மற்ற உயிரினங்களிடமிருந்து மனித இனத்தைப் பிரிப்பது ஆறாம் அறிவு மட்டுமல்ல, பேச்சுத் திறமையும்தான். அந்தப் பேச்சுத் திறன் மூலம் வெற்றி அடைந்தவர்களும் உண்டு, தோல்வி அடைந்தவர்களும் உண்டு. எப்படி பேசினால் வெற்றி அடையலாம், அதன் மூலம் மற்றவர்களைக் கவரலாம் என்பது குறித்துத் தான் இந்தப் பதிவு.
ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும், எவருமே தன்னை மிகப் பெரிய புத்திசாலியாகவும், அறிவாளியாகவும், சொல்லப் போனால் தான் அழகு குறித்தும்கூட பெருமையாகவும்தான் நினைத்துக் கொள்கிறார். ஆகவே, ஒருவருடைய உடல் அழகைக் குறித்தோ, அறிவைக் குறித்தோ கேலி செய்வதை எவரும் விரும்புவதில்லை. அப்படியானால் போலியாகப் புகழ்ந்துதான் ஆக வேண்டுமா? தேவையில்லை.
உதாரணமாக, ஒருவர் குண்டாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம்,
"சார், நீங்க பாக்க நல்லாத் தான் இருக்கீங்க, ஆனா, வெயிட் மட்டும் கொஞ்சம் குறைச்சா சினிமாவுலயே நடிக்கப் போகலாம், தெரியுமா?" என்று சொல்லிப் பாருங்கள். அதன் பிறகு அவர் பார்வையில் நீங்கள் பெரிய ஆளாகவே தெரிவீர்கள். இன்னும் சொல்லப் போனால், "உண்மைதான் சார், நான் கூட வெயிட் குறைக்கணும்னு தான் நினைக்கிறேன், கொஞ்சம் அதுக்கு டிப்ஸ் கொடுங்களேன்!" என்று உங்களிடமே வேண்டுவார்.
அதேபோல், ஒருவர் ஒல்லியாக இருந்தால், அவரிடம் "ஒல்லியா இருக்கறது பிரச்சினையே இல்ல, சார், ஆனா, கன்னம் மட்டும் கொஞ்சம் உப்பினாப்ல இருந்தா நீங்க இன்னும் நல்லா இருப்பீங்கன்னு நான் நினைக்கிறேன்!" என்று நாசூக்காக சொல்லலாம்.
அதே போல், ஒருவரிடம் ஏதாவது சந்தேகம் கேட்க விரும்பினால் ஏதோ ஏற்கெனவே தெரிந்ததுபோல் ஒருபோதும் கேட்காதீர்கள். அதே சமயத்தில் அவருக்கு அது குறித்து தெரியுமா என்ற சந்தேக தொனியில் கேட்கவும் கூடாது.
இன்னொரு விஷயம், ஜோக்காகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு எப்போதும் அடுத்தவரைக் கேலி செய்வது வேண்டவே வேண்டாம். திடீரென்று நம்மேல் கோபம் வர வாய்ப்புண்டு. அது நட்புக்கே வேட்டு வைத்து விடும்.
டிஸ்கி: இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை பின்னூட்டங்களைப் பொறுத்து முடிவு செய்வதாக இருக்கிறேன்.

18 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):
good ideas.. continue plz.
// "சார், நீங்க பாக்க நல்லாத் தான் இருக்கீங்க,
ஆனா, வெயிட் மட்டும் கொஞ்சம் குறைச்சா
சினிமாவுலயே நடிக்கப் போகலாம், தெரியுமா?" . //
சார்., நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க..
கொஞ்சம் முயற்சி பண்ணினா
சினிமாவுக்கே கதை எழுத போலாம்.. :)
//@ வெங்கட்
//
சார்., நீங்க ரொம்ப நல்லா எழுதறீங்க..
கொஞ்சம் முயற்சி பண்ணினா
சினிமாவுக்கே கதை எழுத போலாம்.. :)
//
இதை, இதைத் தான் எல்லோரும் சொல்றாங்க. ஆனா பாருங்க, எனக்கு ஏத்த மாதிரி ப்ரொடியூசர் யாரும் ஹாலிவுட்ல இல்லையே,என்ன செய்ய?
//இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை பின்னூட்டங்களைப் பொறுத்து முடிவு செய்வதாக இருக்கிறேன்.//
சார், நீங்க தொடரலாம் ஆனா போடுற மொக்கைய கொஞசம் குறைச்சா பெரிய காமெடி ரைட்டரா வரலாம்
நல்லாயிருக்கு. தொடருங்கள்.
எங்களையும் உங்க மாதிரி நாலு பேர், (நாலு பேர் எதுக்கு, நீங்க ஒருத்தரே போதும்) அறுத்தாத்தான் தூக்கம் வருதுங்க. நீங்க கண்டிப்பா பதிவ தொடரணுங்க.
இன்னொரு விஷயம், ஜோக்காகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு எப்போதும் அடுத்தவரைக் கேலி செய்வது வேண்டவே வேண்டாம். திடீரென்று நம்மேல் கோபம் வர வாய்ப்புண்டு. அது நட்புக்கே வேட்டு வைத்து விடும்"//
உண்மை. கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள்.
தொடருங்கள்...
நல்லா கொடுக்கறீங்க ஐயா...டீடைலு!
ம்ம்ம்...ரொம்ப நாசுக்கா பேசணும்னு சொல்லி கொடுத்திருக்கீங்க. நன்றி நண்பா!
மக்களே! ஓட்டுப் போடாம வெறும் கருத்து மட்டும் சொல்லிட்டுப் போறீன்களே அப்பு!
பாவம் இல்ல நம்ப தலைவரு! முன்னாடியே, அவரு பெயரை சொல்ல விரும்பல. அப்படி இருக்கும் போது நீங்க ஓட்டும் போடாம போயிட்டா, அவரு எப்படி பிரபலம் ஆவறது?
நான் எல்லா பூத்திலேயும் போய் ஓட்டு போட்டிட்டேன். அப்புறம் நீ மட்டும் யோக்கியமான்னு கேட்க கூடாது பாருங்க!
அதுக்குத் தான் இந்த டிஸ்கி. அது என்னா தல டிஸ்கி? அருமையா தமிழ்ல குறிப்புன்னு சொல்லலாமில்ல!
இன்னொரு விஷயம், ஜோக்காகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு எப்போதும் அடுத்தவரைக் கேலி செய்வது வேண்டவே வேண்டாம்.
...rightly said. :-)
சீரியஸான பதிவா?? உங்களிடமிருந்தா?
நம்ப முடியலியேப்பா.......
ஏன்? எதற்கு? இப்படி!!!
நாலு பேர் நல்லா இருக்கலாம்னா எது வேணும்னாலும் செய்யலாம்னு ஒருத்தர் சொல்லி இருக்கார்...
ஸோ, நீங்கள் தொடருங்கள்...
//டிஸ்கி: இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை பின்னூட்டங்களைப் பொறுத்து முடிவு செய்வதாக இருக்கிறேன்.//
தயவு செஞ்சி தொடருங்க. நல்ல கருத்துகள் மிகவும் அவசியம். ஆன படிக்க சொல்ல கூடாது சரியா?
(நல்லா இருக்கு தல தொடருங்க...)
//டிஸ்கி: இந்தப் பதிவைத் தொடர்வதா வேண்டாமா என்பதை பின்னூட்டங்களைப் பொறுத்து முடிவு செய்வதாக இருக்கிறேன்.
//
தொடருங்க தொடருங்க ..!! நல்லாத்தான் இருக்கு ..!!
தொடருங்கள் நண்பரே... காத்திருக்கிறோம்....
வெங்கட் நாகராஜ்
எழுதுங்க சார்...என்னை மாதிரி வளரும் பசங்களுக்கு இது ரொம்ப உதவும்...:)
எவ்ளோ பேர் கமெண்ட் போட்டாலும், நீங்க கோகுலத்தில் சூரியன் கமெண்டுக்கும் மட்டுமே பதில் கமெண்ட் போடுவதின் ரகசியம் என்ன?
i like this you write about this more
Post a Comment