முன் டிஸ்கி : ரொம்ப நாளாச்சு, கவிதை(?!) எழுதி.
நீ அருகிலிருந்தால்
நெருப்பும் குளிர்கிறது,
வெயிலும் இதமாய் இருக்கிறது.
நீ அருகிலிருந்தால்
காயங்கள் கூட வலிக்கவில்லை
நீ விலகிப் போனால்
மழையும் சுடுகிறது,
இதயத் துடிப்புகூட
சுமையாய்ப் போனது.
&&&&&&&&&&&&&&&&&&
உன்னைப் பார்த்த கணமே
என்னுள் நுழைந்து
இதயத்தில் இடம் பிடித்து
என்னை இம்சிக்கிறாயே,
என்று முடியும் இந்த
எல்லை தாண்டிய
பயங்கரவாதம்?
டிஸ்கி : நல்லா பாத்துக்கோங்க, நெருப்பு, காயம், பயங்கரவாதம் - இதெல்லாம் சொல்லியிருக்கேனா? போன பதிவு டிஸ்கில சொன்னா மாதிரி சீரியஸா ஒரு பதிவு போட்டுட்டேன், நாங்கல்லாம் சொன்னதை செய்வோம், செய்ததை சொல்வோம்.
25 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பபபப.... இதுக்கு போன பதிவு எவ்வளோ தேவலாம்... நான் போய் போன பதிவு திரும்பி படிக்கிறேன்.
ஏதோ கவிதை எழுதி இருக்கறதா சொன்னீங்க. அது எங்க?
@அருண்
இவர் ரொம்ப நல்லவர் மச்சி.. நேத்து ரமேஷ் போட்டோ 3 இடத்துலா பாத்தாரு இல்ல... அதான் அதிர்ச்சில இப்படி ஆகிட்டாரு...
@ டெரர்
ஓ அதுதான் விஷயமா! சரி ஆனா இதுல யாரையோ பத்தி எழுதி இருக்காரே யார் அது? ரமெஷா?
இல்லை மச்சி அது அவங்க வீட்டு பக்கத்துல வடை சுட்டு விற்க்கர பாட்டி பத்தி...
//நீ அருகிலிருந்தால்
காயங்கள் கூட வலிக்கவில்லை//
அவங்க உங்க வீட்டு டாக்டர்ரா?
//வெயிலும் இதமாய் இருக்கிறது.//
நல்லா உச்சி வெயில்ல சுத்தி இருப்பாரு போல.... எலுமிச்சபழம் தேவைபடுமோ...
அருண்
//அவங்க உங்க வீட்டு டாக்டர்ரா?//
அடிக்கிறதே அவங்கதான்... அதான் வலிக்கலியே வலிக்கலியே!! அப்படினு நடிக்கிறார்....
//என்று முடியும் இந்த
எல்லை தாண்டிய
பயங்கரவாதம்?//
நீங்க கவிதை எழுதரத நிறுத்தினதும்...
// இல்லை மச்சி அது அவங்க வீட்டு பக்கத்துல வடை சுட்டு விற்க்கர பாட்டி பத்தி//
மக்கா என்ன வடை சுட்டு விக்கிருங்க கேளுங்க என்னோட டவுட் கேக்கணும்
//இதயத்தில் இடம் பிடித்து
என்னை இம்சிக்கிறாயே//
இப்படி கவிதை எழுதி எங்கள இம்சிக்காதீங்க
ரைட்டு:)
அய்யோ காப்பாத்துங்க... என்ன இருந்தாலும் என் ரேன்சுக்கு கவுஜ எழுத முடியாது...:))
__________
| " " |
| | |
| __ |
| / \ |
\________/
@ அருண்.,
// ஏதோ கவிதை எழுதி இருக்கறதா சொன்னீங்க.
அது எங்க? //
// முன் டிஸ்கி : ரொம்ப நாளாச்சு, கவிதை(?!) எழுதி. //
இதோ... இங்கே இருக்கே..!!
//என்று முடியும் இந்த
எல்லை தாண்டிய
பயங்கரவாதம்?//
அதே கேள்வியை தான் உங்க கிட்ட நாங்க கேக்குறோம். பதில் சொல்லுங்க பங்காளி!
@ Venkat
// முன் டிஸ்கி : ரொம்ப நாளாச்சு, கவிதை(?!) எழுதி. //
இதோ... இங்கே இருக்கே..!!//
அது மட்டுமில்லை வெங்கட், வகைகள் பாருங்கள் அதுல கூட "கவிதை" இருக்கு!
@ Madhavan
கவிதை(?!) புரிஞ்சா புரியுதுன்னு சொல்லுங்க, இல்லைனா புரியலைன்னு சொல்லுங்க, இப்படி ஒரு கமெண்ட்(???????!!!!!!!!!!) போடலாமா? அவ்.................
@ இம்சைஅரசன் பாபு
//இப்படி கவிதை எழுதி எங்கள இம்சிக்காதீங்க //
ஒத்துகிட்டாரு, ஒத்துகிட்டாரு, என்னோடது கவிதைன்னு ஒத்துகிட்டாரு, நீங்க நிச்சயமா இம்சை அரசன் இல்ல, இனிமை அரசன்!
@ Arun & Teror
இது வெங்கட்டோட ப்ளாக் இல்லை, இருந்தும் இங்கே வந்து கும்மி அடிக்கிறீங்களே, இது நியாயமா?
ஆனாலும் இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதமும் இனிமையா தான் இருக்கு!
//@அருண்
இவர் ரொம்ப நல்லவர் மச்சி.. நேத்து ரமேஷ் போட்டோ 3 இடத்துலா பாத்தாரு இல்ல... அதான் அதிர்ச்சில இப்படி ஆகிட்டாரு... //
அடப்பாவிகளா எனக்கு தெரியாமலையே என்னை கலாய்க்கிறீங்களே. ஒரு வார்த்தை சொல்ல கூடாதா?
/^^^^^^^^^\
|.."..."..|
|....|....|
|....0....|
|.../.\...|
\=========/
This is what I tried to say.. (since whitespaces are not rightly reproduced, I made this with extra '.' periods. Remove these periods with white space to realize my face after reading this kavithai.
ok! ok! ok!
:-)
என்னல்லாம் பண்றோம்...கவித எழுத மாட்டமா..என்ன?!
இது சீரியஸ் பதிவாம்ல ... அதுக்குதான் நான் போன பதிவுலையே சீரியஸ்லாம் வேண்டாம்னு சொன்னேன் ..!!
Post a Comment