அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Saturday, January 22, 2011

தயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க!

தெரியாமத் தான் கேக்கறேன், விஜய் மேல் அவ்ளோ கோவம் உங்களுக்கு ஏன்?

பதிவுலகத்தில மட்டும் தானா, இல்லை வெளியில கூட அப்படியான்னு தெரியலை, விஜய் மேல எல்லாருமே காண்டாத் தான் இருக்காங்க.

அப்படி என்ன அவரு செஞ்சுட்டாரு? ஒழுங்கா நடிக்கத் தெரியலையாம், இருக்கட்டும், அதுனால என்ன? அவரு நிறைய பன்ச் டயலாக் பேசறாராம். அதுனால என்ன? ரொம்ப பில்ட்-அப் கொடுக்கராராம், அதுனாலதான் என்ன?

எல்லாரும் கிண்டல் பண்றாங்க, பரவாயில்ல, இன்னிக்கு வெங்கட் விஜயை ரொம்பவே கேவலப் படுத்திட்டாரு.  அதுனாலதான் எனக்கு கோவம் வந்துடுச்சு. இப்படி ஒரு லெட்டர் உங்களுக்கு எழுதியிருக்கேன்.

என்னை மாதிரி எத்தனை பேரு விஜய் படத்தை ஆர்வமா பாக்கறாங்க, தெரியுமா? எங்க க்ரூப்பே இங்கதான் இருக்கோம். நான் யாருன்றீங்களா? நான் "சுறா" படத்தை எட்டு தடவை பார்த்தவன். என்ன ஆச்சரியமா பாக்கறீங்க? எனக்குப் பக்கத்துக்கு "பெட்"ல இருக்கறவரு "வீராசாமி" படத்த ரெண்டே தடவைதான் பார்த்தவரு.

கொஞ்சம் இருங்க, டாக்டர் ரவுண்டு வர நேரமாம், அப்புறம் உங்ககிட்ட பேசறேன்!

அன்புடன்


விஜய் வெறியன்
பெட் எண்: 6
மருத்துவக் கல்லூரி
கீழ்ப்பாக்கம் 

டிஸ்கி: வாரச் சந்தை திங்கள் அன்று வெளிவரும்.

36 பின்னூட்டங்கள்(அல்ல பின்னூக்கங்கள்):

Speed Master said...

வடை

Speed Master said...

எனக்கு தெரியும்

நீங்க ஒரு மாதிரின்னு

எப்படி ஹாஸ்பிடல்ல வசதியெல்லாம் நல்ல இருக்கா

சொல்லுங்கவிஜய் அடுத்த பிறந்த நாளுக்கு உங்களை வந்து பார்க்க சொல்றேன்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ speed master

a true "speed" master!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vaazhka valamudan

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Speed Master said...
எனக்கு தெரியும்

நீங்க ஒரு மாதிரின்னு

எப்படி ஹாஸ்பிடல்ல வசதியெல்லாம் நல்ல இருக்கா//

நீங்களும் பக்கத்துக்கு "பெட்"ல தான் இருக்கீங்களா? போஸ்ட் போட்டவுடனே கமென்ட் போட்டுட்டீங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vaazhka valamudan
//

ithu vaazhthaa? thittaa?
#davuttu

எஸ்.கே said...

நடத்துங்க நடத்துங்க!

இன்னும் ரெண்டே வருஷம் தான்.பூமாதேவி சிரிக்க போரா நாம எல்லாம் உள்ள போக போறோம்!

இம்சைஅரசன் பாபு.. said...

//விஜய் வெறியன்
பெட் எண்: 6
மருத்துவக் கல்லூரி
கீழ்ப்பாக்கம்
//

ஆறாம் நம்பர் உங்களுக்கு ராசி இல்லாத நம்பர் ஆச்சே .....வேற பெட் போய் பாருங்க .....அங்க பக்கத்துல படுத்து இருப்பவன் காவலன் ஒரு தடவை பார்த்தவனாக இருப்பான்

தம்பி கூர்மதியன் said...

ஓ 6ம் நம்பரா.??? நான் 2ம் நம்பர்ல தான் இருக்கன்.. 6தடவ சுறா,7 தடவ வேட்டைகாரன்.. காவலன் 2 தடவ.. முத்திபோச்சுன்னு சொல்றாக...

Madhavan Srinivasagopalan said...

ஜெய், விஜயி பவ..

சி.பி.செந்தில்குமார் said...

HA HA HA KALAKKKAL

சி.பி.செந்தில்குமார் said...

JUST BY THIS ONE POST I BECAME YR FOLLOWER.. KEEP IT UP

HVL said...

//"தயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க!"//
சரிங்க!

நாஞ்சில் பிரதாப்™ said...

hahaha...சார் இதுக்கு மத்தவங்களே பரவால்ல....:)))

TERROR-PANDIYAN(VAS) said...

//தெரியாமத் தான் கேக்கறேன், விஜய் மேல் அவ்ளோ கோவம் உங்களுக்கு ஏன்?

பதிவுலகத்தில மட்டும் தானா, இல்லை வெளியில கூட அப்படியான்னு தெரியலை, விஜய் மேல எல்லாருமே காண்டாத் தான் இருக்காங்க.

அப்படி என்ன அவரு செஞ்சுட்டாரு? ஒழுங்கா நடிக்கத் தெரியலையாம், இருக்கட்டும், அதுனால என்ன? அவரு நிறைய பன்ச் டயலாக் பேசறாராம். அதுனால என்ன? ரொம்ப பில்ட்-அப் கொடுக்கராராம், அதுனாலதான் என்ன?
//

ரீப்பிட்டு.... எதுக்குபா அவரை கலாய்க்கறிங்க... :)

வீராங்கன் said...

இந்த முறை அவ்வளவெல்லம் யாரும் கிண்டல் செய்வதில்லை தல..,

Jayadev Das said...

என்னடா அது எலி அம்மணமா போகுதேன்னு பாத்தேன் !

FARHAN said...

ஒருத்தன இப்பிடியுமா கலாய்பாயங்க

Samudra said...

அது தான் அவர் அரசியலுக்குப் போயிட்டாரே,,,விடுங்க..

தங்கராசு நாகேந்திரன் said...

ஹா ஹா இதுதான்யா வஞ்சகப் புகழ்சிங்கிறது

அனு said...

விஜய்க்கு என்னங்க குறைச்சல்? அவரை எதுக்கு கிண்டல் பண்ணனும்?? நல்லாதானே நடிக்கிறாரு..

'காதல் கோட்டை'யில கூட ஆட்டோ ட்ரைவரா நடிச்சிருப்பாரே.. தலைவாசல் விஜய்.. அவரை பத்தி தானே சொன்னீங்க??

Anonymous said...

///நான் "சுறா" படத்தை எட்டு தடவை பார்த்தவன். என்ன ஆச்சரியமா பாக்கறீங்க? எனக்குப் பக்கத்துக்கு "பெட்"ல இருக்கறவரு "வீராசாமி" படத்த ரெண்டே தடவைதான் பார்த்தவரு///hahaha அப்ப சுறாவை விட வீராசாமி மோசம் என்கிறீங்களா?

Samy said...

Vijay arasiyalukku varanumya.Sathi.

Chitra said...

நான் "சுறா" படத்தை எட்டு தடவை பார்த்தவன்.


....பதிவில், வஞ்சபுகழ்ச்சி கொடி கட்டி பறக்குது. ஹா,ஹா,ஹா,ஹா....

மாணவன் said...

"தயவு செஞ்சு விஜயைக் கிண்டல் பண்ணாதீங்க!"


ம்ம்ம்...வெளங்கிருச்சு.......

Guru Dasan127 said...

unalam oonenum soila mudeyathu..nee lam yana...mai......intha pathu yealuthura...anan vijay su.....nooodama iruka mudeyatha...ne yaen hospital poona...nee ainga poi iruka kudathu tp hospitla poi irukanum or gh kooduimba katupadu...paineka than poona hospital theareyama mare poiteeya...doctor keta kealu...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Guru Dasan127

அப்ப, இந்த பதிவு உனக்கு பிடிக்கலை, ஓகே.
அப்ப இந்தப் பதிவைப் படி.

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

இதுக்கு நேரடி கொலவெறி தாக்குதலே பரவாயில்லை தல....

இது நெம்ப ஓவரு... 12 பால் ஓவரு.. ஒரு ஓவருக்கு 12 சிக்ஸர் அடிச்சா “காவலன்” தாங்குவாரா?

tharuthalai said...

இவனுடைய படம் நல்ல படமா, மொக்கை படமா என்பதல்ல விவாதம். நல்ல படமாகவே இருந்தாலும் அது ஓடக்கூடாது. இவனுடைய சுமாரான படம் தோல்விப் படமாக இல்லாமல் போனதில் எனக்கு வருத்தமே.

அரசியல் வியாதிகள் சுயல நலத்தின் காரணமாக சோனியா காலை நக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனால் இவன் ஏன் அந்த உளறுவாயனைப் போய் பார்க்து ஆதரவு தெரிவித்தான்? ராஜபக்ஷே மனைவியுடன் விருந்து சாப்பிட்ட அசினைத்தான் சதை நாயகியாக போடவேண்டும் என்று அடம்பிடித்தான்?

இவனுடைய படம் வெளிவந்து, இணையத்தில்கூட எந்தவித புறக்கணிப்பும் இன்றி இருக்கும் நிலை, நம்முடைய சொரணையற்ற நிலையையே காட்டுகிறது.

-----------------------
தறுதலை
தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)

MANO நாஞ்சில் மனோ said...

ஐயா சாமி எனக்கும் ஒரு பெட் புக் பண்ணி வையுங்க....

வெங்கட் said...

// எல்லாரும் கிண்டல் பண்றாங்க, பரவாயில்ல,
இன்னிக்கு வெங்கட் விஜயை ரொம்பவே
கேவலப் படுத்திட்டாரு. //

அடி வாங்கற மாதிரி எதாவது
அசம்பாவிதம் நடந்தா..
கூட இன்னொரு ஆள் இருக்கட்டுமேன்னு
உங்க நல்ல எண்ணம்.. நீங்க லில்க்
குடுத்த அழகுல தெரியுது..!!

நல்லா கோத்து விடறாங்கடா சாமி..!!

சௌந்தர் said...

இனி மேல் யாரும் அவரை கிண்டல் பண்ணாதீங்க....

சௌந்தர் said...

நான் "சுறா" படத்தை எட்டு தடவை பார்த்தவன். என்ன ஆச்சரியமா பாக்கறீங்க?////

இது கின்னஸ் சாதனை ஆச்சே உடனே பதிவு செய்யுங்க

Philosophy Prabhakaran said...

பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

பரிதி நிலவன் said...

மார்ச்சுவரியில இருக்கிறவனெல்லாம் டாக்குடரு விஜய்யோட ஆரம்ப கால பிட்டு படத்தைப் பார்த்தவனாமே :)

அஞ்சா சிங்கம் said...

அது சரி .............
ஆளாளுக்கு அடிகிறீங்க ........
ஒரு மனுஷனுக்கு எவ்ளோதான் பாடி தாங்கும்ன்னு ஒரு கணக்கு வச்சிக்க வேண்டாம் .......................
ஒருத்தன போட்டு அடிக்கிறாங்க வலையுலகம் எல்லாம் சேர்ந்து ....................................