அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, April 4, 2010

சண்டேனா ஒண்ணு - 04.04.2010

-----------------------------------------------------------------------------

என் மதிப்புக்குரிய இட்லிவடை சண்டேனா ரெண்டு தொடரை போன வாரத்தோட (தற்காலிகமாதான்) நிறுத்தி வச்சதால, நான் இந்த சண்டேனா ஒண்ணு பகுதியைத் தொடங்குகிறேன். இதில என் சிந்தனையை அதிகமா தூண்டின அந்தந்த வாரத்து செய்தியைப் பத்தி எழுதலாம்னு இருக்கேன்.

சென்ற வாரத்துல அதிகமா பேசப்பட்டு வந்த விஷயம் பென்னாகரம் இடைத்தேர்தல் தான்.  இந்த இடைத்தேர்தலிலும்  பணம் அதிகமா கொடுக்கப்பட்டதாக பெரும்பாலான ஊடகங்களில் சொல்லப்பட்டு வந்தது. இதுபோல் பணம் மட்டுமே வாக்குகளைச் சேகரிக்க உதவும் என்றால் ஜனநாயகம் என்பது பணநாயகம் என்று கேலிக்கு ஆளாகி விடாதா என்று நடுநிலையாளர்கள் வருந்துகிறார்கள்.

பொதுவாவே, தேர்தல் சமயத்தில் வாக்காளர்களைக் கவரும் பொருட்டு பல வாக்குறுதிகளை எல்லா கட்சிகளும் வாரி வழங்குவது என்பது கடந்த கால சரித்திரம்.  என் நினைவு தெரிந்து எண்பதுகளில் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு காரில் கொண்டு விடுவது என்பதே தடை செய்யப் பட்ட ஒன்று.  (இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்) ஆனால், இப்பொழுதோ, வாக்குறுதிகளை விட பணத்தைத்தான் அதிகம் பேர் விரும்புகிறார்கள்.

எனக்கு என்னவோ இதில் அரசியல் கட்சிகளைக் குறை கூறுவதில் உடன்பாடு இல்லை. காசு கொடுக்கிறார்களா, வேண்டாம் என்று சொல்லுங்கள்.  மிரட்டுகிறார்களா, பரவாயில்லை, வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் வாக்குகளை உங்கள் விருப்பம்போல் அளியுங்கள்.  ஐயோ, காசு வாங்கி விட்டோமே, எப்படி மாற்றி வாக்களிப்பது? என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்.  காசு கொடுப்பவர்கள் நிச்சயம் யோக்கிய சிகாமணிகள் இல்லை. அது மட்டுமல்லாமல், காசு வாங்காது போனால், அவர்கள் அராஜகச் செயலைச் சந்திக்கும் துணிவோ, மன வலிமையோ நமக்கு இல்லை என்பதால் தான் அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்க வேண்டியிருக்கிறது.  அது போக, காசு பணம் செலவழித்தாலும் நல்ல பெயர் வாங்கினால்தான் வோட்டு கிடைக்கும் என்பது புரிந்தால் நாளாவட்டத்தில் இந்த வோட்டுக்கு காசு என்ற கான்செப்ட் தன்னால் காணாமல் போய்விடும்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.....காசுக்கு வோட்டு என்பது நல்லாட்சிக்கு வேட்டு.

டிஸ்கி : காசு வாங்கிட்டு ஓட்டு போடுங்கன்னு நான் சொல்லலை, காசு வாங்கினாலும், வாங்காவிட்டாலும் வாக்குரிமையை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்றுதான் சொல்லுகிறேன்.  

  

9 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

ஸ்ரீராம். said...

நிறையப் பேர் வோட்டுப் போடாமக் கூட விட்டுடறாங்களாம் .வோட்டுப் போடாம இருந்தா ஆறு மாசம் ஜெயில் தண்டனை என்று சட்டம் கொண்டு வரலாமான்னு யோசிச்சாங்களாம். வாக்காளர் சொன்னாராம்வோட்டுப் போட்டா ஐந்தாண்டு தண்டனை, போடாம இருந்தா ஆறு மாசம்தானே, பரவாயில்லை, என்றாராம்

பெசொவி said...

nice comment, and thanks for the attendance, Sriram!

Prathap Kumar S. said...

அண்ணாச்சி நீங்க எவ்ளோ வாக்குனீங்க...ஹஹ...
வாங்கறவன் இருக்கறவரைக்கம் கொடுக்கறவன் கொடுத்துட்டுதான் இருப்பான்... ஒண்ணும் பண்ணமுடியாது...

R.Gopi said...

//பணம் மட்டுமே வாக்குகளைச் சேகரிக்க உதவும் என்றால் ஜனநாயகம் என்பது பணநாயகம் என்று கேலிக்கு ஆளாகி விடாதா என்று நடுநிலையாளர்கள் //

இவங்க யாரு “தல”??

//உங்கள் வாக்குகளை உங்கள் விருப்பம்போல் அளியுங்கள். ஐயோ, காசு வாங்கி விட்டோமே, எப்படி மாற்றி வாக்களிப்பது?//

காசு கொடுத்த அயோக்கிய அரசியல்வாதிகள் தங்கள் பகுத்தறிவு கொள்கை(??!!)களை காற்றில் பறக்க விட்டு, கடவுள் புகைப்படங்கள் மேல் சத்தியம் வாங்குவதாக கேள்விப்பட்டேன்...

இப்போல்லாம் காசு கொடுத்து தான் ஓட்டு என்கிற நிலைக்கு மக்களை கொண்டு வந்து விட்டார்கள்...

பெசொவி said...

// R.Gopi said...
//பணம் மட்டுமே வாக்குகளைச் சேகரிக்க உதவும் என்றால் ஜனநாயகம் என்பது பணநாயகம் என்று கேலிக்கு ஆளாகி விடாதா என்று நடுநிலையாளர்கள் //

இவங்க யாரு “தல”??
//

எனக்கும் சரியா தெரியலீங்க....ஒரு வேளை காசு கிடைக்காதவங்களா இருப்பாங்களோ?

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு :))

Anonymous said...

இது மட்டும் தான் எனக்குப் புரியல..

காசு கொடுக்கிறவங்கள எதிர்க்க விருப்பம் இல்லைனாலும், தைரியம் இல்லைனாலும், அது நம்ப வேலை இல்லைன்னு நினைச்சாலும் ...இது போல என்ன காரணமா இருந்தாலும், காச வாங்கிக் கிட்டு, நமக்குப் பிடிச்சவங்களுக்கு ஓட்டு போடலாமே..! நீங்க சொல்ற மாதிரி, இதுல எந்த தப்பும் இருக்குற மாதிரி எனக்கும் தெரியல..

மக்கள் இந்த மாதிரி செய்யாததுக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும் என்று யாராவது சொல்லுங்களேன்..

Madhavan Srinivasagopalan said...

//ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.....காசுக்கு வோட்டு என்பது நல்லாட்சிக்கு வேட்டு.//

ஹி.. ஹி.. நல்ல தகவல்.. ஆனா எல்லோருக்கும் பொய் சேருமா?

மங்குனி அமைச்சர் said...

திருத்துறது கொஞ்சம் கஷ்டம் தான் தல