கடமையைச் செய், பலனை எதிர் பாராதே!
எல்லாம் என்னால் கொடுக்கப்பட்டது, என்னால் எடுக்கப்பட்டது
என்றெல்லாம் மக்களுக்கு உபதேசித்த கண்ணன் பிறந்த தினம் கோகுலாஷ்டமி என்றும் ஸ்ரீ ஜெயந்தி என்றும் கொண்டாடப் படுகிறது.
ஆவணி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் அஷ்டமி திதி அன்று கோகுலாஷ்டமி என்று கொண்டாடப் படுகிறது. வட இந்தியாவில் ஜென்மாஷ்டமி என்று இதைக் கூறுவார்கள்.
அதேபோல், ஆவணி மாதத்தில் வரும் ரோஹிணி நட்சத்திரம் அன்று ஸ்ரீ ஜெயந்தி என்று கொண்டாடப் படுகிறது. அதன்படி நாங்கள் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறோம்.
மன்னார்குடி அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் இன்று இரவு பத்து மணியளவில், சந்தான கிருஷ்ணன்விக்ரஹத்தை ஒரு தொட்டிலில் வைத்து வழிபாடு செய்வார்கள். அந்த அழகுக் காட்சியை யு-ட்யூபில் இங்கே காணுங்கள்.
உலக மக்கள் அனைவரும் நலம்மாகவும் ஒற்றுமையுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுமென்று இந்த இனிய நன்னாளில் வேண்டிக் கொள்கிறேன்.
அனைவருக்கும் மீண்டும் ஸ்ரீ(கிருஷ்ண)ஜெயந்தி வாழ்த்துகள்!
6 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
Wishes!!!!
oh! great event..
வீட்டுக்கு கிருஷ்ணன் வந்தாச்சா சார்?
அழகிய சந்தான கோபால கிருஷ்ணனை தொட்டிலில் காணக் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி நண்பரே.
வெங்கட்.
//அனைவருக்கும் மீண்டும் ஸ்ரீ(கிருஷ்ண)ஜெயந்தி வாழ்த்துகள்!
///
நன்றிங்க ..
//நீ எதையும் அடையவும் இல்லை, இழக்கவும் இல்லை,
எல்லாம் என்னால் கொடுக்கப்பட்டது, என்னால் எடுக்கப்பட்டது // இப்படி பகவத் கீதையில எந்த ஸ்லோகத்துல சொல்லப் பட்டதுன்னு சொன்னீங்கன்னா உபயோகமா இருக்கும். நான் தேடித் பாத்துட்டேன் கண்டுபிடிக்க முடியல.
Post a Comment