அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Friday, August 6, 2010

ஆணென்ன ..........பெண்ணென்ன?

மாதவனின் இந்தப் பதிவில் உள்ள முதல் இரண்டு விளம்பரங்களே இந்தப் பதிவுக்குக் காரணம்.

எனக்கு இரண்டாவதாகவும் ஒரு பெண் குழந்தை பிறந்த நேரம் அது. எனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு SMS அனுப்பினேன் அதில் இருந்த வாசகம் கீழே:-
Blessed with yet another Mahalakshmi. Normal delivery, mother & child safe.

இதைப் படித்துவிட்டு எல்லோரும் என்னை பாராட்டினார்கள். இரண்டும் பெண் குழந்தையாயிற்றே என்று வருத்தப் படாமல் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்ட என் விவேகத்தை பெரிதும் கொண்டாடினார்கள். என் மனைவிக்கு முதலில் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் குறுகிய காலத்திலேயே மனம் மாறி விட்டாள்.  ஆனால் இப்போது கூட யாராவது என்னிடம் எத்தனை குழந்தைகள் என்று கேட்கும்போது இரண்டு பெண்கள் என்று சொல்லிவிட்டால் போதும், உடனே "அடப் பாவமே!என்னப்பா இப்படி ஆகிவிட்டதே!" என்று "உச்" கொட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. பெண்கள் நன்கு படிக்கிறார்கள், குடும்பப் பொறுப்பு உணர்ந்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இன்னும் பழைய காலத்திலேயே இருக்கும் இவர்களை எப்படித் தான் திருத்துவது? இன்னும் சொல்லப் போனால், இப்போது திருமணத்துக்குப் பெண் கிடைப்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. ஒரு காலத்தில் பெண் சிசுக் கொலைகள் நடந்ததாலேதான் இப்போது இந்தச் சூழல் இருக்கிறது.
மக்களே, இனியாவது நடைமுறையைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படியே இல்லாவிட்டாலும், பெண் குழந்தைகளை (மட்டுமே) பெற்றவர்களை புண் படுத்துவது போல பேசாதீர்கள்.

டிஸ்கி : SMS அனுப்பினேன் என்று சொன்னேன் அல்லவா? அப்போது என் நண்பன் ஒருவன் என்னை இப்படி கிண்டலடித்தான், "உன்னோட விவேகம் புல்லரிக்குது, ஆனா ஒண்ணு, அஷ்டலக்ஷ்மிகளுக்கு ஆசைப் படாம இருந்தா சரி"

 

17 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Madhavan Srinivasagopalan said...

உண்மைதானுங்கோ.. பெண்கள் இப்பல்லாம் நல்லா படிச்சு குரும்பத்துக்கு உதவியா இருக்குறாங்க..
பசங்கதான்.. கேட்டுப் போறத்துக்கு ரொம்ப சான்ஸா இருக்குது..

sathishsangkavi.blogspot.com said...

பெண்கள் தான் நம் வீட்டின் நம் நாட்டின் கண்கள்....

Prathap Kumar S. said...

சரிதான் சார்.இன்னும் ஆண்குழந்தை மோகம் இருக்கத்தான் செய்கிறது. மெதுவாக இந்த நிலை மாறும். உடனே மாறாது.

உங்கள் நண்பர் அனுப்பிய எஸ்எம்எஸ் ரசிக்கும்படி இருந்தது :))

Anonymous said...

click and read


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

..........

vasu balaji said...

நண்பரின் டிஸ்கி சூப்பர்

அருண் பிரசாத் said...

எனக்கு பெண் குழந்தை பிறந்த போதும் இப்படித்தான் என் மாமியார் வருத்தப்பட்டார்கள். ஆனால் அதற்கு அவர்கள் சொன்ன காரணம் - “பெண் பிள்ளைகளுக்கு பிணிகள் (வலிகள்) அதிகம்”

உண்மைதானே!

எண்ணங்கள் 13189034291840215795 said...

பெண் குழந்தை இல்லையேன்னு நான் ஏங்குறேன்..

CS. Mohan Kumar said...

ம்ம். எல்லோரும் உன்னை மாதிரி இருப்பாங்களா?

வெங்கட் said...

நல்ல பதிவு..,

குழந்தை பெறுவதே பெண்களுக்கு
இரண்டாவது பிறப்பு போன்றது..

கர்ப்ப காலத்தில் அவர்கள் எவ்வளவு
கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்..
இதையெல்லாம் உணரும் ஒருவர்
பெண் குழந்தை பிறந்ததற்காக
நிச்சயம் வருத்தப்பட மாட்டார்...

காலம் மாறும்...

ஸ்ரீராம். said...

பெண் குழந்தைகளைப் படிக்கவைக்கும் செலவு, கல்யாணச் செலவு, பிரசவம் இத்யாதி இத்யாதிகளை யோசித்து அப்படிச் சொல்வார்கள் என்றாலும் இந்தக் காலத்திற்கு அதெல்லாம் பொருந்தாது.

Katz said...

;-)

பெசொவி said...

//
Congrats!

Your story titled 'ஆணென்ன ..........பெண்ணென்ன?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 7th August 2010 11:07:01 PM GMT



Here is the link to the story: http://ta.indli.com/story/316403

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team//

Thank you voters

செல்வா said...

//"அடப் பாவமே!என்னப்பா இப்படி ஆகிவிட்டதே!" என்று "உச்" கொட்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.//
உண்மைதான் அண்ணா ..!! இன்னும் இப்படி நிறைய பேர் இருக்காங்க.
என்னமோ இவங்க வளர்க்கரமாதிரி சொல்வது..! எப்பத்தான் திருந்தப்போறங் களோ ..??

Anonymous said...

ananymous pearil mollamaarithanam athu eppadi

Anonymous said...

உங்களுக்கு ஒரு பய்யன் இருந்து வீட்டுக்கு பத்து ௦ மணி வரைக்கும் வரலேனா கவல படமா இருப்பீங்க...(அல்லது பெருசா கவலை படமா இருப்பீங்க) ...ஒரு பொண்ணு வீட்டுக்கு( அட்லீஸ்ட் வேலைக்கு போகற வரைக்குமாவது)...ரொம்ப நேரம் ஆஹியும் வர லேட் ஆச்சுன்னா? கவலை படாம எந்த அப்பவலயாவது இருக்க முடியுமா? --- இதுக்குதான் எல்லாரும் பெண் பிறந்தா அனுதாப படறாங்க...ஒரு பையனை வளக்கறதுக்கு ஈசி ... ஒரு பெண்ணை அதுவும் நல்ல குணத்தோட வளர்ப்பது ரொம்ப கஷ்டம்..

வால்பையன் said...

பையன் பத்து மணி வரைக்கும் வரலைன்ன ஏன் நாம கவலைப்படுறதில்ல, அவன் தப்பு பண்ணினாலும் சமூகம் என்னும் பன்னி கூட்டம் ஒன்னும் சொல்லாது, ஆனா ஒரு பொண்ணு லேட்டா வந்தா அந்த பன்னி கூட்டம் எதாவது பேசும்! எனக்கு அந்த பன்னி கூட்டம் தேவையில்லை, என் பொண்ணூ தான் முக்கியம்!

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் !

//"உன்னோட விவேகம் புல்லரிக்குது, ஆனா ஒண்ணு, அஷ்டலக்ஷ்மிகளுக்கு ஆசைப் படாம இருந்தா சரி" //

:)