அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, January 1, 2011

வாரச் சந்தை - 4

எல்லா உயிரும்
இன்பமாய் வாழ
பொல்லாத் துயரம்
பூண்டோடு ஒழிய
நல்லார் எவரும்
என்று
நானிலம் செழிக்கட்டும்
இன்று
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த வாரச் சந்தைக்குப் போவோமா?

ஒரு தத்துவம்
ஒரு விஷயத்தை மட்டும் பாத்துட்டு மத்ததும் அப்படியே தான் இருக்கும்னு நினைக்கவே கூடாது. உதாரணத்துக்கு வெங்காய போண்டாவுல வெங்காயம் இருக்குங்கறதுக்காக மைசூர் போண்டாவுல போய்  மைசூரைத் தேடக் கூடாது.

ஒரு (யதார்த்த)கவிதை 

உயிரே
உயிரின் உயிரே
நீயின்றி நானில்லை
என்றெல்லாம் சொன்னவன்
காணாமல் போனான்
"எப்போது கல்யாணம்?"
என்றபோது!
ஒரு பொன்மொழி

வெற்றியை தலைக்கும் தோல்வியை இதயத்துக்கும் எடுத்துச் செல்லவே கூடாது; முன்னது தலைக் கணத்தை உருவாக்கும், பின்னது தற்கொலைக்குத் தூண்டும்! 
ஒரு (மொக்கை) குவிஸ்


ஏழு போட்டு நான்கு பூஜ்யம் சேர்த்தால் ஏழாயிரம் ஆகும், எப்படி?
ஏழுக்கு முன்னால் ஒரு பூஜ்யமும் பின்னால் மூன்று பூஜ்யமும் போட்டால் போதும்.
07000   ஹிஹி!
ஒரு (பழைய) ஜோக்
நடிகையின் அம்மா : நீ நடிகர் வேணுகாந்த்தை லவ் பண்றியாமே, அப்படியா?
நடிகை : இல்லவே இல்லை, அவரை என் அண்ணனாத் தான் நினைக்கிறேன்!
நடிகையின் அம்மா : அப்படியே நினைச்சுக்கோ, ஏன்னா, நான் அவரோட அப்பாவை கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கேன்

ஒரு (பதில் சொல்லவே முடியாத) கேள்வி

நீங்க திருடறதை நிறுத்திட்டீங்களா:?
(ஆமாம்னு சொன்னா, ஏற்கெனவே திருடினத்தை ஒப்புக் கொண்டதுபோல் ஆகும். இல்லை என்று சொன்னால், இன்னமும் திருடிக் கொண்டிருப்பதுபோல் ஆகும்)

21 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேணுகாந்த்னா யாரு,பெரிய டாகுடரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்க திருடறதை நிறுத்திட்டீங்களா:?

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீங்க திருடறதை நிறுத்திட்டீங்களா:?
//

அடுத்த பதிவரோட பதிவுகளை எல்லாம் திருடர நாதாரி கும்பலைப் பாத்து கேக்க வேண்டிய கேள்வி இது, பன்னி!

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//நீங்க திருடறதை நிறுத்திட்டீங்களா:?/

ஆமாம். சின்ன வயசுல எங்க அப்பா பாக்கெட்ல காசு திருடி இருக்கேன். இப்போ நிறுத்திடேன். இது எப்படி பதிலே சொல்ல முடியாத கேள்வியாகும்?? :))

NaSo said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

அனு said...

//காணாமல் போனான் "எப்போது கல்யாணம்?" என்றபோது!//

உயிரைக் கொடுத்து காதிலித்து கொண்டிருப்பவரிடம் போய் அவருக்கு கல்யாணம் எப்போன்னு கேட்டா கோவம் வருமா வராதா.. அதான் டென்ஷன் ஆகியிருப்பாரு..

//ஏழு போட்டு நான்கு பூஜ்யம் சேர்த்தால் ஏழாயிரம் ஆகும்,//

பதிலை நீங்களே பதிவில் சொல்லிவிட்டதால் நான் ரிப்பீட் பண்ணல... (நாங்கல்லாம் யாரு?? வைக்கோல் போர்-லயே குண்டூசிய கண்டுபிடிக்குறவங்க ;-) )

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பெயர் சொல்ல விருப்பமில்லை said... 3 //பன்னிக்குட்டி ராம்சாமி said...
நீங்க திருடறதை நிறுத்திட்டீங்களா:?
//

அடுத்த பதிவரோட பதிவுகளை எல்லாம் திருடர நாதாரி கும்பலைப் பாத்து கேக்க வேண்டிய கேள்வி இது, பன்னி! //////

சரியாச் சொன்னீங்க பெசொவி, அவனுகளை என்னதான் பண்றதுன்னே தெரியல.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பெசொவி said...

// அனு said...

//ஏழு போட்டு நான்கு பூஜ்யம் சேர்த்தால் ஏழாயிரம் ஆகும்,//

பதிலை நீங்களே பதிவில் சொல்லிவிட்டதால் நான் ரிப்பீட் பண்ணல... (நாங்கல்லாம் யாரு?? வைக்கோல் போர்-லயே குண்டூசிய கண்டுபிடிக்குறவங்க ;-) )

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

//

I understand that you are always in "a control"
:)

வினோ said...

நல்ல கவிதை தல...

நீங்க திருடறதை நிறுத்திட்டீங்களா?

வெங்கட் said...

@ டெரர்.,

// நீங்க திருடறதை நிறுத்திட்டீங்களா:? //

// இது எப்படி பதிலே சொல்ல முடியாத கேள்வியாகும்?? :)) //

அதானே..???!!
இதுக்கு பதில் சொல்ல முடியாதா..?

நான் இன்னும் திருடறதை நிறுத்தலை..!!

ஆமாம்.. இப்பவும் எழுதறது மூலமா
பல வாசகர்கள் மனசை திருட முயற்சி
பண்ணிட்டு தான் இருக்கேன்..

:-)

Madhavan Srinivasagopalan said...

1) 7000.0 = ஏழாயிரம்
2) 07000 = ஏழாயிரம்.


அட.. மொதல்ல '7' போட்டுட்டு அப்புறம்தான் நாலு ஜீரோவையும் போட்டேன்.

THOPPITHOPPI said...

நீங்க திருடறதை நிறுத்திட்டீங்களா:?
(ஆமாம்னு சொன்னா, ஏற்கெனவே திருடினத்தை ஒப்புக் கொண்டதுபோல் ஆகும். இல்லை என்று சொன்னால், இன்னமும் திருடிக் கொண்டிருப்பதுபோல் ஆகும்)
/////////////////////

நச்

vasu balaji said...

புத்தாண்டு வாழ்த்துகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு (பதில் சொல்லவே முடியாத) கேள்வி///

நீங்க ஒரு வெத்து வேட்டுன்னு உங்க வீட்டுல தெரியுமா? தெரியாதா?

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஒரு (பதில் சொல்லவே முடியாத) கேள்வி///

நீங்க ஒரு வெத்து வேட்டுன்னு உங்க வீட்டுல தெரியுமா? தெரியாதா?
//

இது என்ன கேள்வி, ரமேஷ்? உங்க வீட்டில எப்படியோ அப்படிதான் எங்க வீட்டிலேயும்!

R.Gopi said...

தலீவா....

வாரச் சந்தை டபுள் ஓகே...

இந்த வேணு காந்த், வேணுகாந்த்னு சொல்றீயளே!!

அவரு பெரிய டாக்டரா?
கேப்டனா?

யாருங்க அவரு?

பெசொவி said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
வேணுகாந்த்னா யாரு,பெரிய டாகுடரா?
//

@ R Gopi

//இந்த வேணு காந்த், வேணுகாந்த்னு சொல்றீயளே!!

அவரு பெரிய டாக்டரா?
கேப்டனா?

யாருங்க அவரு? //

ஜோக்(னு) சொன்னா அனுபவிக்கனும், ஆராயப்டாது!

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு...