அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Wednesday, August 25, 2010

வாரியார் சுவாமிகள் பிறந்த நாள் -

இன்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் பிறந்த நாள். "ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே" என்று பலருக்குப் புரியாத மொழியில் ஆரம்பித்து சங்கீத உபன்யாசம் செய்பவர்கள் மத்தியில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக அழகாகப் புராணக் கதைகளை நீதிகளோடு விளக்கியவர் இவர்.


சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்;


குழந்தைகளை மிகவும் நேசித்தவர்; தன்னுடைய புராண விரிவுடைகளின் இடையே கேள்விகளைக் கேட்டு பதில் சொல்லும் குழந்தைகளுக்கு பரிசுகள் தந்து அதன் மூலம் தமிழையும் சமயத்தையும் அனைவருக்கும் கொண்டு சென்றார்;


பொதுவாக இந்து மதத்தையே கேலி செய்யும் வழக்கத்தைக் கொண்ட திராவிடர் கழக தலைவரே இவர் மறைவின் போது "தமிழுக்குப் பாடுபட்ட ஒரு சமயத் துறவி" என்று புகழப் பட்டவர்.


வாரியாரின் நகைச்சுவை மிகப் பிரசித்தம்.

வாரியார் சுவாமிகள், ஒரு கோயிலில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு வழங்கிக் கொண்டு இருந்தார்.
சிவபெருமானின் பெருமைகளைச் சொன்னபடி இருந்த கிருபானந்தவாரியார் திடீரென்று ஒரு சிறுவனை எழுப்பி "தம்பி! தருமிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தது யாரு?" என்று கேட்டார்.

அப்போது திருவிளையாடல் படம் வெளிவந்திருந்த சமயம்.

அந்த பையன் சட்டென்று எழுந்து "சிவாஜி" என்றான்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

வாரியார் அனைவரையும் நோக்கி "ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்"

"நீங்க நேருவை நேருஜி -ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி -ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொன்னான், வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க 'ஜி' சேர்ப்பது வழக்கம் , அந்த அர்த்தத்தில் சிவாஜின்னு சொல்லி இருக்கான் " என்றாரே பார்க்கலாம்.

கூட்டம் வாரியாரின் நகைச்சுவைத் திறமை கண்டு வழக்கம் போல் அதிசயித்து நின்றது(நன்றி: இந்த வலைத்தளம்)

அதிசய  மரணம் 

நமது இந்து மத நம்பிக்கைகளின்படி புண்ணியம் செய்தவர்கள் இறந்தால் அவர்களை அழைத்து செல்ல புஷ்பக விமானம் வரும் என்று சொல்வார்கள். மிகுந்த புண்ணியம் செய்ததலோ என்னவோ, வாரியார் சுவாமிகள் விமான பயணத்தில் தான் காலமானார்கள்.ஆம், 1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார் 



அப்பேர்ப்பட்ட, இன்னும் பல விவரிக்க இயலாத புகழுக்கு சொந்தக் காரரான திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த தினமான இன்று அவரின் பொற்பாத கமலங்களுக்கு இந்தப் பதிவைக் காணிக்கையாக்குகிறேன்.


வாழ்க, வாரியாரின் தமிழிசைப் பணி! வளர்க அவர்தம் சீரிய புகழ்!


டிஸ்கி : விக்கிபீடியா தளத்துக்கு என் நன்றி!

11 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

அருண் பிரசாத் said...

எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. நான் 5வது படிக்கும் போது, என் பாட்டி வீட்டிற்கு வந்து பூஜை செய்து எனக்கு முருகன் படம் தந்தார். அவர் அருகில் போகும் ஒருவித தெய்வீகமணம் வரும்.

தெய்வ பிறவி அவர்....

என்னது நானு யாரா? said...

வாரியார் சுவாமிகள் Was Great! அவரோட நினைவாற்றல் என்ன! அந்த தள்ளாத வயதிலும் எல்லா செய்யுள்களையும், சொற்கள் மறக்காமல் சொல்லும் விதமென்ன! அவரை ஞாபகம் படுத்தியதற்கு நன்றி!

சரி! நம்ப கடைக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சே! வாங்க பங்காளி! புது சரக்கெல்லாம் வந்திருக்கு. விக்குமா விக்காதான்னு பாத்து சொல்லுங்க பங்காளி!

Chitra said...

குழந்தைகளை மிகவும் நேசித்தவர்; தன்னுடைய புராண விரிவுடைகளின் இடையே கேள்விகளைக் கேட்டு பதில் சொல்லும் குழந்தைகளுக்கு பரிசுகள் தந்து அதன் மூலம் தமிழையும் சமயத்தையும் அனைவருக்கும் கொண்டு சென்றார்;


......குழந்தைகளை ஆர்வத்துடன் பங்கெடுக்க வைப்பதின் அவசியத்தை உணர்ந்தவர்.

வெங்கட் said...

நான் கூட சின்ன வயசா
இருக்கும் போது அவர்
சொற்பொழிவை கேட்டு
இருக்கேன்..

ஆனா பரிசு வாங்கினது இல்ல..

vasu balaji said...

அற்புதம் அவர்:) நன்றி நினைவு கூர்ந்தமைக்கு.

cheena (சீனா) said...

அன்பின் பெ.சொ.வி

வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்ந்தவன் நான். தூங்குபவர்களை எழுப்பும் திறமை - கணீரென்ர குரல் - கேள்விகள் கேட்டு பரிசுகள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் செயல் - நினவாற்றல் - ம்ம்ம்ம்

அவரது பிறந்த நாள் இடுகைக்கு பாராட்டுகள் -நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

ஸ்ரீராம். said...

நமது இந்து மத நம்பிக்கைகளின்படி புண்ணியம் செய்தவர்கள் இறந்தால் அவர்களை அழைத்து செல்ல புஷ்பக விமானம் வரும் என்று சொல்வார்கள். மிகுந்த புண்ணியம் செய்ததலோ என்னவோ, வாரியார் சுவாமிகள் விமான பயணத்தில் தான் காலமானார்கள்//

அற்புதம்.

எங்கள் இல்லத்துக்கு வருகை தந்த அவரை நேரில் சந்தித்த சந்தோஷமும், எங்களுக்கே எங்களுக்காய் கேள்விகள் கேட்டு சிறு புத்தகங்கள் அன்பளிப்பும், ஆசிகளும் பெற்றதும் நினைவுக்கு வருகின்றன.

Madhavan Srinivasagopalan said...

"Vaariyaar the GREAT"

CS. Mohan Kumar said...

I was fortunate to see him & hear his lecture once at my native place Nidamangalam.

செல்வா said...

நானும் அவரது உரைகளை வானொலியில் கேட்டிருக்கின்றேன்.
//"தமிழுக்குப் பாடுபட்ட ஒரு சமயத் துறவி" என்று புகழப் பட்டவர்.//
நிச்சயம் இது உண்மை தான்..

R.Gopi said...

திரு முருக கிருபானந்தா வாரியார் அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்....

அனைவரும் விரும்பும் வகையில் உபன்யாசம் நடத்துவதில் வல்லவர்...

ஏராளமான மிமிக்ரி குரல் கலைஞர்களுக்கு இவரின் வித்தியாசமான குரல் ஒரு வரப்பிரசாதம்... இவரை இமிடேட் செய்யாத மிமிக்ரி கலைஞர்களே இல்லை எனலாம்...