மாவீரன் மங்கள் பாண்டே |
இன்று 15.8.2010 நாம் நம்முடைய அறுபத்துநான்காவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம் என்றால், இந்த மங்கள் பாண்டே, பிறகு வந்த வீரன் பகத் சிங், நேதாஜி, போன்ற மாவீரர்கள் சிந்திய ரத்தம் தான் காரணம்.
இவர்கள் தம்முடைய வீரத்தால் போராடினார்கள் என்றால், திலகர் மற்றும் மகாத்மா காந்தி போன்ற மாமனிதர்கள் தங்கள் அஹிம்சை என்ற ஆயுதத்தை ஏந்தி விவேகத்தால் போராடினார்கள். இதெல்லாம் எதற்கு சொல்ல வேண்டும்? அதுதான் ஒவ்வொரு கட்சித் தலைவரும் கதை கதையாய் சொல்வார்களே என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
இன்று நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு இந்த சுதந்திரக் கதையை சொல்லிக் கொடுத்திருக்கிறோம்? சுதந்திர தினம் என்றால் கொடியேற்றி மிட்டாய் கொடுப்பார்கள் என்பதைத் தவிர வேறேதாவது அவர்களுக்குத் தெரியுமா?
அன்று ஆங்கிலேயருக்கு அடிமையாய் இருந்தோம் என்றால்,இன்று கண் முன்னே நடக்கும் அக்கிரமங்களை எதிர்த்துக் கேட்கும் திராணி இல்லாமல்தானே இருக்கிறோம்? காரணம் என்ன? நாம் நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பொறுப்பாகச் செய்யாமல், அவர்கள் தரும் வெற்று விளம்பரங்களையும், இலவசங்களையும் பார்த்து மயங்கி வீணாக்குகிறோம். இந்த நிலை மாறும் வரை உண்மையான சுதந்திரம் நமக்கு இல்லை.
அந்த ஒரு நன்னாள் வரும் என்ற எதிர்பார்ப்பில் உங்கள் எல்லோருக்கும் என் இனிய
சுதந்திர தின வாழ்த்துகள்!
13 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
//அன்று ஆங்கிலேயருக்கு அடிமையாய் இருந்தோம் ///
இன்று இலவசங்களுக்கு அடிமை
// இன்று கண் முன்னே நடக்கும் அக்கிரமங்களை
எதிர்த்துக் கேட்கும் திராணி இல்லாமல்தானே இருக்கிறோம்?
காரணம் என்ன?
நாம் நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்
உரிமையை பொறுப்பாகச் செய்யாமல்,
அவர்கள் தரும் வெற்று விளம்பரங்களையும்,
இலவசங்களையும் பார்த்து மயங்கி வீணாக்குகிறோம். //
அருமையான கருத்து..
அப்படியே நிக்க வெச்சு
பளார்., பளார்னு அறைஞ்ச மாதிரி
இருக்கு..
ஹி., ஹி., ஹி...
என்னையில்ல.. இப்படி காசு
வாங்கிட்டு ஓட்டு போடறவங்களை..!!
ரைட்டு.. ரீபீட்டோய் (அடா.. பழக்க தோஷம்..)
உண்மைய நல்லா அடிச்சு சொல்லியிருக்கீங்க.... எனக்கு புரியுது.. பலருக்கும் புரிய வேண்டுகிறேன்.
உண்மையான கருத்து
//அந்த ஒரு நன்னாள் வரும் என்ற எதிர்பார்ப்பில்//
பொறுமையுடன் காத்திருப்போம்.. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.. உங்களுக்கு என சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
மொத்தத்தில் அடிமையாக இருப்பதில் சுகம் கண்டு விட்டோமா.
அந்த உற்சாகம் எங்கள் தந்தை,எங்கள் தலை முறை வரை கூட வந்துவிட்டது. இனிமேலும் அது துளிர்க்கும் என்பதற்கு உங்கள் பதிவே சாட்சி. வந்தே மாதரம்.
//இது போல் ஒரு ஞாயிறுதான் , 1957 மார்ச் 29 மங்கள் பாண்டே என்ற ஒரு சிப்பாய் தன்னுடைய சுதந்திர தாகத்தை வெளிப்படுத்திய நாள்.//
என்னது சுகந்திரம் கிடைத்து 10 வருஷம் அப்புறம் சிப்பாய் கலகமா?? ஹி ஹி ஹி வருஷம் மாத்துங்க தல... சுதந்திர தின வாழ்த்துகள்!
@ LK - உண்மை!
@ Venkat -
//என்னையில்ல.. இப்படி காசு
வாங்கிட்டு ஓட்டு போடறவங்களை..!!
//
உங்களைக் கலாய்க்க வாய்ப்பு இருந்தும், பதிவின் தன்மை கருதி நோ!
@ Madhavan
@ Arun Prasad
@ Anu
@ Agni
Thanks
@ வல்லிசிம்ஹன்
மொத்தத்தில் அடிமையாக இருப்பதில் சுகம் கண்டு விட்டோமா.
அந்த உற்சாகம் எங்கள் தந்தை,எங்கள் தலை முறை வரை கூட வந்துவிட்டது. இனிமேலும் அது துளிர்க்கும் என்பதற்கு உங்கள் பதிவே சாட்சி. வந்தே மாதரம்.
//
நம்பிக்கையே வாழ்க்கையின் அச்சாணி. கருத்துக்கு நன்றி!
@ TERROR PANDIAN
//என்னது சுகந்திரம் கிடைத்து 10 வருஷம் அப்புறம் சிப்பாய் கலகமா?? ஹி ஹி ஹி வருஷம் மாத்துங்க தல... சுதந்திர தின வாழ்த்துகள்!
//
ஓவர் சந்தோஷத்துல தப்பா எழுதிட்டேன், நன்றி பாஸ்! (யப்பா...........உண்மையிலேயே டெர்ரர் தான்!)
///இன்று நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு இந்த சுதந்திரக் கதையை சொல்லிக் கொடுத்திருக்கிறோம்? சுதந்திர தினம் என்றால் கொடியேற்றி மிட்டாய் கொடுப்பார்கள் என்பதைத் தவிர வேறேதாவது அவர்களுக்குத் தெரியுமா?///
இதை தான் எல்லா பெரியவர்களும் செய்ய வேண்டியது. குழ்ந்தகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுப்போம். ஊழல் ஒழிந்தே தீர வேண்டும். ஒவ்வொருவரும் தன் அளவில் ஊழலில் ஈடுபடக்கூடாது. தனி மனிதனின் ஒழுக்கத்தில் தான் நம் முன்னேற்றத்தின் சாவி இருக்கிறது. அருமையான பதிவு
(இண்டிலில் ஓட்டு போட்டுவிட்டேன். ஹி! ஹி!!}
// இன்று கண் முன்னே நடக்கும் அக்கிரமங்களை
எதிர்த்துக் கேட்கும் திராணி இல்லாமல்தானே இருக்கிறோம்?
காரணம் என்ன?
நாம் நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்
உரிமையை பொறுப்பாகச் செய்யாமல்,
அவர்கள் தரும் வெற்று விளம்பரங்களையும்,
இலவசங்களையும் பார்த்து மயங்கி வீணாக்குகிறோம். //
*********
அருமையான பதிவு.... சரியான நேரத்தில்....
இலவசங்களை மக்கள் கை நீட்டி வாங்கும் வரை, ஆட்சியாளர்கள் முன் நாம் கை கட்டி தான் இருக்க வேண்டும்...
இந்த அவல நிலை விரைவில் மாற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது...
அந்த அவல நிலை மாறி, நல்லாட்சி அமையும் நாள் வெகு தொலைவிலில்லை...
///நாம் நமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பொறுப்பாகச் செய்யாமல், அவர்கள் தரும் வெற்று விளம்பரங்களையும், இலவசங்களையும் பார்த்து மயங்கி வீணாக்குகிறோம்.///
உண்மைதாங்க ..
//சுதந்திர தினம் என்றால் கொடியேற்றி மிட்டாய் கொடுப்பார்கள் என்பதைத் தவிர வேறேதாவது அவர்களுக்குத் தெரியுமா?
///
அப்படி எல்லாம் இல்லீங்க .. பாடங்களிலும் வரலாறிலும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள் .. இருந்தாலும் வீட்டில் உள்ளோரும் அது பற்றி சொல்வது கடமை ..
LK said...
//அன்று ஆங்கிலேயருக்கு அடிமையாய் இருந்தோம் ///
இன்று இலவசங்களுக்கு அடிமை
///
சரியா சொன்னிங்க சார்
Post a Comment