின்//
7ம் அருமை,எனக்கு பிடித்தது,
//சம்பாதித்த பொருளை நல்ல முறையில் செலவழித்தல்//
//கோமதி அரசு said...
//அரியது கேட்கின்//
7ம் அருமை,எனக்கு பிடித்தது,
//சம்பாதித்த பொருளை நல்ல முறையில் செலவழித்தல்//
//
வந்து தங்கள் கருத்தைப் பதிவு செய்ததற்கு நன்றி மேடம்.
நன்றி. மீண்டும் வருக!
நல்ல விஷயங்கள மட்டுமே சொல்லுவேன் என கங்கணம் கட்டிண்டு கிளம்பிட்டருடா
ஒருத்தரு!
உத்தமன்னு பேர் வச்சிட்டு நல்ல விஷயங்களை எழுதலைன்னா எப்படி, maddy
வந்து ரசித்து கருத்து கூறியதற்கு நன்றி.
ரைட் தல...
கலக்குங்க.....
அனைத்து பாயிண்டுகளும் அருமை.......
Post a Comment